search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abortion Pill"

    • கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டார்.
    • வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு இருப்பது தெரியவந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அனக்கா பள்ளியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர்.

    இளம்பெண் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பம் தரித்தார். ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளதால் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள இளம் பெண்ணிற்கு விருப்பம் இல்லை.

    இதனால் மருந்து கடைக்கு சென்று கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டார். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் இளம்பெண்ணுக்கு பாதி அளவு கரு கலைந்தது.

    இதனால் கடந்த 3 வருடங்களாக இளம் பெண் வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் இளம் பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் ஆபரேஷன் செய்து இளம் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடை அகற்றினர்.

    தற்போது இளம் பெண் நலமுடன் இருப்பதாகவும் ஒரு வார சிகிச்சைக்கு பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்வதாக மருத்துவ துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • மருந்து சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது என மருந்தக உரிமையாளர்களை எச்சரித்தனர்

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மருந்தக ங்களில் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்வதாக மருத்துவ துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைனையடுத்து வேப்பூர் அரசு வட்ட தலைமை டாக்டர் அகிலன் கண்ணன் , மருந்தக ஆய்வாளர் நாராயணசாமி , வேப்பூர் சப்- இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் உள்ளிட்ட குழுவினர் வேப்பூர் பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் கரு கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து கரு கலைப்பு மாத்திரைகள் முறையான மருந்து சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது என மருந்தக உரிமையாளர்களை எச்சரித்தனர் இந்த திடீர் ஆய்வால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கருக்கலைப்பு மாத்திரையை, மீண்டும் தற்காலிகமாக பயன்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
    • கீழமை நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வந்த கருக்கலைப்பு மாத்திரையை, மீண்டும் தற்காலிகமாக பயன்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    அந்நாட்டில் பெண்கள் கருகலைப்பு செய்வது, நீண்டகாலமாக நீடித்து வந்தநிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மாத்திரையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

    இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், அமெரிக்காவில் கலைக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்த தடை விதித்தும் கட்டுப்பாடு விதித்தும் கீழமை நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதன்மூலம், அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரை மீண்டும் தற்காலிகமாக பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. 

    • ஆவட்டியில் உள்ள மருந்த கத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டு உள்ளார்.
    • ரத்தக் கசிவு காரணமாக சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த வர் குணசேகரன். அவரது மனைவி கஸ்தூரி (வயது32)இவருக்கு மகள், மகன் என 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் மீண்டும் கருவுற்ற கஸ்தூரி கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஆவட்டியில் உள்ள மருந்த கத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டு உள்ளார்.நேற்று அவருக்கு அடி வயிறு வலிப்பதாகவும் ரத்த கசிவு ஏற்படுவதாகும் கூறி திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதலு தவி சிகிச்சை பெற்றார்.கஸ்தூரி அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை அவரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில் கஸ்தூரி ஆவட்டியில் உள்ள போலி மருத்துவர் சுரேஷ் என்ப வரிடம் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட தாக கூறியுள்ளார். ரத்தக் கசிவு காரணமாக அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

    சுரேஷ் ஏற்கனவே ராமநத்தம் போலீசாரால் வழக்கு பதிவு செய்து மருத்துவ வழக்கில் சிறைக்குச் சென்று தற்போது பிணையில் வந்து ராமநத்தம் காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்து போட்டு வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து அவர் இது போன்று குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் கஸ்தூரி கூறியுள்ளது உண்மையா அந்த கடையில் தான் மாத்திரை வாங்கினாரா என்பது குறித்து திட்டக்குடி டிஎஸ்பி காவியா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கருக்கலைப்பு மாத்திரைகளை விற்க டாக்டர் பரிந்துரை அவசியம் என மருந்து வணிகர்களுக்கு அறிவரைக்கப்பட்டது.
    • அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிக உதிரப்போக்கினால் உயிரிழப்புகள் கூட பல நேரங்களில் நடக்கிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் மருந்தாளுநர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம், மாவட்ட மருதாளுநர்கள் சங்கம் சார்பில் பார்மசிஸ்ட்களுக்கான கருத்தரங்கம், பயிற்சி முகாம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மருந்தாளுநர்கள் சங்க மாவட்ட தலைவர் சத்தியசீலன் தலைமை வகித்தார். மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் சின்னையா, மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். கண்டாச்சிபுரம் நிர்வாகி விஜய ஆனந்த் வரவேற்றார். முகாமில் ஓய்வு பெற்ற மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் ஜெயராஜ், திண்டிவனம் சரக மருந்து ஆய்வாளர் சுகன்யா, அரசு மருத்துவர்கள் பாக்கிய–லட்சுமி, ரவிக்குமார், மதன்ராஜ், விஷ்ணுகுமரன், சுமித்ரா, மருந்தாளுநர்கள் சங்க மாநில செயலாளர் வேங்கடசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கி பேசினர்.

    திண்டிவனம் சரக மருந்து ஆய்வாளர் சுகன்யா பேசுகை–யில், தற்போது நமது நாட்டில் புதிதாக பரவி வரும் நோய்கள் குறித்தும், அவற்றுக்கு வழங்கப்படும் மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளை தவிர்க்கும் வகையில் மாத்தி–ரைகளை பரிந்துரைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு மருந்து–களின் வீரீயம், வருங்காலத்தில் நோய்களால் ஏற்படும் பாதிப்புகளை விட ஆண்டிபயாட்டிக்ஸ் பயன்படுத்து–வதால் அதிக பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.  மேலும் இதுபோன்று கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை பெறாமல் கடைகளில் விற்கக் கூடாது, இதனால் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிக உதிரப்போக்கினால் உயிரிழப்புகள் கூட பல நேரங்களில் நடக்கிறது. எனவே கருக்கலைப்பு செய்வது குறித்து மகப்பேறு நல மருத்துவரின் ஆலோசனை பெறாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது. மருந்தாளுநர்கள், நோயாளி–கள் இடையேயான புரிதல் இருக்க வேண்டும் என அவர் பேசினார். இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருந்தாளுநர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகி அண்ணாமலை நன்றி கூறினார்.

    ×