என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "96"

    பிரேம் குமார் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 96 படத்தின் தெலுங்கு பதிப்பு விரைவில் உருவாகவிருக்கும் நிலையில், அதுகுறித்த பரவிய வதந்திக்கு பிரேம் குமார் விளக்கமளித்துள்ளார். #96TheMovie #96TeluguRemake
    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படம் 96. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ‌ஷர்வானந்த்தும் நடிக்கிறார்கள்.

    பிரேம் குமாரே தெலுங்கிலும் இந்தப் படத்தை இயக்குகிறார். 96 படத்தில் கதை 22 ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்து கதை பயணித்ததால் அதற்கேற்ப நடிகர்களை தேர்வு செய்து இருந்தார்கள். விஜய் சேதுபதி, திரிஷாவின் சிறு வயது கதாபாத்திரங்களில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கவுரி கி‌ஷன் ஆகியோர் நடித்து இருந்தனர்.



    ஆனால் தெலுங்கு பதிப்பில் கதையின் பிளாஷ்பேக் 2009-ஆம் ஆண்டுடன் நின்றுவிட உள்ளதாகவும், அதாவது பள்ளிக்காதலுக்குப் பதிலாக கல்லூரி காதலை படமாக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன. எனவே ‌ஷர்வானந்த், சமந்தா இருவரும் தங்கள் இளமைத் தோற்ற கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர் என்றும் கூறப்பட்டது.

    இந்த செய்திக்கு பிரேம் குமார் விளக்கம் அளித்துள்ளார். ‘96 தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவுக்காக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தமிழில் இருந்த பள்ளிக்காதல் தான்’ என்று கூறி உள்ளார். #96TheMovie #96TeluguRemake #PremKumar #Sharwanand #Samantha

    சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘பரியேறும் பெருமாள்’, ‘96’ சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டது. அமைச்சர் கடம்பூர் ராஜு இதில் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருது வழங்கினார் #CIFF #ChennaiInternationalFilmFestival
    சென்னையில் 16-வது சர்வதேச திரைப்படவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது.

    இந்தோசினி அப்ரிசியே‌ஷன் பவுண்டே‌ஷன் சார்பில் கடந்த 8 நாட்கள் நடந்த இந்த திரைப்பட விழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 150-க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

    சென்னையில் தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, தாகூர் திரைப்பட மையம், ரஷ்யக் கலாச்சார மையம் ஆகிய 6 அரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. அமைச்சர் கடம்பூர்ராஜூ இதில் கலந்து கொண்டு சிறந்த படங்களுக்கு பரிசுகளை அளித்தார்.

    சிறந்த தமிழ்ப் படங்கள் வரிசையில் ‘96’, ‘அபியும் அனுவும்’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஜீனியஸ்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘இரும்புத்திரை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மெர்குரி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘ராட்சசன்’, ‘வட சென்னை’, ‘வேலைக்காரன்’ ஆகிய 12 படங்கள் திரையிடப்பட்டன. சிறப்புத் திரையிடலாக ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரையிடப்பட்டது.



    ‘பரியேறும் பெருமாள்’, ‘96’ ஆகியவை சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப்பட்டன. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்துக்கு ரூ.1 லட்சமும், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ரூ.2 லட்சமும் பரிசு அளிக்கப்பட்டது.

    விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படமும் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. அந்த படத்தின் இயக்குனர் பிரேம்குமாருக்கும், தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.

    ‘வட சென்னை’ படத்தின் இயக்கத்துக்காவும், ‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் தயாரிப்புக்காகவும் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நடுவர் குழுவின் சிறப்புப் பரிசு அளிக்கப்பட்டது. அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.

    இது தவிர சிறந்த மாணவர் பட விருது வரிசையில் ஏஞ்சலினா படமும், ஈஸ்ட்மேன் கிராமம் படமும் தேர்வு செய்யப்பட்டன. ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வரும் ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான்’ விருது இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு வழங்கப்பட்டது. #CIFF #ChennaiInternationalFilmFestival #PariyerumPerumal #96The Movie

    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ’96’ படத்தின் கன்னட ரீமேக்கில் திரிஷா வேடத்தில் பாவனா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #96TheMovie #Trisha #Bhavana
    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ’96’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. வெளியாகி ஒரு மாதத்தில் இந்தப் படத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய போதும் திரையரங்கில் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. இதனால் இந்தப் படத்தின் ரீமேக் உரிமைகளுக்கு நல்ல போட்டி இருந்தது.

    படத்தை தெலுங்கி ரீமேக் செய்யும் பணிகள் துவங்கி நடந்து வரும் நிலையில், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது.



    கன்னட இயக்குநர் பிரீதம் குபியும், நடிகர் கணேஷும் இணைந்து கன்னடத்தில் இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். ‘99’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் நடிக்க பாவனா ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் கணேஷ் நடிக்கிறார். அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். #96TheMovie #VijaySethupathi #Trisha #Bhavana

    96 படத்தில் திரிஷாவின் இளமை தோற்றத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த கவுரி கிஷன் அடுத்ததாக மலையாள திரையுலகில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். #96TheMovie #GouriKishan
    96 திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரமாக திரிஷா ஏற்படுத்திய தாக்கத்துக்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்தியவர் ‘குட்டி திரிஷா’வாக நடித்த கவுரி கிஷான். அந்தப் படத்தில் நடித்த அத்தனை கேரக்டர்களுமே அவர்களது சிறிய வயதில் அனைவரையும் ஈர்த்தனர்.

    அந்த வகையில் குட்டி திரிஷாவாக நடித்த கவுரி கிஷானுக்கு அடுத்த திரைப்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் அடுத்ததாக மலையாளத்தில் நாயகியாக அறிமுகமாகவிருக்கிறார்.



    பிரின்ஸ் ஜாய் இயக்கும் ‘அனுகிரகீதன் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் சன்னி வெய்னுக்கு ஜோடியாக கவுரி நடிக்கிறார். இது பற்றி அவர் கூறும்போது ‘96 படத்துக்கு கிடைத்த வரவேற்பால் கதைகளை கவனமாக தேர்வு செய்கிறேன். இந்த படமும் 96 படம் போல நமது வாழ்க்கைக்கு நெருக்கமான படமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார். #96TheMovie #GouriKishan #AnugraheethanAntony

    பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற 96 படத்தின் தெலுங்கு பதிப்பில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #96TheMovie #AlluArjun
    சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    தெலுங்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நானி நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அல்லு அர்ஜுனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுனும் 96 படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறாராம். எனவே 96 படத்தின் ரீமேக் குறித்த அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



    இதற்கிடையே 96 படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #96TheMovie #AlluArjun

    96 படத்தை தெலுங்கில் மறுஉருவாக்கம் செய்வதற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில், தான் அதில் நடிக்கவில்லை என்றும், ரீமேக் வேண்டாம் என்றும் சமந்தா கூறியிருக்கிறார். #96TheMovie #Samantha
    சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    தெலுங்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நானி நடிக்கிறார். திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் ட்விட்டர் பக்கத்தில் கேட்டதற்கு, பதில் அளித்த சமந்தா, கண்டிப்பாக மறுஉருவாக்கம் செய்யக் கூடாது என்று கூறியுள்ளார். 

    முன்னதாக 96 படத்தை பார்த்த சமந்தா, திரிஷாவை குறிப்பிட்டு “என்ன ஓர் அற்புதமான நடிப்பு. ரொம்பவே வித்தியாசமான கதாபாத்திரமான இதில் அற்புதமான தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திரிஷா வேடத்தில் நடிக்க வேறு நடிகையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. #96TheMovie #Trisha #Samantha

    பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்துள்ள திரிஷாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், நடிகை சமந்தாவும் திரிஷாவை பாராட்டியிருக்கிறார். #96TheMovie #Trisha #Samantha
    விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் ரசிகர்களின் வரவேற்போடு ஓடிக்கொண்டிருக்கிறது.

    தெலுங்கில் நானி நடிப்பில் ரீமேக்காக இருக்கும் படத்தில் திரிஷா வேடத்தில் நடிக்க சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்நிலையில் 96 படத்தை பார்த்த சமந்தா, திரிஷாவை பாராட்டி இருக்கிறார். அவர் பகிர்ந்து இருக்கும் ட்விட்டர் பதிவில் திரிஷாவை குறிப்பிட்டு சமந்தா கூறியிருப்பதாவது,

    “96 படம் பார்த்தேன். என்ன ஓர் அற்புதமான நடிப்பு. நீங்கள் இதில் எப்படி நடித்துள்ளீர்கள் என என்னால் எப்படி துவங்கி விவரிப்பது எனத் தெரியவில்லை. ரொம்பவே வித்தியாசமான கதாபாத்திரமான இதில் அற்புதமான தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். #96TheMovie #Trisha #Samantha

    விஜய் சேதுபதியின் 96 மற்றும் விஷ்ணு விஷாலின் ராட்சசன் படங்களை பார்த்த இயக்குநர் ஷங்கர் படத்தையும், படக்குழுவையும் பாராட்டியுள்ளார். #96TheMovie #Ratsasan
    பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த 4-ந் தேதி வெளியாகிய 96 படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பள்ளிக் காதலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். 

    அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் உள்ள பலரும் படத்தையும், படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர். 

    அதேபோல் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் 5-ந் தேதி வெளியான சைக்கோ த்ரில்லர் படமாக ராட்சசன் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், இரு படங்களின் காட்சிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
    இந்த நிலையில், படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் 96, ராட்சசன் படக்குழுவை பாராட்டியுள்ளார். இதுகுறித்து ஷங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

    `96, ஏதாவது ஒரு காட்சியில் தனிப்பட்ட முறையில் நம்மை தொடர்புபடுத்துகிறது. அதுவே இந்த படத்தின் அழகு. விஜய் சேதுபதி அற்புதமான நடிப்பு. திரிஷாவை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. பிரேம்குமாருக்கு வாழ்த்துக்கள். ராட்சசன், மற்றொரு சுவாரஸ்யமான படம். ரசிகர்கள் இயக்குநர் ராம்குமாருக்கு கைதட்டி வாழ்த்து தெரிவிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அது அவருக்கே உரியதாகும்' இவ்வாறு கூறியுள்ளார். #96TheMovie #Ratsasan

    96 திரைப்படத்தில் ஜானு கதாபாத்திரத்தில் நடித்த கௌரி, நானும் ராம் கதாபாத்திரத்தில் நடித்த ஆதித்தாவும் காதலிக்க வில்லை என்று கூறியிருக்கிறார். #96Movie #Gouri
    விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘96’. பிரேம் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா கதாநாயகியாகா நடித்திருக்கிறார். மேலும் இதில் விஜய் சேதுபதி, திரிஷாவின் பள்ளி பருவ காட்சியில் ஆதித்யா பாஸ்கரும், கௌரியும் நடித்திருந்தார்கள்.

    ஆதித்யாவும் கௌரியும் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களை பெருமளவு கவர்ந்திருக்கிறது. இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. இதையடுத்து இவர்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் பரவியது.



    இதையறிந்த கௌரி, நாங்கள் இருவரும் காதலிக்க வில்லை. 96 திரைப்படத்தில் ராம் மற்றும் ஜானு கதாபாத்திரத்தில் காதலர்களாக நடித்தோம். திரைக்குப் பின்னால் இல்லை. எங்களைப் பற்றி தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்’ என்று கூறியிருக்கிறார்.
    விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் 96 படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தை பார்த்த இயக்குநர் சேரன் ஆட்டோகிராப் படத்தை 96 படத்துடன் ஒப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார். #96TheMovie
    பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய 96 படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக 90-களில் பள்ளிப் படிப்பை முடித்த இளைஞர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். 

    அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் உள்ள பலரும் படத்தையும், படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும், நடிகருமான சேரனும் 96 படக்குழுவை பாராட்டி உள்ளார்.

    முன்னதாக 96 படத்தையும், சேரனின் ஆட்ரோகிராப் படத்தையும் ஒப்பிட்டு சிலர் பேசினர். அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இயக்குநர் சேரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    `தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் 96, ஆட்டோகிராப்பையும், 96யும் சம்பந்தப்படுத்த வேண்டாம். அது கடந்து வந்த காதல்களின் நினைவுகள். இது காதலை தொலைத்த இருவரும் வாழ்க்கையை கடந்த நிலையில் சந்திக்கும்போது பரிமாறிக்கொள்ளும் உணர்வுகள்.

    விஜய் சேதுபதியும், திரிஷாவும் மெல்லிய உணர்வுகளை அழகாக பதிவுசெய்து இவ்வருடத்தின் முக்கிய விருதுகளுக்கு தகுதியுடையவர்களாகிறார்கள். இருவரை மட்டுமே வைத்து காட்சிகளை அழகாக கோர்த்த இயக்குனர் மிகச்சிறந்த இயக்குனராக மிளிர்வார். இதுபோல சினிமாக்களால் தமிழ்சினிமா தலை நிமிரும். #96TheMovie #Cheran

    96 படத்தின் வெற்றி விழாவில் கலந்துக் கொண்ட விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனுக்கு என்ன நடந்தது என்று தெரியும் என்று கூறியிருக்கிறார். #VijaySethupathi #96Movie #Sivakarthikeyan
    விஜய்சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ படம் சமீபத்தில் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ரிலீசின் போது தயாரிப்பாளர் நந்த கோபால்-நடிகர் விஷால் இடையே பைனான்ஸ் பிரச்சினை ஏற்பட்டது.

    இதையடுத்து தயாரிப்பாளர் தர வேண்டிய கடனை தான் தருவதாக விஜய்சேதுபதி தெரிவித்தார். இதையடுத்து பைனான்ஸ் வலிகள் விஜய்சேதுபதிக்கு வேண்டாம். அந்த தொகைக்கான பொறுப்பை நானே ஏற்கிறேன் என விஷால் தெரிவித்தார்.

    இந்தநிலையில் ‘96’ படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது:-

    தயாரிப்பாளர் நந்தகோபால் பட்ட கஷ்டத்தை நேரில் பார்த்தேன். என் வாழ்க்கையில் இது போன்ற பிரச்சினைகள் வரும் போது அடுத்த கட்டத்திற்கு போகப் போகிறேன் என்பதை உறுதியாக நம்புவேன்.

    என் வாழ்க்கையில் இது போன்று ஒவ்வொரு முறையும் கடந்து வந்திருக்கிறேன். முக்கியமான வி‌ஷயம் எனக்கும், படக் குழுவிற்கும் இது நடப்பது போன்று சினிமாவில் காலங்காலமாக நடைபெற்று வருகிறது.



    நல்ல படம் வந்து சேரணும் என்று வேலை செய்கிறோம். அது சரியாக வெளியாகி, போட்ட பணம் வந்து சேர்ந்தால் போதும். ஆனால், அதற்குள் நிறைய பிரச்சினைகள் உள்ளன. “விஷால் நல்ல மனு‌ஷன். அவருடைய சூழலில் என்னவோ, அவர் எவ்வளவு காசுக்கு வட்டி கட்றாரோ, அவருக்கு என்ன நடந்ததோ என்று யாருக்குத் தெரியும்.

    நமக்கு எப்போதுமே மற்றவர்கள் சூழல் வெளியே பார்த்தது மட்டுமே தெரியும், உள்ளே என்னவென்று தெரியாது. ஒரு துளி அவர் மீது வருத்தமும் இல்லை. இது தவறாகவே தெரியாத போது எப்படி அவர் மீது வருத்தம் ஏற்படும். இதற்கு முன் அவர் எவ்வளவு படங்கள் விட்டுக் கொடுத்தார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்”

    சீமராஜா திரைப்படத்திற்கு முன் சிவகார்த்திகேயனுக்கு என்ன நடந்தது என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். அதுக்கு முன் விமலுக்கு என்ன நடந்தது என்பது தெரியும். பைனான்சியர்கள் மீதும் குறை சொல்ல முடியாது, அவர்களுக்கு அந்த நேரத்தை விட்டால் வேறு நேரம் கிடையாது.

    பணம் தான் அங்கு அடையாளம். எங்களுக்கு எப்படி படம் இல்லாமல் மரியாதையில்லையோ, அதே போல் அவர்களுக்கு பணமில்லாமல் மரியாதை கிடையாது”.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் வெற்றி கொண்டாடப்படுகிறது. #PariyerumPerumal #96Movie
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான திரைப்படம் 96. ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, பக்ஸ், ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம்  வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

    இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. 

    இதில் விஜய் சேதுபதி பேசும்போது, ‘தமிழ் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. பரியேறும் பெருமாளின் வெற்றி கொண்டாடப்படுகிறது. சாதியின் தீவிரத்தையும், அதன் தீவிரவாதத்தையும் அழகியலுடன் சொல்லப்பட்ட படம் அது. பிரேம்குமார் என்ற ஒரு படைப்பாளிக்கு சொந்தமான படைப்பு தான் 96. ஆனால் அதனை பார்க்கும் அனைவரும் தங்களுக்கு சொந்தமான படமாக நினைக்க வைத்திருக்கிறது. 

    நான் இந்த மேடையில் பேசியவர்களை கவனித்தபோது, பெரிய மனிதர்கள் சின்னப்புள்ளதனமாகவும், சிறியவர்கள் பெரிய மனிதர்கள் போன்றும் பேசினார்கள். சிறிய வயதிலேயே இவர்களுக்கு பக்குவம் இருக்கிறது. நான் என்னுடைய அனுபவத்தின் மூலமாக தான் இந்த உலகத்தினை பார்க்கிறேன். அதை அளவுக்கோலாக வைத்து தான் இதனை பேசுகிறேன்.

    இங்கு திரையுலகில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்காக யாரும் யார்மீது குறைச் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. யாரோ ஒருவர் யாரோ ஒருவரைக் குறி வைத்து செய்யும் தவறு. இது உருவாக்கப்பட்டது. இது எல்லாம் ஒரு வட்டத்தைப் போன்றது. வட்டத்தில் எது தொடக்கம்? எது இறுதி? என்று கண்டுபிடிப்பது கஷ்டமோ, அதேப்போல் இது போன்ற பிரச்சினைகளின் தொடக்கம் எது என்று கண்டுபிடிப்பதும் கஷ்டம். 



    அதற்காக இவ்விசயம் தொடர்பாக யார் மீது பழிசுமத்த விரும்பவில்லை. யாரும் இதற்கு பொறுப்பும் அல்ல. இதனை காப்பாற்ற முயற்சி செய்த லலித்குமார் முக்கியமான ஆள். தயாரிப்பாளர் நந்தகோபால் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்தேன். வலித்தது. ஆனால் சில சமயத்தில் வேறு வழியில்லை. ஏனெனில் இதெல்லாம் ஒரு குடும்பம். வாழ்க்கையில் இது போன்ற பிரச்சினைகள் வரும் போது நான் அடுத்தக்கட்டத்திற்கு போகப்போகிறேன். யார் மீது யார் எவ்வளவு பாரம் வைக்கப்போகிறார்களோ, யார் எவ்வளவு பாரம் தாங்குவார்களோ அவர்கள் தான் இன்னும் மேலே உயரமுடியும். என்னுடைய வாழ்க்கையில் பலமுறை இப்படி பல சம்பவங்களை கடந்து வந்திருக்கிறேன். இது என்னமோ என்னுடைய படக்குழுவினருக்கு மட்டும் நடந்த விசயமில்லை. காலங்காலமாக நடைபெற்று வந்துக்கொண்டிருக்கிறது.’ என்றார்.
    ×