search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "30 killed"

    இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற சாலை விபத்துக்களில் 30 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #SrilankaAccidents
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 14-ம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்நாட்டு அரசு உள்ளூர் விடுமுறை விட்டது.

    இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துக்களில் 30 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர். குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக சுமார் ஆயிரத்து 270 பேர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 34 ஆயிரம் வாகன ஓட்டுனர்கள் மீது சாலை விதிகளை மீறியதாக புகார் பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளனர்.

    இதேபோல், கொழும்பு தேசிய மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற பல்வேறுரு சாலை விபத்துக்களில் இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர் என்றும், சுமார் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். #SrilankaAccidents
    வடகிழக்கு சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பலியாகினர் என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. #Syria
    டமாஸ்கஸ்:

    வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப் படையினர் உதவி செய்தனர். இன்னும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.எஸ். குழுவினர் மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்காக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், சிரியா நாட்டின் வடபகுதியில் உள்ள அலெப்போ மாகாணத்தின் மன்பிஜ் பகுதியில் பயங்கரவாதிகள் இன்று வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பரிதாபமாக பலியாகினர் என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், படுகாயம் அடைந்த பலரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    வடக்கு சிரியாவில் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் குர்து போராளிகள் வசித்து வரும் பகுதி மன்பிஜ் என்பது குறிப்பிடத்தக்கது. #Syria
    ஆப்கானிஸ்தான் நாட்டின் படாக்‌ஷான் மாகாணத்தில் இன்று தங்கச் சுரங்கம் சரிந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். #goldmine #goldminecollapse #Afghanistangoldmine
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள படாக்‌ஷான் மாகாணத்துக்குட்பட்ட கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில் வசிக்கும் மக்கள் சுற்றுப்புற பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக நம்புகின்றனர்.

    இதனால், அரசின் உரிய அனுமதி பெறாமல் அவர்களே சொந்தமாக சுரங்கம் வெட்டி தங்கம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவ்வகையில், சுமார் 200 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட ஒரு சுரங்கத்துக்குள் சிலர் இன்று பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது, அந்த தங்கச் சுரங்கம் திடீரென்று சரிந்து விழுந்தது.

    இந்த விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் களமிறங்கிய உள்ளூர் மக்கள், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 30 பேரின் உடல்களை மீட்டனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக படாக்‌ஷான் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் நிக் முஹம்மது நசாரி தெரிவித்துள்ளார். #goldmine #goldminecollapse #Afghanistangoldmine
    சிரியா நாட்டில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். #Syria #IS
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ். குழுவினரும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். இவர்களை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    சிரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற அரசு படைகள் ஆகியவையும் போரில் இறங்கி உள்ளன. சிரியாவில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் குண்டுகளுக்கு இரையாகி உள்ளனர்.
     
    இந்நிலையில், ஈராக் எல்லை அருகே டெயிர் அல் சோர் மாகாணத்தில் வசித்து வந்தவர்கள் மீது அமெரிக்க கூட்டுப் படையினர் இன்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 30 பேர் பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து அங்கு மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #Syria #IS
    ×