search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 Killed"

    சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். #NaxalAttack #BJP #BHimaMandavi
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஷியாம்கிரி பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்கள் பா.ஜ.க.வினர் சென்ற கார்களை நோக்கி சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். எம் எல் ஏவுடன் சென்ற பாதுகாப்பு படையினர் நக்சலைட்கலை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.



    இந்த தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து, சம்பவ இடத்துக்கு கூடுதலாக பாதுகாப்பு படைவீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
    #NaxalAttack #BJP #BHimaMandavi
    வங்காளதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 17 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #DhakaFireAccident
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டின் தலைநகரமான டாக்காவில் அமைந்துள்ளது பனானி பகுதி. இங்குள்ள 22 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ மற்ற மாடிகளுக்கும் பரவியது. 

    தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிலர் மாடிகளில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 17 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மீட்புப் பணியில் அந்நாட்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. 35 பேரை பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்புப்  பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    கடந்த மாதம் டாக்காவில் உள்ள ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 70 பேர் பலியானது நினைவிருக்கலாம். #DhakaFireAccident
    தென்ஆப்பிரிக்காவில் மூடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்ற வெடிவிபத்தில் 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #CoalMineBlast
    ஜோகனஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்காவின் முமாலங்கா மாகாணத்தின் கிழக்கு பகுதியில் செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது.

    இந்நிலையில், அந்த நிலக்கரி சுரங்கத்தில் உள்ள செப்பு கம்பிகளை திருடுவதற்கு 20 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் நுழைந்தது.

    அப்போது திடீரென கியாஸ் வெடித்தது. இதில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் 5 பேர் சடலங்களை மீட்டனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.#CoalMineBlast
    கொலம்பியா தலைநகரான பொகோடாவில் உள்ள போலீஸ் அகாடமி அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். #ColumbiaCarBomb
    போகோடா:

    மத்திய அமெரிக்க கண்ட நாடான கொலம்பியாவின் தலைநகரம் போகோடா. இங்குள்ள போலீஸ் அகாடமி அருகே இன்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கார் வெடிகுண்டு தாக்குதலில் அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் கடும் சேதமடைந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். #ColumbiaCarBomb
    வங்காளதேசம் நாட்டு பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே வெடித்த மோதலில் 5 பேர் உயிரிழந்தனர். #5killed #Bangladesh #Bangladeshelection #Bangladeshelectionclash #AwamiLeague #BNPsupporters
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டு பாராளுமன்ற தேர்தல் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.  பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 1,848 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  

    10.41 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க 40,183 மையங்களில் நடைபெறும் இன்றைய வாக்குப்பதிவில் பெண்கள் உள்பட பலர் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இன்று காலை பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா சிட்டி கல்லூரியில் முதல்நபராக நின்று வாக்களித்தார்.


    தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்ததால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க ராணுவ வீரர்கள், துணை ராணுவ படையினர் உள்ளிட்ட 6 லட்சத்திற்கும் கூடுதலான வீரர்கள் நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் ஊழல் வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.) ஆதரவாளர்களிடையே சில இடங்களில் வன்முறையும் மோதலும் ஏற்பட்டது.

    இந்த மோதல்களில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். வன்முறை வெடித்த பகுதிகளுக்கு கூடுதலாக போலீசாரும் ராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. #5killed #Bangladesh #Bangladeshelection #Bangladeshelectionclash #AwamiLeague #BNPsupporters
    சீனாவின் புஜியான் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.#ChinaCoalmineAccident
    பெய்ஜிங்:

    சீனாவின் புஜியான் மாநிலம் யாங்டாங் மாவட்டத்தில் உள்ள லோங்யான் பகுதியில் நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் நேற்று 9 தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென அந்த சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் அங்கு பணிபுரிந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.

    இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். படுகாயம் அடைந்த ஒருவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். மண் குவியலில் சிக்கியுள்ள மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    இதுதொடர்பாக சுரங்க உரிமையாளரிடம் விசாரணை நடந்து வருகிறது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். #ChinaCoalmineAccident
    சென்னை விமான நிலயத்தில் இருந்து சென்ற கார் ரேணிகுண்டா அருகே லாரி மீது நேருக்குநேர் மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்த சிலர் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் தங்களது உறவினரை அழைத்து செல்வதற்காக காரில் மீனம்பாக்கத்துக்கு வந்திருந்தனர்.

    வெளிநாட்டில் இருந்து வந்தவரை ஏற்றிகொண்டு கடப்பா மாவட்டம் நோக்கி கார் திரும்பி சென்று கொண்டிருந்தது.

    ஆந்திராவின் சித்தூர் மாவட்டம், ரேணிகுண்டா மண்டலத்துக்குட்பட்ட மாமண்டூரு என்ற இடத்தில் எதிர்திசையில் இருந்து வந்த லாரி இன்று அதிகாலை அந்த காரின்மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கங்காதரம்(35), அவரது மனைவி விஜயாம்மா(30), சகோதரர் பிரசன்னா(32), மைத்துனி மரியம்மா(25) மற்றும் ஒன்றரை வயது குழந்தை என 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    அவர்களின் பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Fivekilled #carlorrycollide
    சீனாவில் சாலையைக் கடந்த மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 5 மாணவர்கள் பலியாகினர். #ChinaAccident
    பீஜிங்:

    சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியோனிங் மாகாணத்தின் ஹூலுடாவ் நகரில் உள்ள துவக்கப்பள்ளிக்கு இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் வந்துகொண்டிருந்தனர். அப்போது, எதிர்முனையில் இருந்து வந்த மாணவர்கள், பள்ளிக்கு வருவதற்காக சாலையை கடந்து வந்தனர்.

    மாணவர்கள் வரிசையாக சாலையை கடந்தபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த கார், மாணவர்கள்  மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 18 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.



    தவறான பாதையில் கார் வந்ததால் மாணவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீனாவில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதம் மத்திய சீனாவில் பொதுமக்கள் மீது சொகுசு கார் மோதியதில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #ChinaAccident
    அசாம் மாநிலத்தில் உல்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #ULFAAttack
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள கெரோனி பகுதியில் தோலா - சாடியா பாலம் அமைந்துள்ளது. அந்த பாலத்தின் அருகில் இன்று இரவு 8.15 மணிக்கு உல்பா பயங்கரவாதிகள் திடீரென திரண்டனர்.

    அங்கிருந்த ஒரு வீட்டில் உள்ளவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும், அருகிலுள்ள வீட்டை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் பலியாகினர்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை கைப்பற்றினர்.

    உல்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலியானதை அறிந்த முதல் மந்திரி சர்பானந்த சோனாவால் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். #ULFAAttack
    ஆப்கானிஸ்தானில் போலீசார் சென்ற பேருந்து மீது தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் அதிகாரிகள் உள்பட 5 போலீசார் உடல் சிதறி பலியாகினர். #Afghanistan #SuicideAttack #Taliban
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் வர்தாக் மாகாணத்தில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இன்று காலை அந்த குடியிருப்பில் இருந்து புறப்பட்ட பேருந்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் ஏறினர்.

    அந்த பேருந்து குடிடிருப்பு வாசல் அருகே வந்தது. அப்போது அங்கு வந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிமருந்துகள் நிரம்பிய கார் மூலம் பேருந்து மீது மோதி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 2 அதிகாரிகள், 3 ஊழியர்கள் என மொத்தம் 5 போலீசார் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.



    தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் சில்ர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என தெரிவித்தனர்.

    போலீசார் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. #Afghanistan #SuicideAttack #Taliban
    கர்நாடாகாவின் கார்வார் பகுதியில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் தாய், மகள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். #Accident
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டத்தின் ஒன்னாவர் தாலுகா கர்கிமடம் வழியாக எடப்பள்ளி-பன்வேல் தேசிய நெடுஞ்சாலை 66 செல்கிறது.

    இந்தப் பகுதியில் நேற்று மாலை பயணிகளை ஏற்றிக் கொண்டு குமட்டாவில் இருந்து ஒன்னாவர் நோக்கி ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஒரு லாரி வேன் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த விபத்தில் ஒரு சிறுமி, 2 பெண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி இறந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த ஒன்னாவர் போலீசார் அங்கு சென்று விபத்தில் பலியானோர் உடல்களை கைப்பற்றினர். அவர்கள் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
    சோமாலியா தலைநகர் மொகடிஷு அருகில் உள்ள மார்க்கெட்டில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகினர். #SomaliaMarket #Suicidebomb
    மொகடிஷு:

    அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் மொகடிஷு நகரில் உள்ள பிரபல ஓட்டல் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், மொகடிஷுவில் உள்ள வான் லாயென் நகரில் உள்ள மார்க்கெட்டில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். 

    இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் பலியாகினர். மேலும், 10-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #SomaliaMarket #Suicidecarbomb 
    ×