search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2nd Test"

    வங்காளதேசம் அணிக்கு எதிராக 2-வது டெஸ்ட் போட்டியில் ரோஸ் டெய்லரின் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி 432 ரன்கள் குவித்தது. #BANvsNZ #RossTaylor

    வெலிங்டன்:

    நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

    முதல் 2 நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது. வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 211 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 432 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

    முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். அவர் 212 பந்துகளில் 200 ரன் குவித்தார். அவரது 3-வது இரட்டை சதமாகும். நிக்கோலஸ் சதம் அடித்தார். அவர் 107 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 74 ரன்னும் எடுத்தனர்.

    221 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காள தேசம் அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 80 ரன்னில் 3 விக்கெட் இழந்தது. #BANvsNZ

    பல்லேகலேயில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 301 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி. #2ndTest #engvssl

    பல்லேகலே:

    இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பல்லேகலேயில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது. இலங்கை முதல் இன்னிங்சில் 336 ரன் குவித்தது. 46 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 324 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 4-வதுநாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணி மேலும் 22 ரன் எடுத்து 346 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இலங்கைக்கு 301 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 211 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #2ndTest #engvssl

    கொழும்பில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. #SouthAfrica #SriLanka
    கொழும்பு:

    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 338 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 124 ரன்களும் எடுத்தன. தென்ஆப்பிரிக்காவுக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காமல் 214 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்திருந்தது.



    இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 81 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. கருணாரத்னே 85 ரன்களும், மேத்யூஸ் 71 ரன்களும் விளாசினர்.

    தென்ஆப்பிரிக்கா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் 11 ஓவர்கள் பந்து வீசியும் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. தென்ஆப்பிரிக்க பவுலர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான பொல்லாக்கை (421 விக்கெட்) சமன் செய்திருக்கும் ஸ்டெயின் அந்த சாதனையை முறியடிக்க இன்னொரு தொடருக்கு காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

    முதல் இன்னிங்ஸ் முன்னிலையையும் சேர்த்து இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவுக்கு 490 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் ஹெராத், தில்ருவான் பெரேரா, அகிலா தனஞ்ஜெயா ஆகியோர் குடைச்சல் கொடுத்தனர். இலங்கை கேப்டன் லக்மல், பந்து வீச்சுக்கு இந்த மூன்று பேரை மட்டுமே இடைவிடாது பயன்படுத்தினார். அதற்கு பலனும் கிடைக்காமல் இல்லை.

    தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் 14 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மற்றொரு தொடக்க வீரர் டீன் எல்கர் 5 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். 6 ரன்னில் கிளன் போல்டு ஆன போதும், 23 ரன்களில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆன போதும், பந்து வீசிய பெரேரா நோ-பாலாக வீசியது தெரிய வந்ததால் அடுத்தடுத்து மறுவாழ்வு பெற்றார். ஆனாலும் இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத அவர் 37 ரன்களில் விரட்டப்பட்டார். அம்லா (6 ரன்), கேப்டன் பிளிஸ்சிஸ் (7 ரன்), விக்கெட் தடுப்பாளராக இறக்கப்பட்ட மகராஜ் (0) ஆகியோரும் இலங்கை பவுலர்கள் வீசிய சுழல் வலையில் சிக்கி சிதறினர்.

    3-வது நாள் ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 41 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களுடன் பரிதவித்துக் கொண்டு இருந்தது. டி புருன் (45 ரன், 97 பந்து), பவுமா (14 ரன்) களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் ஹெராத், தனஞ்ஜெயா தலா 2 விக்கெட்டுகளும், பெரேரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தென்ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இன்னும் 351 ரன்கள் தேவைப்படுகிறது. ஆனால் கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. ஆடுகளம் சுழலின் சொர்க்கமாக திகழும் நிலையில் இந்த டெஸ்டில் இலங்கை அணி வெற்றிக்கனியை பறிக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. 
    இலங்கை, தென்ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது. #SriLanka #SouthAfrica
    கொழும்பு:

    பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை 3-வது நாளுக்குள் சுருட்டிய இலங்கை அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று (காலை 10 மணி) தொடங்குகிறது. முந்தைய டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணியின் 17 விக்கெட்டுகள் சுழற்பந்து வீச்சில் தான் சரிந்தன. இந்த டெஸ்டிலும் பிற்பகுதியில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் ஹெராத், தில்ருவான் பெரேரா, சன்டகன் ஆகிய சுழல்தாக்குதலை சமாளிப்பதை பொறுத்தே தென்ஆப்பிரிக்க அணி பதிலடி கொடுக்குமா அல்லது சரண் அடையுமா? என்பது தெரியும்.

    ஹெராத் கூறுகையில், ‘உள்ளூரில் இந்த தொடரை வெல்வது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். தென்ஆப்பிரிக்க அணி உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கிறது. அவர்களை வீழ்த்தும் போது நம்பிக்கை அதிகரிக்கும். அதனால் இந்த ஆட்டம் எங்களுக்கு முக்கியமானது’ என்றார். தனிப்பட்ட முறையில் சில வீரர்கள் சாதனையின் விளிம்பில் இருக்கிறார்கள். தென்ஆப்பிரிக்க வீரர் அம்லா இன்னும் 3 ரன் எடுத்தால் 9 ஆயிரம் ரன்களையும், இலங்கையின் மேத்யூஸ் 8 ரன் எடுத்தால் 5 ஆயிரம் ரன்களையும் கடப்பார்கள். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஒரு விக்கெட் எடுத்தால், தென்ஆப்பிரிக்க பவுலர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவரான பொல்லாக்கின் (421 விக்கெட்) சாதனையை முறியடிப்பார்.இந்த டெஸ்ட் போட்டியின் ஒவ்வொரு நாளும் மழை குறுக்கிடுவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக 2-வது நாளில் மழை பெய்வதற்கு 80 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    ×