என் மலர்
நீங்கள் தேடியது "actor kavin"
- டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் கிஸ் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ். இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் கிஸ்.
டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். படத்தின் இசையை ஜென் மார்டின் மேற்கொள்கிறார்.
இத்திரைப்படம் ஒரு ரோம் - காம் கதையம்சத்தில் உருவாகியுள்ளது . கிஸ் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டது. முதல் பாடல் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இப்பாடலை அனிருத் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
- இந்த படத்தில் கவின் பிச்சைக்காரனாக ஒரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள படம் `ப்ளடி பெக்கர்.' இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். ஜென் மார்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் கவின் பிச்சைக்காரனாக ஒரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்து இருப்பதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
தீபாவளி திருநாளான இன்று இந்த படம் வெளியாகி உள்ளது. இந்நிலையில் படம் குறித்து நடிகர் கவின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் காலங்கள் மாறும்...கனவுகள் பலிக்கும்...! இன்று முதல் உலகமெங்கும்...ப்ளடி பெக்கர் என பதிவிட்டுள்ளார்.