search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A mini marathon"

    • டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்
    • நாளை கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளது

    வேலூர்:

    வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் 270 பெண் காவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2-ம் நிலை காவலர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

    மினி மாரத்தான் போட்டி

    அதன்படி, நேற்று நடந்த போட்டியில் முதல் 3-இடங்களை பிடித்த 2-ம் நிலை காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    இதைதொடர்ந்து, இன்று காலை தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவலர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது.

    போட்டியை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி தொடங்கி வைத்தார். இதில் காவலர் பயிற்சி முதல்வர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் கனிமொழி, விஜயலட்சுமி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    சான்றிதழ்

    வேலூர் கோட்டை நுழைவு வாயில் காந்தி சிலை அருகே இருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டி, மீன் மார்க்கெட், கோட்டை பின்புறம், அண்ணா கலையரங்கம் வழியாக அண்ணா சாலை, கோட்டை மைதானத்தில் ஒரு சுற்று என 5 கி.மீ.நடந்தது.

    இப்போட்டியில் முதல் 5 இடங்களை பிடித்த காவலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, நாளை கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளது.

    • கிராமங்களில் உள்ளவர்கள் ஆரோக்கியமான மனநிலையை பெறுவார்கள்.
    • ஆரோக்கியத்தை பேணுவதற்காக கிராம மக்கள் ஒன்று இணைந்து செயல்படுவார்கள்

    நீலாம்பூர்,

    கோவை சூலூர் அருகே உள்ள நீலாம்பூரில் உள்ள கதிர் கலை அறிவியல் கல்லூரியில் பெண்கள் முன்னேற்ற பிரிவு சார்பில் பிட் இந்தியா ப்ரீடம் ரன் 3.2 என்ற பெயரில் மினி மாரத்தான் நடந்தது.

    இதில் கல்லூரி மாணவிகள் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு குறித்து கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

    மாரத்தானை கல்லூரி முதல்வர் கற்பகம் மற்றும் நீலாம்பூர் ஊராட்சி தலைவர் சாவித்திரி சண்முகசுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கல்லூரி மாணவிகள் கூறும்போது,

    இது போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ந்து முன்னெடுக்கும் போது கிராமங்களில் உள்ளவர்கள் ஆரோக்கியமான மனநிலையை பெறுவார்கள். ஆரோக்கியத்தை பேணுவதற்காக கிராம மக்கள் ஒன்று இணைந்து செயல்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தனர். 

    ×