என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aditi Rao"

    மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ‘காற்று வெளியிடை’ மற்றும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்த அதிதி ராவ், அடுத்ததாக தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்த இருக்கிறார். #AaditiRao
    மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் பரவலான கவனம் பெற்ற அதிதி ராவ் மீண்டும் அவரது இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்தார்.

    அரவிந்த சாமியின் காதலியாக வந்த அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.

    அதைத் தொடர்ந்து தனுஷுடன் இணைந்து புதிய இருமொழிப் படத்தில் நடிக்கவுள்ளார். தமிழைப்போலவே தெலுங்கிலும் தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.



    சம்மோஹனம் படத்தில் தெலுங்கில் அறிமுகமான அவர் தற்போது தேசியவிருது பெற்ற சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் அண்டரிக்‌‌ஷம் படத்தில் நடிக்கிறார். வருண் தேஜ் கதாநாயகனாக நடித்து வருகிறார். டிசம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். வரலாற்றுக் கதைகள், காதல், கிரைம் திரில்லர், சைக்கோ திரில்லர், விண்வெளி தொடர்பான படம் என தொடர்ந்து தான் தேர்ந்தெடுக்கும் திரைக்கதைகளில் அதிதி வித்தியாசம் காட்டிவருகிறார்.
    மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’, மற்றும் தற்போது உருவாகி ‘செக்கச்சிவந்த வானம்’ ஆகிய படங்களில் நடித்து வரும் அதிதி ராவ், ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார். #AditiRao
    நடிகை அதிதி ராவ் தமிழில் 2007ஆம் ஆண்டு ‘சிருங்காரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின் பாலிவுட் படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தார்.

    மீண்டும் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் நல்ல அறிமுகம் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார்.

    கடந்த ஜூன் 15ஆம் தேதி வெளியான ‘சம்மோஹனம்’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார் அதிதி. அப்படத்தில் அவரது நடிப்பை இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தனர்.

    இந்நிலையில் தனது ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அதிதி ராவ் ராஜமவுலியின் பாராட்டு குறித்து கூறுகையில், “அவரது பாராட்டு காவிய கதை சொல்லின. அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் தூண்டிவிட்டுள்ளது.



    ஏற்கனவே மணிரத்னம், சஞ்சய் லீலா பன்சாலி எனப் பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ள எனக்கு ராஜமவுலி படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவும், விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
    ×