என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "3 people were arrested"
- போதை பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த பிரகாஷ், டார ராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு டவுன் பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடை செய்ய ப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 20) டார ராம் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த பான் மசாலா, ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 275 மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை போல் புளிய ம்பட்டி-சக்தி ரோடு பகுதியில் போதை பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் நஞ்சப்பன் என்ற முருகேசன் (37) என்பவரை புளியம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் வைத்திருந்த போதை பொருள்களை போலீசார் பறி முதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்
- வெடிபொருளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கூடலூர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா நாடுகாணி அருகே பொன்னூர் கோல்டு மைன்ஸ் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடமாடுவதாக பந்தலூர் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து வனச்சரகர் சஞ்சீவ் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.
இதையடுத்து கோல்ட் மைன்ஸ் வனப்பகுதியில் 3 பேர் நடமாடுவது தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடவும், தங்கத்துகள்களை தோண்டி சேகரிக்க வெடிபொருள் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா ஆகியோர் உத்தரவின் பேரில், தேவாலாவில் உள்ள வனச்சரகர் அலுவலகத்திற்கு பிடிபட்ட 3 பேரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் தேவாலா அட்டி பகுதியை சேர்ந்த யோகேந்திரன் (வயது 40), பொன்னுரை சேர்ந்த பரமேஸ்வரன் (42), கீழ் நாடுகாணியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (44) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து வெடிபொருளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, யோகேந்திரன், பரமேஸ்வரன், ஜெயச்சந்திரன் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை பந்தலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மது பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- மேலும் அவர்களிடம் இருந்து 33 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி கடம்பூர், மலையம்பாளையம், பெருந்துறை போலீசார் தங்கள் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 33 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- தோட்டத்தில் உள்ள பாக்கு மரங்களில் இருந்து பாக்குகள் திருட்டு போனது.
- ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, பாக்குகள் மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது.
ஊட்டி,
பந்தலூர் அருகே கொளப்பள்ளியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது தோட்டத்தில் உள்ள பாக்கு மரங்களில் இருந்து பாக்குகள் திருட்டு போனது. இதுகுறித்து சிவகுமார் சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், தினேஷ்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் நேற்று கொளப்பள்ளி பஜாரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, பாக்குகள் மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில் சிவகுமாரின் தோட்டத்தில் திருட்டுபோன 80 கிலோ பாக்குகள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து பாக்குகள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக கொளப்பள்ளி பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (வயது 43), யோகேஸ்வரன் (30), கிருஷ்ணமூர்த்தி (30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
பெரியகுளம் அருகே தெய்வேந்திரபுரம் பகுதியில் போலீசார்ரோந்துசென்றனர்.
அப்போது அங்கு மது விற்ற தங்கபாண்டி என்பவரை கைது செய்து 45 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கடமலைக்குண்டு போலீசார் மூலக்கடை பகுதியில் ரோந்து சென்றபோது மது விற்ற சதாசெல்வம் (வயது48), மலைச்சாமி (57) ஆகியோைர கைது செய்து அவர்களிடம் இருந்து 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- பெட்டிக்கடையில் குட்கா பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது
- 45 கிலோ குட்கா, ரூ. 2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை
குட்கா பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பெட்டிக்கடையில் குட்கா பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது குட்கா பதுக்கி விற்பனை செய்த கோவை இடையர்வீதியை சேர்ந்த ராஜூசிங் (வயது 30), செல்வபுரம் முத்துசாமி காலனியை சேர்ந்த நரேந்திரன்(35) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 45 கிலோ குட்கா, ரூ. 2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோன்று போத்தனூர் கணேசபுரம் விட்டல் நகரில் ஒரு மளிகைக்கடையில் குட்கா பதுக்கி விற்ற கருப்பசாமி என்பவரை போத்தனூர் போலீசார் கைது செய்து, 14 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்