என் மலர்
நீங்கள் தேடியது "Aarthi"
- மதுரையில் உள்ள அழகர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
- ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பட்டையை கிளப்பியது. அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் மதுரையில் உள்ள அழகர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
கோவிலில் வழிபாடு செய்த நடிகர் சிவகார்த்திகேயன் வெளியே வந்த போது, ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். மனைவியுடன் மதுரை கோவிலுக்கு வந்த சிவகார்த்திகேயனின் புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
