என் மலர்
நீங்கள் தேடியது "Abdullah"
- PMSHRI திட்டம் குறித்து முடிவெடுப்பதற்கு மாநில அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
- அதிமுகவிற்கு கொள்கை நிலைப்பாடுகளோ, போராட்ட வரலாறோ இல்லை.
PMSHRI திட்டம் தொடர்பாக திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "பாஜக எப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் அடி வாங்குகிறதோ, அப்போதெல்லாம் குறுக்கே புகுந்து காப்பாற்றும் வேலையைச் செய்வது இங்கிருக்கும் அதிமுக அடிமைகள். ஒன்றிய அரசின் சர்வாதிகார நடவடிக்கைகளை இவர்களும் எதிர்க்க மாட்டார்கள். எதிர்க்கும் திமுகவுடன் துணையாகவும் நிற்க மாட்டார்கள்.
PMSHRI திட்டம் குறித்து முடிவெடுப்பதற்கு மாநில அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது, அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்பதுதான் தலைமைச் செயலாளரின் கடிதத்தில் இருக்கும் செய்தி. ஆனால் அதை மறைத்துவிட்டு, பாஜக பரப்பும் அதே பொய்யை அடிமைகளும் பரப்புகிறார்கள்.
இருமொழிக் கொள்கை உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்த தத்துவார்த்த நிலைப்பாடும் அதிமுகவால் முன்னெடுக்கப்பட்டது அல்ல. அத்தனையுமே திமுகவால் முன்னெடுக்கப்பட்டு மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டவை. அவற்றின் மீது கைவைத்தால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியது வரும் என்பதற்காக தாங்களும் அந்த நிலைப்பாட்டில் இருப்பதுபோல் நடிக்கும் கட்சிதான் அதிமுக. அவர்களுக்கென்று கொள்கை நிலைப்பாடுகளோ, போராட்ட வரலாறோ இல்லை.
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை ஒன்றிய பாஜக அரசு எவ்வளவு பறித்தாலும், கூச்சமின்றி அவர்களின் காலில் விழுந்து, ஏலம் எடுத்து வைத்துள்ள தங்களது கட்சிப் பொறுப்பை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே அதிமுகவின் நிரந்தரக் கொள்கை" என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சரத்யாதவ், பா.ஜனதாவில் இருந்து விலகிய யஷ்வந்த் சின்கா ஆகியோரை ஏற்கனவே சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்கும் திட்டத்தை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், ஜனநாயகத்தை காக்கவும் பாஜக அல்லாத பிற கட்சிகளின் தலைவர்களை சந்தித்ததாக கூறினார்.
‘நாட்டில் அமலாக்கத்துறை, சிபிஐ, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளில் நிலைமை மோசமாக உள்ளது. இந்த நிறுவனங்கள் மீது அதிக அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. ஜனநாயகத்தையும், நாட்டையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். இதற்காக அனைத்து தலைவர்களையும் அழைத்து சந்திரபாபு நாயுடு பேச உள்ளார்’ என்று சரத் பவார் கூறினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச உள்ளார். #ChandrababuNaidu #SharadPawar #FarooqAbdullah