என் மலர்
நீங்கள் தேடியது "AC Helmet"
- இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதுவை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
- போக்குவரத்து விதியை பின்பற்றி புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் ஹெல்மெட் அணிய தொடங்கி உள்ளனர்.
புதுச்சேரி:
இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி உயிர் இழப்பதை தடுக்க கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.
பல்வேறு மாநிலங்களில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
அதுபோல் புதுச்சேரியிலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதுவை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பொதுமக்களுக்கு ஆதரவாக சுயேட்சை எம்.எல்.ஏ. நேருவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதன் காரணமாக தற்போது புதுச்சேரியில் அபராதம் விதிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே போக்குவரத்து விதியை பின்பற்றி புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் ஹெல்மெட் அணிய தொடங்கி உள்ளனர்.
தற்போது கோடை வெயில் வருத்தெடுத்து வருகிறது. கோடை வெயிலை சமாளிக்க இருசக்கர வாகனங்களில் செல்லும் ஒரு சிலர் ஹெல்மெட் அணிந்து செல்கிறார்கள்.
அவ்வாறு ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள் வெயிலால் படாத பாடுபட்டனர்.
இதற்கிடையே கோடை வெயிலுக்கு இதமாக இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஏ.சி.ஹெல்மெட்டை தயாரித்துள்ளது.
இதனை புதுவையில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிரத்தியேமாக தயாரிக்கப்பட்ட இந்த ஏ.சி. ஹெல்மெட்டை புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அணிந்து பரிசோதனை செய்தார். விரைவில் இந்த ஏ.சி. ஹெல்மெட் புதுவையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஐ.ஐ.எம். மாணவர்கள் உருவாக்கி கொடுத்துள்ள வித்தியாசமான ஹெல்மெட் பேட்டரியில் இயங்க கூடியது.
- பொதுவாக நாம் அணியக்கூடிய ஹெல்மெட்டின் உள்ளே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அமைப்பில் சிறிய வகையிலான மின்விசிறி இதில் பொருத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பல நகரங்களிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடும் வெயிலுக்கு மத்தியிலும் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசார் வெயிலால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதராவில் கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு ஏ.சி.ஹெல்மெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை அணிவதன் மூலம் அவர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். இந்த ஹெல்மெட்டை அணிந்து போக்குவரத்து போலீசார் பணியாற்றி வரும் காட்சிகள் வலைதளங்களில் பரவி வருகிறது. அங்குள்ள ஐ.ஐ.எம். மாணவர்கள் உருவாக்கி கொடுத்துள்ள இந்த வித்தியாசமான ஹெல்மெட் பேட்டரியில் இயங்க கூடியது.
பொதுவாக நாம் அணியக்கூடிய ஹெல்மெட்டின் உள்ளே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அமைப்பில் சிறிய வகையிலான மின்விசிறி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேன் பேட்டரி மூலம் இயங்கும். ஹெல்மெட்டின் உள்ளே பேன் இருக்கும் நிலையில் அதற்கான பேட்டரியை தனியாக போலீசார் இடுப்பில் அணிந்து கொள்வார்கள். பேட்டரிக்கும், ஹெல்மெட்டில் உள்ள பேனும் வயர் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஹெல்மெட்டின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் பயன்பாட்டில் இருக்கும்.
முதற்கட்டமாக 450 போக்குவரத்து போலீசாருக்கு இந்த ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது.
#WATCH | Gujarat: Vadodara Traffic Police provided AC helmets to its personnel to beat scorching heat waves in summer. pic.twitter.com/L3SgyV2uEm
— ANI (@ANI) April 17, 2024