search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "9 killed"

    சிலியில் சங்கிலி தொடர் போல நிகழ்ந்த சாலை விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். #Chile #RoadCrash
    சாண்டியாகோ:

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் வால்டிவியா மாகாணத்தின் தலைநகர் வால்டிவியா மற்றும் மாபில் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது.

    இந்த காரில் 10 மாத பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் இருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் ஒரு லாரி மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி எதிர் திசைக்கு சென்ற லாரி அந்த வழியாக வந்த வேன் மீது மோதியது.

    சங்கிலி தொடர் போல நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.  #Chile #RoadCrash
    சீனாவில் மக்கள் கூட்டத்தில் காரை மோதச் செய்ததுடன் கத்தியால் குத்தி 9 பேரை கொன்ற கொடூர குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். #ChinaCarAttack
    பீஜீங்:

    சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் நேற்று ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

    அதைத்தொடர்ந்து, காரில் இருந்து இறங்கிய ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது கத்தியால் சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தினார்.

    இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 46 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அந்த பகுதியில் இருந்த போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் யாங் ஜான்யுன் (54) என்றும், பல்வேறு குற்ற வழக்குகளில் பலமுறை சிறை சென்ற குற்றவாளி என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChinaCarAttack
    மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத்தில் தண்ணீர் லாரியும், பயணிகள் ஆட்டோவும் மோதிய விபத்தில் 9 பேர் உடல் நசுங்கி பலியாகினர். #Accident
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் உள்ள கியோரய் தண்டா கிராமத்தில் பயணிகள் ஆட்டோ ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் 10க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    முன்னால் சென்ற வாகனத்தை ஆட்டோ முந்த முயன்றது. அப்போது கட்ட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, எதிரில் வந்த தண்ணீர் லாரி மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
    பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு ரோடு பகுதியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர். #Accident
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் இன்று அதிகாலை சென்னையை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

    அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புக் கட்டையை மீறி எதிரே வந்த கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை, பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். #Accident
    உத்தர பிரதேசம் மாநிலத்தில் இடியுடன் பெய்து வரும் பலத்த மழைக்கு 9 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #UP #Thunderstorm
    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், உபியின் மேற்கு பகுதியில் உள்ள ஆக்ரா, பிரோசாபாத், அலிகார், மதுரா மற்றும் இடாவா நகரங்களில் பெய்த பலத்த மழைக்கு 9 பேர் பலியாகினர்.



    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உ.பி.யின் பல்வேறு நகரங்களில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மதுராவில் இடி தாக்கியதில் 3 பேரும், ஆக்ராவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் ஒருவரும், இடாவா நகரில் 4 பேர் உள்பட மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

    முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், மழையில் சிக்கிய மக்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #UP #Thunderstorm
    ×