search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "9 PEOPLE ARRESTED"

    • திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றது.
    • வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    போலீசார் சோதனையில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிவகணேஷ் (21), சையத் இப்ராஹிம் (26), ரேணுகா (29), மணி (21), தனபாலன் (20), வினோத் பாண்டியன் (23), ரதின் (20), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் (19), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (31) ஆகிய 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும், பகலில் மரவள்ளி சிப்ஸ் விற்கும் தள்ளுவண்டி கடையும் நடத்தி வந்தார்.
    • பின்னர் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    சூலூர்,

    கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி அடுத்த சின்னக்குயில் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்ப டுவதாக கோவை மாவட்ட சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

    தகவலின் பேரில் சிறப்பு படையினர் பாப்பம்பட்டி அடுத்த திருமுருகன் நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனை சோதனை செய்தனர்.

    அங்கு மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க முயன்றனர். ஆனால் அங்கிருந்த 4 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

    போலீசார் துரத்தி சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில், கோவை குரும்பபாளையத்தை சேர்ந்த சிவக்குமார்(39), சவுரிபாளையத்தை சேர்ந்த சுதாகரன் (42), இருகூர் பூங்கா நகரை சேர்ந்த செல்வகுமார்(45), செலக்கரைசலை சேர்ந்த குருநாதன் (49) என்பதும், விற்பனைக்காக அங்கு குட்காவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1.5 டன் எடையுள்ள குட்கா, கார், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    இதில் கைதான செல்வகுமார் இருகூரில் காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும், பகலில் மரவள்ளி சிப்ஸ் விற்கும் தள்ளுவண்டி கடையும் நடத்தி வந்தார். இவரை ஆசை வார்த்தை கூறி குட்கா விற்பனையில் ஈடுபடுத்தி உள்ளனர். இவர் கைது செய்யப்பட்டதை அறிந்ததும், அவரது மனைவி தனது மகனுடன் போலீஸ் நிலையத்தில் வந்து அழுதார்.

    துடியலூர் போலீசாருக்கு வெள்ளக்கிணறு குளம் அருகே சில கல்லூரி மாணவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பதாக ரகசிய தகவல் வந்தது. போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்ற கல்லூரி மாணவர்கள் கோட்டையாம்பாளை யத்தை சேர்ந்த ரவிந்தரன்(21), கீரநத்தத்தை சேர்ந்த நந்தகுமார் (22), சரவணம்பட்டியை சேர்ந்த சதீஸ்வரன் (19), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த அக்‌ஷய்குமார் (22), கோவில்பாளையத்தை சேர்ந்த தினேஸ்வரன் (19) ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கல்லூரி மாணவர்களுக்கு உத்திரபிரதேசத்தில் இருந்து கஞ்சாவை சப்ளை செய்யும் முகேஷ் பட்டேல் (23) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.  

    • சட்ட விரோதமாக மது விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டார்
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்

    கரூர்

    கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மா, சப் இன்ஸ்பெக்டர் அழகுராம், சட்டம் -ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர், உதயகுமார் மற்றும் போலீசார், கரூர் டவுன், வாங்கல், வேலாயுதம் பாளையம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, அப்பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததாக ராமசாமி, சிதம்பரம், செந்தில்குமார், ராஜ சேகர், தமிழரசன், ரமேஷ், அஜித் குமார், ரவி, ஜோதிமுருகன், ஆகிய 9 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிட மிருந்து, 158 மதுபாட்டில்களை போலீசார் பறி முதல் செய்தனர்.

    ×