search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abnormal brain condition"

    • டென்சன் நியூமோசெஃபாலஸ் எனும் அரிய வகை மூளை நோய் கண்டுபிடிக்கப்பட்டது
    • மது அருந்த சென்ற இடத்தில் ஒரு கைகலப்பில் முகத்தில் தாக்கப்பட்டார்

    வியட்நாம் நாட்டை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டது. அத்துடன் அவருக்கு நாசியிலிருந்து நீர் வடிதல் பிரச்சனையும் இருந்து வந்தது.

    இதையடுத்து, அந்நாட்டின் வடமத்திய கடற்கரை பகுதியின் டாங் ஹாய் (Dong Hoi) நகரில் உள்ள கியூபா ஃப்ரெண்ட்ஷிப் மருத்துவமனையில் (Cuba Friendship Hospital) சிகிச்சைக்காக சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த நரம்பியல் துறை தலைமை மருத்துவர், டாக்டர். குயன் வேன் மேன் (Dr. Nguyen Van Man) சிடி ஸ்கேன் பரிசோதனைக்கு பரிந்துரைத்தார். பரிசோதனையின் முடிவில் அந்த நோயாளியின் மூளையில் டென்சன் ந்யூமோசெஃபாலஸ் (tension pneumocephalus) எனும் அரிய நிலை இருப்பது தெரிய வந்தது. இது மூளையில் உள்ள அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு அபாய நிலை.

    இதற்கான காரணம் என்னவென்று மேலும் பரிசோதித்த போது மருத்துவர்களே வியக்கும் வண்ணம், அந்த நோயாளியின் நாசி வழியாக சென்று மூளைக்குள் இரண்டு சாப்ஸ்டிக்ஸ் குச்சிகள் பதிந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதை எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.

    சீனா, கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உணவை எடுத்து உண்ண பயன்படுத்தும் குச்சிகள் எவ்வாறு நாசிக்குள் ஏறியது என மருத்துவர்கள் வியப்படைந்தனர்.

    இது குறித்து அந்த நோயாளியிடம் கேட்ட போது, அதற்கு அவர், 5 மாதங்களுக்கு முன் மது அருந்த சென்ற இடத்தில் ஏற்பட்ட ஒரு கைகலப்பில் அவர் முகத்தில் யாரோ ஒரு பொருளால் குத்தியதை மட்டும் நினைவுகூர்ந்தார். ஆனால், அப்போதே அவர் மருத்துவமனைக்கு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நாசியில் எந்த பொருளையும் கண்டு பிடிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

    அந்த நோயாளி தற்போது நல்ல உடல்நலத்துடன் விரைவில் வீடு திரும்ப உள்ளார்.

    ×