என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 71 percent
நீங்கள் தேடியது "71 percent"
மிசோரம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. #MizoramAssemblyElections
ஐஸ்வால்:
மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது.
40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
கிராமப்புறம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலையில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது. அதன்பின்னர் வாக்காளர்கள் வருகை படிப்படியாக அதிகரித்தது. தலைநகர் ஐஸ்வால் உள்ளிட்ட இடங்களில் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.
மிசோரம் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சி.எல்.ருவாலா, ஐஸ்வால் தெற்கு-2 வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னாள் முதல் மந்திரியும் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா காலை 7 மணிக்கே ஐஸ்வால் வடக்கு-2 தொகுதிக்கு உட்பட்ட ராம்லன் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார்.
இந்நிலையில், மாலை 5 மணியுடன் அங்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இன்றைய தேர்தலில் சுமார் 71 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் அதிகாரி ஆஷிஷ் குந்த்ரா தெரிவித்துள்ளார். #MizoramAssemblyElections
×

X