என் மலர்
நீங்கள் தேடியது "Acne Tips"
- பருக்கள் வந்தால் அதனை தொடாதீர்கள்.
- கொலாஜென் செல்களை உயிர்பிக்க ஆவி பிடிக்க வேண்டும்.
சருமம் பொலிவாகவும், அழகாகவும் இருக்க அனைவரும் விரும்புவோம். ஆனால் முக அழகை கெடுக்கும் ஓர் விஷயம் பருக்கள். பருக்கள் எரிச்சலூட்டுவதாக இருக்கும்.
பருக்கள் வந்தால் அதனை தொடாதீர்கள், கிள்ளாதீர்கள், கிழிக்காதீர்கள். அப்படி செய்தால் தோல்களில் உள்ள கொலாஜென் என்னும் செல்கள் இறந்து அந்த இடத்தில் பெரிய குழி அல்லது அது தழும்பாக மாறிவிடும். கொலாஜென் செல்களை உயிர்பிக்க ஆவி பிடிக்க வேண்டும். பின்னர் முகத்தில் உள்ள சதைகளை குறைந்தது 5 நிமிடங்களாவது மசாஜ் செய்து இலகுவாக செய்ய வேண்டும்.

தக்காளி, முல்தானி மட்டி, ரோஸ் வாட்டர் ஆகிய மூன்றையும் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு அரைத்து அந்த கலவையை தினமும் 30 நிமிடம் தடவி வந்தால் நிச்சயமாக 30 நாட்களுக்குள் முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் பருக்கள் மறைந்துவிடும்.

தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் முகத்தில் உள்ள எண்ணெய் தன்மையை கண்ட்ரோல் செய்யும். அதுமட்டுமல்லாது ஆன்டி ஏஜிங் கொலாஜென் செல்கள் உயிர்பிக்க வழிவகுக்கும்.
தினமும் சீரகம் கலந்த தண்ணீர் 4 லிட்டர் கண்டிப்பாக அருந்த வேண்டும். ரத்த சுத்திகரிப்புக்காக தினமும் ஏ.பி.சி. ஜூஸ் பருக வேண்டும். ஐஸ் கியூப் கொண்டு தினமும் 2 நிமிடமாவது மசாஜ் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்யும் போது முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து ஒரு பளபளப்புத்தன்மை உருவாகும்.
- ஹார்மோன் மாற்றங்களால் முகப்பரு ஏற்படுகிறது.
- எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முகப்பரு அதிகமாக ஏற்படும்.
ஹார்மோன் மாற்றங்களால் முகப்பரு ஏற்படுகிறது. அதனால் தான் பருவ வயதினருக்கு முகப்பரு பிரச்சனை அதிகமாக இருக்கும். இந்த பருவத்தில் ஆண்ட்ரோஜன் என்ற பாலின ஹார்மோன் உடலில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
இது மட்டுமில்லாமல் மோசமான வாழ்க்கை முறையாலும் முகப்பரு பிரச்சனை ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது சருமத்தின் கீழ் பகுதியின் உள்ள செபாசியஸ் என்னும் சுரப்பியை தூண்டி அதிக எண்ணெயை உற்பத்தி செய்கிறது.

இதனால் சருமத்தின் எண்ணெய் பசை அதிகரிக்கும். இதனுடன் தூசி, பாக்டீரியாக்கள், இறந்த செல்கள் சேர்ந்து பருக்கள் ஏற்படுகிறது. அதிக முகப்பரு காரணமாக சிலர் நிகழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்களுக்கு செல்வதற்கும் போட்டோ எடுப்பதற்கும் கூட அஞ்சுகின்றனர்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள்:
சாதாரண சருமத்தை விட எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முகப்பரு அதிகமாக ஏற்படும். ஆகையால் எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முகத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும்.
முக்கியமாக வெளியில் சென்று விட்டு வந்தவுடன் கண்டிப்பாக முகம் கழுவ வேண்டும்.
இதற்கு கற்றாழையால் செய்யப்பட்ட ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தலாம். முகம் கழுவும் போது முகத்தில் சிறிது மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும். தொடர்ந்து இதை செய்யும் போது முகப்பரு ஏற்படுவது குறையும்.
சில நேரங்களில் வெயிலில் செல்வதாலும் முகப்பரு ஏற்படலாம். எனவே பகலில் வெளியில் செல்வதற்கு முன்பு சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்தலாம்.

கிரீன் டீ ஃபேஸ் பேக்:
கிரீன் டீயில் உள்ள ரசாயன கலவையில், சருமத்திற்கு நன்மை செய்யும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஆன்டி- மைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளது. அவை முகத்தில் உள்ள முகப்பருக்களை நீக்குவதாக கூறப்படுகிறது.
ஒரு கிண்ணத்தில் கிரீன் டி தூளை போட்டு அதனுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் போட்டு வர முகப்பரு மற்றும் தழும்புகள் மறையும்.

ஆப்பிள் சீடர் வினிகர்:
ஆப்பிள் சீடர் வினிகரில் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் பண்புகள் நிறைந்துள்ளன. ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சில் தொட்டு முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ, முகப்பரு பிரச்சினை தீரும்.

கடல் உப்பு ஸ்க்ரப்:
பருவ வயதினர் வாரந்தோறும் முகத்தை ஸ்க்ரப் செய்வது அவசியம். ஒரு கிண்ணத்தில் சிறிது நாட்டு சர்க்கரை, காபி தூள், கடல் உப்பு மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை போட்டு முகத்தில் தேய்த்து வர கரும்புள்ளிகள், பருக்கள் வராமல் இருக்கும்.
விட்டமின் ஏ அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள், முட்டை, மீன் ஆகியவற்றை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, தியானம், நடைபயிற்சி போன்றவற்றை வாழ்க்கையில் நடைமுறைபடுத்திக்கொள்ள வேண்டும்.
செய்யக்கூடாதவை:
செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் அதிக நேரம் செலவிடுவதால் மன அழுத்தம் ஏற்பட்டு, முகப்பரு பிரச்சனை ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகையால் மின்னணு சாதனங்கள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். எண்ணெயில் பொறித்த உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.