என் மலர்
நீங்கள் தேடியது "actress priyamani"
- எனக்கு இதுபோன்ற கசப்பான அனுபவம் ஏற்படவில்லை.
- பாலியல் தொல்லையை எதிர்கொண்டவர்களும் என்னிடம் வந்து சொன்னது இல்லை.
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகைகள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பாலியல் தொல்லை அனுபவங்களையும் பகிர்கிறார்கள். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் பிரியாமணியும் இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.
பிரியாமணி கூறும்போது, ''மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அமைத்து அறிக்கை வெளியாகி இருப்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது. சில நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்கிறார்கள்.
மலையாளத்தில் கமிட்டி அமைத்ததுபோல தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட பட உலகிலும் கமிட்டிகள் அமைத்தால் நல்லது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும். திரைத்துறை மட்டுமன்றி எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கின்றன. பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தைரியமாக பேசுவது அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு ஆதாரம் தரமுடியாது. இப்போது கேமரா போன்கள் வந்துள்ளன. ஆனாலும் இப்போது வெளிப்படையாக பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அப்படியே தொடர வேண்டும்.
எனக்கு இதுபோன்ற கசப்பான அனுபவம் ஏற்படவில்லை. பாலியல் தொல்லையை எதிர்கொண்டவர்களும் என்னிடம் வந்து சொன்னது இல்லை'' என்றார்.
- தளபதி 69 படத்திலும் பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
- பிரியாமணி தொழில் அதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கண்களால் கைது செய்' படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் பிரியாமணி. 'பருத்தி வீரன் இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரியாமணி தற்போது பிசியாக நடித்து வருகிறார்.
எச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்திலும் பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
பிரியாமணி தொழில் அதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை பிரியாமணி திருமணம் செய்து கொண்டது அப்போது விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரியாமணி தனது திருமணம் தொடர்பாக எழுந்த விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ஒரு முஸ்லிமை திருமணம் செய்வதன் மூலம் எனக்கு பிறக்கப்போகும் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்கள் என்று சிலர் குறுஞ்செய்தி அனுப்பினர். அது என்னை மிகவும் பாதித்தது. ஜாதி அல்லது மதத்தை மீறி திருமணம் செய்துகொண்ட பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். அவர்கள் மத வேறுபாடின்றி ஒருவரையொருவர் காதலித்தார்கள். ஏன் அவர்கள் மீது இவ்வளவு வெறுப்பு காட்டப்படுகிறது என்று புரியவில்லை.
பிரியாமணி இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக எழுந்த விமர்சனத்துக்கு பதில் அளித்த பிரியாமணி, "நான் மதம் மாறிவிட்டேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? இது என் முடிவு. நான் மதம் மாறமாட்டேன் என்று திருமணத்திற்கு முன்பே முஸ்தபாவிடம் தெரிவித்துள்ளேன். நான் இந்து மதத்தில் பிறந்தவள். ஆகையால், எப்போதும் என் நம்பிக்கையைப் பின்பற்றுவேன். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையை மதிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.