search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadai"

    ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் உருவாகும் ஆடை படத்தில் கள இசையை பதிவு செய்யும் புதிய முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. #Aadai #AmalaPaul
    ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் அடுத்ததாக அமலா பாலை வைத்து ஆடை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த போஸ்டரில் ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி இருந்தார். அவரது உடம்பில் ரத்தக் காயங்களும் இருந்தன.

    இந்த நிலையில், ஆடை படத்தில் கள இசையை பதிவு செய்வதாக படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். கலைஞர்களின் மொழிப் பிரச்சனை, படப்பிடிப்பு சூழுலை கருத்தில் கொண்டு படங்களில் பொதுவாக கள இசையை பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில், அதனை சவாலாக எடுத்துக் கொண்டு ஆடை படக்குழு கள இசையை பதிவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


    இதுகுறித்து ரத்னகுமார் அவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

    ஆடை படத்தில் நேரடி இசை. கள இசைக்காக நாம் செல்லும் போது, வசனங்களை நினைவில் வைத்தல், உச்சரிப்பு, நடை, செட் அமைதி என படக்குழுவிடம் இருந்து 100 சதவீத ஒத்துழைப்பு தேவை என்பது சவாலான ஒன்று. சவாலை ஏற்றுக் கொள்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளார். #Aadai #AmalaPaul

    அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் அடுத்த சன்னிலியோன் நீங்க தான் என்று விமர்சித்துள்ளார்கள். #Amalapaul
    அமலாபால் ‘ஆடை’ படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ள அவரது முதல் தோற்றம் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி இருந்தார். அவரது உடம்பில் ரத்தக் காயங்களும் இருந்தன. இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

    அதைப் பார்த்து இந்தி நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி என்று பலரும் பேசினர். எந்த தமிழ் நடிகையும் இதற்கு முன்பு இவ்வளவு கவர்ச்சியாக தோன்றியது இல்லை என்கின்றனர். செல்போன்களில் இலவசம் என்று வரும் குறுந்தகவல்களையும் அதனால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்தும் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. 

    அமலாபால் பழிவாங்கும் கதாபாத்திரத்தில் வருகிறார். கதை பிடித்ததால் கவர்ச்சிக்கு சம்மதித்ததாக கூறினார். இந்த நிலையில் அமலாபாலின் கவர்ச்சி தோற்றத்துக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. இவ்வளவு கவர்ச்சியாக நடித்துள்ளதால் அவர்தான் அடுத்த சன்னிலியோன் என்று டுவிட்டரில் சிலர் மோசமான கருத்துக்களையும் பதிவிட்டு உள்ளார்கள்.



    அதே நேரம் ஆடை இல்லாமல் நடித்துள்ள அவரது துணிச்சலையும் சிலர் பாராட்டி உள்ளனர். விமர்சனங்களுக்கு பதில் அளித்து அமலாபால் கூறும்போது, ‘‘எனது முதல் தோற்றத்தை பார்த்து விமர்சிப்பவர்கள் படத்தை பார்த்து விட்டு பாராட்டுவார்கள். அந்த ஆடையுடன் நான் ஏன் அப்படி நடித்தேன் என்பது படம் பார்க்கும்போது தெரியவரும்’’ என்றார்.
    ‘அதோ அந்த பறவை போல’ படத்தை தொடர்ந்து அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆடை’ படத்தின் போஸ்டரை பார்த்து விஷால் மிரண்டிருக்கிறார். #Amalapaul #Vishal
    அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘அதோ அந்த பறவை போல’. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை வினோத் இயக்கியுள்ளார். இப்படம் இறுதிகட்டத்தில் உள்ளது. இதையடுத்து மீண்டும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கிறார் அமலாபால்.

    ‘ஆடை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘மேயாதமான்’ புகழ் ரத்னகுமார் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ராணாவும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் நேற்று வெளியிட்டார்கள். வித்தியாசமான தோற்றத்தில் வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.


    தற்போது விஷால் இந்த போஸ்டரை பார்த்து தைரியமான அமலாபாலை பாராட்டுகிறேன். சிறப்பான பர்ஸ்ட்லுக் போஸ்டர். படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்று கூறியிருக்கிறார்.
    மேயாத மான் பட இயக்குனர் படத்தில் அமலாபால் நடிக்கும் ‘ஆடை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். #Aadai
    திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற ‘மேயாத மான்’ படத்தை இயக்கியவர் ரத்ன குமார். தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார். இதில் அமலா பால் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். 

    ஆடை என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். வித்தியாசமான இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.



    பொதுவாகவே இது மாதிரியான கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பீமேல் ஓரியன்ட், பெண்கள் முன்னேற்றத்திற்கான படம் அல்லது சூப்பர் நாச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள். ஆனால் இந்த படம், மேல் சொன்ன எந்த வகையிலும் சாராத அந்த முன் கணிப்புகளை உடைத்தெறியும் உணர்ச்சிகரமான பரபரப்பான கதையின் திரை வடிவம் என்று சொல்லப்படுகிறது. 
    கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வரும் அமலாபால், தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்காக பல பட வாய்ப்பை தவிர்த்திருக்கிறார். #Amalapaul
    திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற ‘மேயாத மான்’ படத்தை இயக்கியவர் ரத்ன குமார். தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார். இதில் அமலா பால் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதினாலேயே அமலாபால் மற்ற பல படங்களை தவிர்த்து இந்த படத்தை ஒப்புக்கொண்டுள்ளாராம்.

    பொதுவாகவே இது மாதிரியான கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பீமேல் ஓரியன்ட், பெண்கள் முன்னேற்றத்திற்கான படம் அல்லது சூப்பர் நாச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள். 



    ஆனால் இந்த படம் மேல் சொன்ன எந்த வகையிலும் சாராத அந்த முன் கணிப்புகளை உடைத்தெறியும் உணர்ச்சிகரமான பரபரப்பான கதையின் திரை வடிவம் என்று சொல்லப்படுகிறது. "ஆடை" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மற்ற கதா பாத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×