search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "69 சதவீத இட ஒதுக்கீடு"

    தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. #SupremeCourt #69PercentQuota
    புதுடெல்லி:

    தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அவ்வப்போது இடைக்கால உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.



    இதற்கிடையே தமிழகத்தில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையால் தங்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை எனக்கூறி இரண்டு மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பு கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.

    இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மூல வழக்கு நவம்பர் மாதம் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #SupremeCourt #69PercentQuota

    ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்திவரும் இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் இன்று மாலை மீண்டும் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. #Indonesiaearthquake
    ஜகார்த்தா:

    பூகம்பங்களை அடிக்கடி சந்திக்கும் பூமியின் நெருப்புக் கோளம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் உள்ள லோம்போக் தீவில் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 460 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதற்கிடையே, இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தாவில் இருந்து சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீவின் கிழக்கு பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பெலண்டிங் நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாக பதிவானது.

    இந்நிலையில், இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் இன்று மாலை மீண்டும் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. 

    இந்தோனேசியாவின் லம்போக் நகரில் தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #Indonesiaearthquake #Lombokislandearthquake
    தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் கடைபிடிக்கப்படும் 69% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் 69 % இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2012 முதல் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் பல்வேறு இடைக்கால உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டது. 

    இதற்கிடையே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு 50% மேல் இருக்கக் கூடாது என கடந்த 1992-ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுப் பிரிவு மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

    எனவே, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 69% இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.  தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2018-19 கல்வியாண்டில் 50% சதவீத இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சில மாணவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். அப்துல் நஜீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது இந்த வழக்கை 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட பிரதான வழக்குடன் இணைக்கலாமே என நீதிமன்ற அமர்வு பரிந்துரை செய்தது. 

    இதனையடுத்து இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் “பொதுப்பிரிவினருக்கு கூடுதல் இடம் ஒதுக்க கோருவதை ஏற்க முடியாது. ஒரு கல்லூரியில் 100 இடங்கள் தான் இருக்கிறது என்றால் நாங்கள் எப்படி கூடுதல் இடம் ஒதுக்க கூற முடியும்?” என கூறி மேற்கண்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். 
    ×