search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "94.5 சதவீத தேர்ச்சி"

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஆண்டு 94.5 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #SSLCResult #TNResult
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை நடந்தது. இந்த தேர்வை 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்கள் 36 ஆயிரத்து 649 பேரும் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு இணையதளங்கள் மூலம் வெளியிடப்படுகிறது.



    இதையொட்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து தேர்ச்சி விவரங்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி விகிதமானது கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் அதிகம். மாணவிகள் 96.4 சதவீதமும், மாணவர்கள் 92.5 சதவீதம் பேரும்  தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5584 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் 98.5 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் (98.38 சதவீதம்) இரண்டாம் இடத்தையும்,  விருதுநகர் மாவட்டம் (98.26 சதவீதம்) மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். #SSLCResult #TNResult
    ×