என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "actor rajinikanth"
- இன்று மாலை அல்லது நாளை டிஸ்சார்ஜ் ஆவார்.
- பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை.
சென்னை:
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
சென்னை போயஸ் கார்டனில் வசித்து வரும் ரஜினிகாந்த் தனது வீட்டில் இருந்தபோது அடிவயிற்றில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. செரிமான பிரச்சனையும் இருந்தது. இதைத்தொடர்ந்து நெஞ்சுவலியும் ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி மனைவி லதா மற்றும் குடும்பத்தினரிடம் ரஜினிகாந்த் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரஜினி காந்தை உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர்.
நேற்று இரவு 8 மணியள வில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்பல்லோ ஆஸ்பத்திரி யின் இருதய நோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் சாய்சதீஷ் தலைமையிலான டாக்டர் குழுவினர் ரஜினி காந்துக்கு என்னென்ன மருத்துவ பரிசோதனை களை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி ஆலோசித்தனர்.
ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு சீரான ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும் பட்சத்திலேயே நெஞ்சுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அது தொடர்பான பரிசோதனை களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ரஜினி காந்துக்கு வெறும் வயிற்றில் ரத்த பரிசோதனை உள்ளிட்ட சில பரிசோதனை கள் இன்று காலை 6 மணி அளவில் மேற்கொள்ளப் பட்டன. இதன்பிறகு காலை உணவை முடித்த பிறகும் பரிசோதனைகள் செய்யப் பட்டன.
இதன் தொடர்ச்சியாக இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் உள்ள அடைப்பை கண்டறிவ தற்கான "ஆஞ்சியோகி ராம்" பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையில் அடிவயிற்றில் ரத்த நாளத்தில் லேசான வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை சரி செய்வதற்காக ஆஞ்சியோ சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ரத்தக் குழாய் களில் ஏற்பட்டிருந்த அடைப்புகள் சரி செய்யப்பட்டன. இந்த சிகிச்சை முடிந்ததும் ரஜினிகாந்த் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதன் பின்னர் ஐ.சி.யூ.வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ள ரஜினிகாந்த் இன்று மாலை அல்லது நாளை டிஸ்சார்ஜ் ஆவார் என்று தெரிகிறது.
ரஜினிகாந்துக்கு கடந்த 2011-ம் ஆண்டு சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டது. இதற்காக போரூர் ராமச் சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொண்ட அவர் சிங்கப்பூருக்கு சென்றும் உயர் சிகிச்சை பெற்றார்.
அப்போது ரஜினி காந்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில்தான் அடி வயிற்றில் வீக்கமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்துக்கு சிறுநீரகத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதா? என்பது பற்றிய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பாக டாக்டர்கள் கூறும்போது,
"ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலமுடன் உள்ளார். பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை" என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்துக்கு பெரிய அளவில் உடல்ந லக்குறைவு ஏற்பட்டிருந்தது. அப்போது அவர் அமெ ரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பி இருந்தார். உடல் நிலையை கருத்தில் கொண்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் அரசியல் பிரவே சம் செய்வதையும் அவர் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.
- சட்லஜ் நதியில் விழுந்து கார் விபத்துக்குள்ளானது.
- வெற்றி துரைசாமியின் சடலம் 8 நாட்களுக்கு பிறகு மீட்கபட்டது.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாச்சல பிரதேசத்தின் சட்லஜ் நதியில் விழுந்து கார் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.
இவரது சடலம் 8 நாட்களுக்கு பிறகு மீட்கபட்டது. பின்னர், சென்னைக்கு உடல் கொண்டு வரப்பட்டதை அடுத்து, இறுதிச்சடங்கு நடைபெற்றது.
இந்நிலையில், வெற்றி துரைசாமி மறைவுக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.
- பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.
- ரஜனிகாந்த், தனுஷ், அமிதாபச்சன் உள்ளிட்டோர் விழாவிற்கு வருகை.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரம் இன்று காலை ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது.
அயோத்தி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்- பாடலுடன் தீபாவளி போல இன்றைய விழாவை கொண்டாடினார்கள்.
இதைதொடர்ந்து, மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது.
பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.
முன்னதாக, ராமர் கோவில் விழாவில் பங்கேற்பதற்காக கோவிலின் அறகட்டளை சார்பில் முக்கிய தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில், அரசியல் முக்கிய தலைவர்கள் தவிர, ரஜனிகாந்த், தனுஷ், அமிதாபச்சன் உள்ளிட்டோர் விழாவிற்கு வருகை தந்தனர்.
இந்நிலையில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முடிந்து வீடு திரும்பும்போது நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாக அயோத்தி ராமர் கோவிலுக்கு வருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
- தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.
புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தமிழன்டா என்ற ஹேஷ்டேக் உடன் டுவீட் செய்துள்ளார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல்.
#தமிழன்டா
தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டியில் ஐதராபாத் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
- அடுத்த போட்டியில் பஞ்சாப் அணியை வரும் 5-ம் தேதி எதிர்கொள்கிறது.
ஐதராபாத்:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 4-வது லீக்கில் ஐதராபாத் சன்ரைசர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி வரும் 5-ம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக மோதுகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விமானத்தில் உட்கார்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். இதனை ராஜஸ்தான் அணி தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் யாரு தலைவர் ரசிகர் என்று தலைப்பிட்டுள்ளது.
வீடியோ பின்னணியில் ரஜினி படையப்பா பட தீம் மியூசிக் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ரஜினிகாந்தை உத்தவ் தாக்கரே குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
- ரஜினிகாந்த் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தார்.
மும்பை :
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் தனது மனைவி லதாவுடன் மும்பை வந்துள்ள ரஜினிகாந்த் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தார். போட்டியின் போது மைதானத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டார்.
ரஜினிகாந்துடன் மராட்டிய கவர்னர் ரமேஷ் பயஸ், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டவர்களும் போட்டியை பார்த்து ரசித்தனர்.
இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை திடீரென சந்தித்து பேசினார். ரஜினிகாந்தை உத்தவ் தாக்கரே குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இது தொடர்பாக ஆதித்ய தாக்கரே தனது டுவிட்டர் பதிவில், ''ரஜினிகாந்த் மீண்டும் மாதோஸ்ரீ வந்ததில் மிக்க மகிழ்ச்சி'' என தெரிவித்து உள்ளார்.
ரஜினிகாந்த், உத்தவ் தாக்கரே சந்திப்பு அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதை நிமித்தமானது என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாதோஸ்ரீயில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேயை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மும்பை கிரிக்கெட் சங்க தலைவருடன் இணைந்து அவர் போட்டியை நேரில் காண்கிறார்.
- இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மும்பை:
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசிக்கிறார்.
மும்பை கிரிக்கெட் சங்க தலைவருடன் இணைந்து அவர் போட்டியை நேரில் காண்கிறார்.இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்