search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "adjourns"

    2014-ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் கூடிய 16-வது பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. மக்களவையும், மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. #LokSabhaadjourns #RajyaSabhaadjourns
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்தின் 16-வது மக்களவையின் ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. 17-வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக விரைவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
     
    16-வது மக்களவையின் இறுதி (இடைக்கால) பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றினர். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது.

    இன்றைய கூட்டத்தின்போது, கவர்ச்சிகரமான போலி முதலீட்டு திட்டங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கும் மசோதா, தனிநபர் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரும் சட்டவிதியில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்கும் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 

    மேலும், டெல்லியில் 1951ம் ஆண்டு நிறுவப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவகம் நிர்வாகத்தின் நிரந்தர உறுப்பினராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி வகிக்க முன்னர் அதிகாரமளிக்கப்பட்டு இருந்தது. இந்த உரிமையை ரத்துசெய்யும் சட்டத்திருத்தமும் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    எனினும், ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் முடங்கிக் கிடக்கும் முத்தலாக் முறை ஒழிப்பு மசோதா, இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் மாநிலங்களவையில் முடங்கிக்கிடக்கும் நிலையில் 16-வது பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது. 



    இறுதிநாள் கூட்டத்தின்போது மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய சட்டங்களை சுட்டிக்காட்டி உரையாற்றினார். இவற்றுக்கெல்லாம் ஆதரவு அளித்த பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். 

    பின்னர், தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக இன்று மாலை 5 மணியளவில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். முன்னதாக, இன்று பிற்பகல் 2 மணியளவில் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவை சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். #LokSabhaadjourns  #RajyaSabhaadjourns
    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை ரத்து செய்யக்கோரிய அமலாக்கத்துறையின் மனுவை டெல்லி பாடியாலா நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
    புதுடெல்லி:

    முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

    இந்த தடையை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை டெல்லி பாடியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் மாதம் 8-ம் தேதிக்கு மனுவை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

    சமீபத்தில் கார்த்தி சிதம்பரம் அமெரிக்கா செல்ல தடை கோரிய அமலாக்கத்துறையின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து அவரை அமெரிக்கா செல்ல அனுமதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் அமெரிக்கா செல்ல உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
    புதுடெல்லி:

    முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது. மேலும், கார்த்தி சிதம்பரம் அமெரிக்க செல்ல அனுமதி வேண்டி மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனது வாதத்தை முன்வைத்த அமலாக்கத்துறை, வழக்கு விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளது. இதனால் அவர் வெளிநாடுகள் செல்ல அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுத்தது.



    இதனால் அவர் வெளிநாடுகள் செல்ல இனிமேல் அனுமதிக்க கூடாது என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து இருந்தது. மேலும், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான இடைக்கால தடையையும் ரத்து செய்யவும் வேண்டியிருந்தது.

    இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், செப்டம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் அமெரிக்கா செல்லவும் அனுமதி வழங்கி  உத்தரவிடப்பட்டுள்ளது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
    ×