என் மலர்
நீங்கள் தேடியது "aadhvik"
- இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
- இந்நிலையில், தந்தை வழியில் கார் ரேஸில் நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் களமிறங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், நடிப்பை தொடர்ந்து கார் பந்தயத்திலம் அசத்தி வருகிறார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. கார் பந்தயங்களை முடித்துக்கொண்டு, அஜித் சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில், தந்தை வழியில் கார் ரேஸில் நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் களமிறங்கியுள்ளார்.
சென்னையில் உள்ள கோ கார்ட் சர்க்யூட்டில் அஜித்தின் மகன் கார் ரேஸில் பயிற்சி பெற்றார். குடும்பத்தினருடன் சென்று நடிகர் அஜித் மகனை உற்சாகப்படுத்தினார். மேலும் அப்பொழுது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தற்பொழுது நடிகர் அஜித் மற்றும் மகன் ஆத்விக் இணைந்து காரை ஓட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அஜித் தன் மகன் ஆத்விகை தன் பின்னால் வரும்படி கை சைகை காட்டுகிறார். ஆனால் ஆத்விக் நடிகர் அஜித்தை முந்திக்கொண்டு செல்கிறார். இந்த வீடியோ பார்க்க மிகவும் க்யூட்டாக அமைந்துள்ளது.
அஜித் நடித்து முடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் முன்பதிவு இன்று இரவு 8.02 மணிக்கும் தொடங்கவுள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- செல்ல மகன் ஆத்விக்கின் 9-வது பிறந்தாளை கொண்டாட சென்னை வந்திருந்தார் அஜித்.
- அவருக்கு பிடித்த ஃபுட்பால் வடிவத்தில் பிறந்தநாள் கேக்கையும்.ஆத்விக் ஃபுட்பால் ஜெர்சியை அணிந்து இருப்பதை நாம் இந்த புகை படத்தில் காண முடியும்.
தமிழ் சினிமாவில் செல்லமாக 'தல' என்று அழைக்கபடும் நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி என்ற படம் நடித்து வருகிறார் அதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அவர் தனது குடும்பத்துடன் நேரங்களை செலவழிக்க எண்ணி அவரின் கடைகுட்டி சிங்கமான செல்ல மகன் ஆத்விக்கின் 9-வது பிறந்தாளை கொண்டாட சென்னை வந்திருந்தார் அஜித். அவர்களின் மனைவி ஷாலினி மூத்த மகளான அனுஷ்காவுடன் மிகவும் மகிழ்ச்சியாக பிறந்தாநாளை கொண்டாடியுள்ளார்.
ஆத்விக் ஃபுட்பால் விளையாட்டில் மிகவும் தீவிரமாக இருக்கும் நபர் என்பதால். அவருக்கு பிடித்த ஃபுட்பால் வடிவத்தில் பிறந்தநாள் கேக்கையும்.ஆத்விக் ஃபுட்பால் ஜெர்சியை அணிந்து இருப்பதை நாம் இந்த புகை படத்தில் காண முடியும்.
அதன் புகை படத்தை ஷாலினி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் அஜித்குமார் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வர வேற்ப்ப்பை பெற்று இருக்கிறது. சமூக வலை தலங்களில் வைரலாக பரவி வருகிறது.
- அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- அண்மையில் நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே கலைத்துறையில் சிறப்பான சேவையாற்றியதற்காக நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
சினிமா, ரெசிங் என அஜித் பிசியாக இருக்கும் இந்நேரத்தில் அவரின் மகன் ஆத்விக் பள்ளியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஓட்டப்பந்தயத்தில் ஆத்விக் பங்கேற்று வெற்றி பெற்ற வீடியோவை ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.