என் மலர்
நீங்கள் தேடியது "actor prabhu"
- ராஜபுத்திரன் திரைப்படத்தை கிரெசண்ட் சைன் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.
- நவ்ஃபால் ராஜா இசையமைக்க ஆலிவர் டெனி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.
நடிகர் பிரபு மற்றும் வெற்றி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ராஜபுத்திரன். இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் பிரபுவுடன் வெற்றி , தங்கதுரை, மன்சூர் அலிகான் மற்றும் இமான் அண்ணாச்சி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ராஜபுத்திரன் திரைப்படத்தை கிரெசண்ட் சைன் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. நவ்ஃபால் ராஜா இசையமைக்க ஆலிவர் டெனி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.
இப்படத்தின் முதல் பாடலான "உம்மா" பாடலை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது. இப்பாடலை மோகன் ராஜன் வரிகளில் டி.ராஜேந்தர் பாடியுள்ளார்.
இந்நிலையில், ராஜபுத்திரன் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க கோரி நடிகர் பிரபு வழக்கு தொடர்ந்திருந்தார்.
- தனக்கும் அன்னை இல்லத்திற்கும் தொடர்பு இல்லை என ராம்குமார் தரப்பு கூறியது.
சிவாஜி வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை எனவும், எதிர்காலத்திலும் உரிமை கோரமாட்டேன் எனவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராம்குமாரின் மகன் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க கோரி நடிகர் பிரபு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணைக்கு போது, "சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்கான எனக்கு சொந்தமான ரூ150 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என் வாழ்நாளில் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை" என பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, "ராம்குமார் உங்களுடைய சகோதரர்தானே? இப்போது அந்தக் கடன்களை நீங்கள் செலுத்திவிட்டு பிறகு அவரிடம் பெற்றுக்கொள்ளலாமே?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த பிரபு தரப்பினர்,"நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளார். நாங்கள் உதவ முடியாது" என குறிப்பிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, " தனக்கும் அன்னை இல்லத்திற்கும் தொடர்பு இல்லை" என ராம்குமார் தரப்பு கூறியது.
சிவாஜி வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை எனவும், எதிர்காலத்திலும் உரிமை கோரமாட்டேன் எனவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- அந்தக் கடன்களை நீங்கள் செலுத்திவிட்டு பிறகு அவரிடம் பெற்றுக்கொள்ளலாமே?
- வழக்கு தொடர்பான விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நடிகர் பிரபு தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, "சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்கான எனக்கு சொந்தமான ரூ150 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என் வாழ்நாளில் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை" பிரபு தரப்பு தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, "ராம்குமார் உங்களுடைய சகோதரர்தானே? இப்போது அந்தக் கடன்களை நீங்கள் செலுத்திவிட்டு பிறகு அவரிடம் பெற்றுக்கொள்ளலாமே?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த பிரபு தரப்பினர்,"நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளார். நாங்கள் உதவ முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பு வாதங்களை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
- நடிகர் பிரபு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- அவருக்கு லேசர் அறுவைச்சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டது.
சென்னை:
நடிகர் பிரபு உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிறுநீரகம் தொடர்பான பாதிப்பு இருந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு லேசர் அறுவைச்சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டது. பிரபு நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
- தமிழ் திரையுலகில் 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளவர் துணை நடிகர் பிரபு.
- இவரது உடலுக்கு இசையமைப்பாளர் இமான் இறுதி சடங்குகளை செய்தார்.
தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் துணை நடிகர் பிரபு. இவர் தமிழ் திரையுலகில் 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இவர் சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆதரவற்ற நிலையில் இருந்த பிரபுவுக்கு இசையமைப்பாளர் டி.இமான் மருத்துவ உதவிகள் செய்துவந்தார்.

இந்நிலையில் துணை நடிகர் பிரபு நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர் பிரபுவின் உடலுக்கு மருத்துவ உதவிகள் செய்த வந்த இசையமைப்பாளர் டி.இமான் இறுதி சடங்குகளை செய்தார்.