search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abithakujambal"

    • “என் கணவரை யாராவது காப்பாற்றுங்கள்” என்று குரல் கொடுக்கிறாள் அன்னை.
    • இந்த நாளில் இரண்டு புண்ணியவான்களையாவது பார்க்க வேண்டும் என்றார்.

    கங்கையின் புனிதத்தை நிரூபித்த சிவபெருமான்

    ஒரு தடவை விசாலாட்சி சிவபெருமானிடம், சுவாமி! இன்று நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாள்.

    இந்த நாளில் இரண்டு புண்ணியவான்களையாவது பார்க்க வேண்டும் என்றார்.

    அதற்கு விசுவநாதர் "சரி வா" போகலாம். நான் கங்கை நீரில் மூழ்கியவன் போல் அலறுகிறேன்.

    நீ கரையிலிருந்து என்னைக் காப்பாற்றச் சொல்லி கத்த வேண்டும். அதோடு "புண்ணியவான்கள் தான் என்னைக் காப்பாற்ற முடியும் என்றும் சொல்வாய்" என்றார்.

    கங்கைக்கரையில்,  தீர்க்க சுமங்கலியாய் விசாலாட்சி நிற்கிறாள். பஞ்சுப் பொதிபோல் நரைத்த தலை விசாலமான விழிகள், லட்சணமான முகவசீகரம், விசுசநாதர் தளர்ந்த சிவந்த மேனியுடன் கங்கையில் மூழ்கி எழுகிறார்.

    "என் கணவரை யாராவது காப்பாற்றுங்கள்" என்று குரல் கொடுக்கிறாள் அன்னை.

    நீர் கொள்ளாத மனிதத் தலைகள். சிலர் விசுவநாதர் நீரில் போராடும் பக்கமாக விரைகின்றனர். சிலர் மேலிருந்து குதித்து நீந்துகின்றனர். சிலர் நீந்தத் தெரியாதே என தவிக்கின்றனர்.

    "ஐயா! கருணை மனம் கொண்டவர்களே! புண்ணியவான்கள் தான் அவரைக் காப்பாற்ற முடியும். பாவிகள் அவரைத்தொட்டால் சுழலில் சிக்கி மாள்வார்கள்" என்றாள் பார்வதி.

    பலர் பின்வாங்கி விட்டனர். இருவர் மட்டும் முன்சென்று விசுவாதரை இழுத்து வந்தார்கள்.

    "நீங்கள் பாவமே செய்த தில்லையா?" என்று கேட்டாள் அன்னை

    "தாயே! நான் பாவம் செய்தேனா... இல்லையா என்று தெரியாது. என் கண்முன் ஒரு உயிர் மரண அவஸ்தையில் தவிக்கும்போது அவரைக் காப்பாற்றும் முயற்சியில் நான் இறந்தாலும் தப்பிலை.

    என்றாயிருந்தாலும் போகக்கூடிய உயிர் நல்ல காரியத்திற்காக முயற்சி செய்தோம் என்ற திருப்தியோடு போனால் என்ன?" என்றான் ஒருவன்.

    இரண்டாமவன், "அம்மா நான் பாவியாகவே இருந்தாலும் கங்கையில் குதித்தவுடன் என் பாவம் போய் விடுகிறது. அப்படி நம்பித்தானே கோடானு கோடி பேர் இங்கு நீராட வருகிறார்கள்! புண்ணியவானாக மாற்றப்பட்ட நான் அவரைக் காப்பாற்ற தகுதி படைத்தவனாகவே நினைத்தேன்" என்றான்.

    இருவரையும் ஆசீர்வதித்துவிட்டு அங்கிருந்து அம்மையும், அப்பனும் சென்றனர்.

    "தேவி! இப்போது சொல்! கங்கை என் தலையில் இருக்கத் தகுதி பெற்றவள்தானா?" என்றார் சதாசிவன்.

    "ஆம் சுவாமி! இரு நல்லவர்களின் சந்திப்பே என்னை மெய்சிலிர்க்கச் செய்கிறது. தினம், தினம் எத்தனை தூயவர்களின் உரையாடல்களை தீயவர்களின் குறைகளைக் கேட்டு மவுனமாக இயங்கும் கங்கை மிகப் புனிதமானவள். தலையில் தாங்கிக் கூத்தாடும் அளவு பெருமை பெற்றவள்" என ஒப்புக்கொண்டாள் அன்னை.

    அந்த கங்கையை தீபாவளி நாளில் அதிகாலை நினைத்து தொழுது நீராடி, பாவ எண்ணங்களை களைய வேண்டும்.

    • இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது.
    • பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும். குழந்தைப் பேறு , திருமண வரம் கைகூடும்.

    சக்தி பீடங்கள்-திருவெண்காடு பிரம வித்யாம்பிகை

    நகை மாவட்டம் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரணேஸ்வரர் ஆலயம் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் 11வது தலமாகும்.

    தல சிறப்பு:

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது.

    பிரார்த்தனை

    இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி.

    இத்தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது. 21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும். இதன் பெயர் ருத்ர கயா.

    காசியில் இருப்பது விஷ்ணு கயா.

    பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும். குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது.

    மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும், கல்வி மேன்மை, கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.

    இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

    காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு. இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று.

    நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும். 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம்.

    இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.

    இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவியாக பிரம்ம வித்யாம்பிகை திகழ்கிறார். திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார்.

    பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள்.

    கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு.

    நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ (செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை(யோகம்) அணி செய்வதைக் காணலாம்.

    கீழ்க்கரம் அபய கரம். இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.

    பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.

    நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர்.

    இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.

    ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும்.

    இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்.

    புதன் தலமான திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோயிலில் அகோர சிவபெருமானுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 12 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும்.

    எல்லாவிதமான துன்பங்களையும் அழிக்கும் சக்திகொண்டது இந்த அகோர பூஜை.

    • தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக இத்தலம் திகழ்கிறது.
    • அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடம் ஆகும்.

    சக்தி பீடங்கள்-திருவண்ணாமலை அபீதகுஜாம்பாள்

    திருவண்ணாமலையில் லிங்கமே மலையாக அமைந்துள்ளது.

    தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக இத்தலம் திகழ்கிறது.

    பஞ்சபூதம் தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. நினைத்தாலே முக்தி தரும்.

    நான் என்ற அகந்தை அழிந்த தலம் உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம் பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம்.

    அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம் அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம்

    எல்லா சிவதலத்திலும் மூலவர் பின்புறமுள்ள லிங்கோத்பவர் தோன்றிய தலம்.

    48 நாட்கள் விரதமிருந்து அதிகாலையில் கணவனும் மனைவியும் நீராடி மலை வலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும்.

    அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடம் ஆகும்.

    இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.

    கேட்கும் வரங்களை எல்லாம் தரும் மூர்த்தியாக அருணாச்சலேசுவரர் உள்ளார்.

    கல்யாண வரம் வேண்டுவோர் , குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில் விருத்தியடைய விரும்புவோர், உத்தியோக உயர்வு வேண்டுவோர்., வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    ×