என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actress Gautami"

    • கவுதமியை பொறுத்தவரை பந்தா இல்லாமல் பணியாற்றுபவர்.
    • கவுதமி கஷ்டப்படுகிறார், துன்பப்படுகிறார், நீதி கிடைக்கவில்லை என்பது எனக்கு தெரியாது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் விளையாட்டு துறையில் சிறப்பிடம் பெறுபவர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் உள்ள போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்.

    நடிகை கவுதமியின் சொத்து பாதுகாக்கப்பட வேண்டும். பெண்கள் அரசியலில் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

    அரசியலில் பணியாற்ற அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். கவுதமியை பொறுத்தவரை பந்தா இல்லாமல் பணியாற்றுபவர்.

    அவர் பிரச்சனை தீர்க்கப்பட்டு இருக்கலாம். என்னிடம் அவரது பிரச்சனை வரவில்லை. அவர் கஷ்டப்படுகிறார், துன்பப்படுகிறார், நீதி கிடைக்கவில்லை என்பது எனக்கு தெரியாது.

    தெரிந்திருந்தால் உதவி செய்து இருப்பேன். கரு அழகப்பனை எனக்கு தெரியாது. அவர் கோவில் கோவிலாக செல்வார். என்னை வந்து பார்த்தார். அதைத் தவிர வேறு இணைப்பு எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுயநலமில்லாத கடின உழைப்பாளியாக பா.ஜனதாவில் பணியாற்றினார்.
    • கவுதமியின் எதிர்கால திட்டங்களுக்கு எனது வாழ்த்துகள்.

    சென்னை:

    நடிகை கவுதமி பா.ஜனதாவில் இருந்து விலகினார். கனத்த இதயத்துடன் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்து இருந்தார்.

    கவுதமி கட்சியில் இருந்து விலகினாலும் அவருக்கு துணை நிற்போம் என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

    இந்த நிலையில் கவுதமி விலகல் குறித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தனது வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது சக உறுப்பினரான கவுதமி பா.ஜனதாவில் இருந்து வெளியேறியது வருத்தமாக உள்ளது. அவர் நல்ல பண்பாளர். சுயநலமில்லாத கடின உழைப்பாளியாக பா.ஜனதாவில் பணியாற்றினார். அவரது எதிர்கால திட்டங்களுக்கு எனது வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக பாத்திமா அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • அதிமுக விவசாயப்பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நடிகை கவுதமி அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    மேலும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளராக தடா பெரியசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக பாத்திமா அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதிமுக விவசாயப்பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதிமுகவில் மிகப்பெரிய பதவியாக கருதப்படுவது கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி. அதிமுகவில் நீண்ட காலம் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி நடிகை கவுதமிக்கு இபிஎஸ் வழங்கியுள்ளார்.

    ×