search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "583 million"

    பேஸ்புக் நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 58 கோடி போலி முகநூல் கணக்குகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. #Facebook #fakeaccounts
    கலிபோர்னியா:

    சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ எனப்படும் முகநூலை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே, முகநூல் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவரங்கள் அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து, பேஸ்புக் வலைத்தளத்தில் வன்முறைகளை தூண்டும், ஆபாச படங்கள் மற்றும் பயங்கரவாத கருத்துகளை வெளியிடும் முகநூல் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும், போலி முகநூல் கணக்குகள் முடக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், கடந்த 3 மாதங்களில் மட்டும் 58.3 கோடி போலி முகநூல் கணக்குகள் மூடப்பட்டதாக தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 3.4 மில்லியன் தவறான புகைப்படங்கள் நீக்கப்பட்டன. #Facebook #fakeaccounts
    ×