என் மலர்
நீங்கள் தேடியது "Actor Soori"
- ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது.
- கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன்.
சென்னை:
தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
அதன்படி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ், விஷால், விஜய் ஆண்டனி, அரவிந்த் சாமி, ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு, நடிகைகள் குஷ்பு, ஆண்ட்ரியா, திரிஷா, அதிதி, இயக்குனர்கள் சங்கர், வெற்றி மாறன், பா.ரஞ்சித், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலரும் தனது வாக்கினை பதிவு செய்தனர்.
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற நடிகர் சூரிக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நடிகர் சூரி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன். ஆனால் இந்த முறை என்னுடைய பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். எனது மனைவியின் பெயர் உள்ளது.
ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது. எங்கு தவறு நடந்ததென தெரியவில்லை. வேதனையுடன் கூறுகிறேன். தயவு செய்து அனைவரும் 100 சதவீதம் வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.
எல்லோரும் வாக்களியுங்கள்? pic.twitter.com/Yw6Xk0Hgsn
— Actor Soori (@sooriofficial) April 19, 2024
- 'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' படத்தில் நடித்துள்ளார்.
'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சூரி, சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சூரி பல திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், ஆனால் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் சூரி திரைப் பயணத்தில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. சூரிக்கு மாபெரும் அங்கீகாரத்தை கொடுத்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை- 2 பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' படத்தில் நடித்துள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் மே 21 ஆம் தேதி காலை சென்னை சத்யம் சினிமாவில் 9.30 மணியளவில் நடைப்பெறவுள்ளது. இதில் யுவன் ஷங்கர் ராஜா, வெற்றி மாறன் மற்றும் படக்குழுவினர் பங்குப்பெறவுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த மதிமாறன் புகழேந்தி இயக்கவுள்ளார்.
- விடுதலை 1, விடுதலை 2 ஆகிய படங்கள் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியானது.
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் சூரி, அடுத்தகட்ட முயற்சியாக கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.
சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை இரண்டாம் பாகமும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். விடுதலை 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த மதிமாறன் புகழேந்தி இயக்கவுள்ளார்.
இந்த படத்தை தயாரிக்கும் ஆர்எஸ் இன்போடெய்ன்மென்ட், சூரி நடிப்பில் மதிமாறன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது" என அறிவித்துள்ளது.
இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இதற்கு முன்பு செல்ஃபி என்கிற படைத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தகது.
- சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது.
- இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் சூரி, அடுத்தகட்ட முயற்சியாக கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.
சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை இரண்டாம் பாகமும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். விடுதலை 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், விடுதலை 2 படம் வெளியாகி 25 நாட்கள் ஆன நிலையில் நடிகர் சூரி நெகிழ்ச்சி பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகர் சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
விடுதலை 1, விடுதலை 2 ஆகிய திரைப்படங்கள் என் வாழ்க்கையில் மிகவும் மாற்றத்தை ஏற்படுத்திய படங்களாக எப்போதும் இருக்கும். குமரேசனாக நடிப்பது என் வாழ்க்கையில் என்றென்றும் ஒரு சிறப்பு மற்றும் வரையறுக்கும் பாத்திரமாக இருக்கும்.
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட எனது தொலைநோக்கு இயக்குனர் வெற்றிமாறன் சார், எனது தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார் மற்றும் இந்த மறக்க முடியாத பயணத்தை சாத்தியமாக்கிய எனது சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு பெரிய நன்றி.
அனைத்து உதவியாளர் மற்றும் இணை இயக்குநர்களுக்கும் ஒரு சிறப்பு பாராட்டு - உங்கள் கடின உழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு இல்லாமல், இவ்வளவு சிறப்பு வாய்ந்த திட்டத்தில் நான் இந்த மைல்கல்லை எட்டியிருக்க மாட்டேன்.
உங்கள் உண்மையான அன்பு மற்றும் ஆதரவிற்காக அனைத்து ஊடகங்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கும் என்றென்றும் நன்றி. நீங்கள் எனது மிகப்பெரிய பலம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.