search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi thiruvizha"

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா நாளை (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருவிழா குறித்து கோவில் இணை ஆணை யர் மங்கையற்கரசி கூறிய தாவது:-

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதத்தில் ஆடித்திருவிழா நடை பெறும்.இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை (4-ந் தேதி) சனிக்கிழமை காலை பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் காலை 10.11 மணி முதல் 12 மணிக்குள் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கபட உள்ளது.

    17 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான 11-ந் தேதி அமாவாசையை முன்னிட்டு சுவாமி அம்மன் எழுந்தருளி அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சியும், வருகிற 12-ந் தேதி பர்வதவர்த்தினி அம்மன் தேரோட்டம் நிகழ்ச்சியும், 14-ந் தேதி சுவாமி, அம்மன் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 15-ந் தேதி இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கும் கோவில் தெற்கு பகுதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    திருவிழாவை முன் னிட்டு 17 நாட்களும் சுவாமி அம்மன் தினசரி ஒவ்வொரு வாகனத்தில் அலங் காரத்துடன் எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண மண்டபத்தில் தினசரி இரவு ஆன்மிக இன்னிசை நிகழ்ச்சிகளும்,ஆன்மிக பட்டிமன்றங்கள் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடிக்கொடை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பிரசித்திபெற்ற கோவில் ஆகும். தசரா திருவிழாவுக்கு பெயர் பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கொடை விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கொடை விழா நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்கியது. இரவு 10 மணிக்கு வில்லிசை நடந்தது.

    நேற்று காலை 7 மணி, 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. 11 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மகுட இசை, 10 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது.

    பக்தர்கள் வசதிக்காக நெல்லை, தூத்துக்குடி, திசையன்விளை ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திபு தலைமையில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழா ஏற்பாடுகளை தூத்துக்குடி அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோவில் தக்காருமான ரோஜாலி சுமதா, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், கோவில் ஆய்வாளர் பகவதி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். 
    தமிழகத்தில் திருநள்ளாருக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தமிழகத்தில் திருநள்ளாருக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் சனீஸ்வர பகவான் சுயம்புவாக தனி கருவறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் ஆடித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிறப்பு பூஜை செய்து கோவில் முழுவதும் புனிதநீர் தெளிக்கப்பட்டு கொடிமரத்திற்கு தண்ணீர் ஊற்றப்பட்டது. பின்னர், காலை 11.31-மணிக்கு காகம் சகுனம் பார்த்து கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இங்குள்ள சுரபி நதிக்கரையில் குளித்துவிட்டு ஆடைகளை நதியிலேயே போட்டு விட்டு புத்தாடை அணிந்து எள், உப்பு, பொரி வாங்கி கொடிமரத்தில் தூவி நெய் தீபம் ஏற்றி, மூலஸ்தானம் சென்று சனீஸ்வர பகவானை அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷம் கழிவதாக ஐதீகம். திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, தொழில் விருத்தியடையாமை உள்ளிட்ட பல காரணங்களுக்கு இங்கு வந்து பக்தர்கள் சனீஸ்வர பகவானை வழிபட்டு செல்கின்றனர். இதனால் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

    ஆடி திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநில பக்தர்களும் இங்கு அதிகளவு வந்து வழிபாடு நடத்தி செல்வார்கள். இந்த திருவிழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதிவரை 5 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும். விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் எந்தவித இடையூறும் இன்றி சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ஈஸ்வரன் (போடி), சீமைச்சாமி (உத்தமபாளையம்) ஆகியோர் தலைமையில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
    அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோவிலில் ஆடிதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27-ந் தேதி நடக்கிறது.
    அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா நேற்று காலை தொடங்கியது. அங்குள்ள தங்க கொடி மரத்தில் மேளதாளம் முழங்க கருடாழ்வார் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனையும் நடந்தது. அங்குள்ள மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அப்போது கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு அன்ன வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தங்கப்பல்லக்கு உற்சவமும் இரவு சிம்ம வாகன புறப்பாடும் நடைபெறும். நாளை (சனிக்கிழமை) காலையில் வழக்கம் போல் நிகழ்ச்சியும் இரவு அனுமார் வாகனத்திலும், 22-ந் தேதி இரவு தங்க கருட வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறுகிறது.

    23-ந் தேதி காலையில் 6.45 மணிக்கு மேல் 7.30-மணிக்குள் மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு அழகர் கோவிலிலிருந்து சுந்தரராஜப்பெருமாள் புறப்பட்டு சென்று திரும்புகிறார். இரவு சேஷ வாகனத்திலும், 24-ந் தேதி இரவு யானை வாகனத்திலும் 25-ந் தேதி இரவு புஷ்ப சப்பரத்திலும், 26-ந் தேதி இரவு குதிரை வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா 27-ந் தேதி ஆடி பவுர்ணமியன்று நடைபெறுகிறது.

    அன்று அதிகாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் தேவியர்களுடன் கள்ளழகர் பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்வார். பின்னர் காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேரின் வடம் பிடிக்கப்படும். 28-ந் தேதி சப்தாவர்ணம் புஷ்பசப்பரமும், 29-ந் தேதி உற்சவ சாந்தியும் நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந் தேதி ஆடி அமாவாசை அன்று இரவு கருட வாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெறும். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 
    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கட்டுமான பணிகள் முடியாததால் எளிமையாக ஆடித்திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையொட்டி வருகிற 24-ந் தேதி பூச்சாட்டுதல் நடக்கிறது.
    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் மிகவும் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். கோவிலின் உள்மண்டபம் பழுதடைந்த காரணத்தினால் கோவில் முழுவதும் இடிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோவில் திருப்பணிகளுக்காக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் இதுவரை சுமார் 40 சதவீதம் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக, கோவில் எதிரே உள்ள மண்டபத்தில் உற்சவர் அம்மனுக்கு தினமும் அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. மூலவர் அம்மன் சிலை பத்திரமாக எடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா 20 நாட்களுக்கு மேல் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பெரிய அளவில் இல்லாமல் மிகவும் எளிமையான முறையில் ஆடித்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி ஆடி மாதம் பிறக்க இன்னும் ஒருவாரமே உள்ளநிலையில், கோட்டை மாரியம்மன் கோவிலில் இந்தாண்டு ஆடித்திருவிழாவை நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் வருகிற 24-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது.


    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கட்டுமான பணிகள் பாதியில் நிற்பதை படத்தில் காணலாம்

    இதுகுறித்து சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் மாலா கூறியதாவது:-

    கோவிலில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தினால் கடந்தாண்டு மாதிரி இந்தாண்டும் எளிமையான முறையில் ஆடித்திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதாவது, கம்பம் நடுதல், உற்சவர் ஊர்வலம், பக்தர்களின் உருளுதண்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாது. வருகிற 24-ந் தேதி கோவிலில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு தினமும் அபிஷேகம், பூஜைகள் நடைபெறும். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7, 8, 9-ந் தேதிகளில் 3 நாட்கள் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்யலாம். 8-ந் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி வைக்க உள்ளோம்.

    கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஆடித்திருவிழா மிகவும் பிரபலமானது. ஆனால் கட்டுமான பணிகள் நடப்பதால் மிக எளிமையாக நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. அடுத்த ஆண்டுக்குள் கோவிலில் திருப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு ஆடித்திருவிழா சிறப்பாக நடத்த அனைத்து விதமான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    மதுரையை அடுத்துள்ளது திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் கள்ளழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா வருகிற 19-ந்தேதி, கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    மதுரையை அடுத்துள்ளது திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் அழகர்கோவில். இங்குள்ள கள்ளழகர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது ஆண்டு தோறும் ஆடி மாதம் வரும் ஆடிப்பெருந்திருவிழா. இந்த வருடத்திற்கான விழா கோவிலில் வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று இரவு அன்னவாகனத்தில் சாமி புறப்பாடும், மறுநாள் 20-ந்தேதி காலை தங்கப்பல்லக்கு உற்சவமும் இரவு சிம்மவாகன புறப்பாடும் நடைபெறுகிறது. 21-ந்தேதி காலை வழக்கமான நிகழ்ச்சிகளும், இரவு அனுமார் வாகனத்திலும், 22-ந்தேதி இரவு தங்க கருட வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது.

    23-ந்தேதி காலை 6.45 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சுந்தரராஜப் பெருமாள் அழகர்கோவிலிலிருந்து புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று திரும்புகிறார். அன்று இரவு சேஷ வாகனத்திலும், 24-ந்தேதி இரவு யானை வாகனத்திலும், 25-ந்தேதி இரவு புஷ்பசப்பரத்திலும், 26-ந்தேதி இரவு குதிரை வாகனத்திலும் சாமி புறப்பாடு நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா 27-ந்தேதி நடைபெறுகிறது. இதில் அன்று அதிகாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் தாயார்களுடன் கள்ளழகர் பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்கிறார். பின்பு காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேரின் வடம் பிடிக்கப்படுகிறது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்கிறார்கள்.

    28-ந்தேதி சப்தாவர்ணம் புஷ்பசப்பரமும், 29-ந்தேதி உற்சவ சாந்தியும் நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த (ஆகஸ்டு) மாதம் 11-ந்தேதி ஆடி அமாவாசையும் அன்று இரவு கருட வாகனத்தில் சாமி புறப்பாடும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக் கொட்டு திருவிழாவில் அம்மன் சன்னதி முன்னுள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
    ஆடிப்பட்டம் தேடி விதை என்ற ஆன்றோர் வாக்கின்படி தமிழக விவசாயிகள் ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற் கொள்வார்கள். அவர்கள் தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச் சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.

    மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வருகின்ற திருவிழாக்களில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள திருவிழாக்கள் நான்காகும். அவை ஆடி முளைக்கொட்டு திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகியனவாகும்.

    இதில் ஆடி முளைக் கொட்டு திருவிழாவில் அம்மன் சன்னதி முன்னுள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் (வருகிற 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை) திருவிழா நடைபெறும்.

    அப்போது மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் சிறப்பு நாதஸ்வர கலைஞர்கள், தவில் வித் வான் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வருவார்கள்.

    நாதஸ்வர கலைஞர்கள் கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசை மீட்டு அம்மனை சேர்த்தி சேர்பர். 7-ம் நாள் அன்று (21-ந்தேதி) இரவு திருவீதி உலா முடிந்த பின் உற்சவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவமும் நடைபெறும். விவசாயம் வளம் பெறவும், நாடு செழிக்கவும் வகை செய்யும் ஐதீகத்தில் அமைந்ததே ஆடி முளைக்கொட்டு திருவிழா வாகும்.
    ×