என் மலர்
நீங்கள் தேடியது "aadhaar cards"
ராஜஸ்தானில் உள்ள பழைய பேப்பர் கடையில் வந்த செய்தித் தாள்களுடன் 2 ஆயிரம் ஆதார் அட்டைகள் கிடைத்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. #Jaipur #ScrapDealer #Aadhaar cards
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் தலைநகர் ஜெய்ப்பூரில் ஜலோபுரா பகுதியில் பழைய பேப்பர் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் இம்ரான்.
இந்நிலையில், இன்று காலை அவரது கடைகு பழைய பேப்பர்களை சிலர் போட்டுச் சென்றனர். சிறிது நேரம் கழித்து அவற்றை அடுக்கி வைக்க எடுத்தார்.
அந்த பழைய பேப்பர்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் இருப்பதை கண்டு இம்ரான் அதிர்ந்தார்.
உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அங்கு விரைந்து சென்று ஆதார் அட்டைகளை கைப்பற்றினர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு விநியோகம் செய்யவே ஆதார் அட்டைகள் வந்திருக்கும். இவை தபால் அலுவலகத்தில் இருந்து மாயமானவை போல் தெரிகிறது. எனினும் விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.
பழைய பேப்பர்களுடன் ஆதார் அட்டைகள் கிடந்தது அந்த பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. #Jaipur #ScrapDealer #Aadhaar cards