search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Advani"

    பாராளுமன்ற மக்களவை ஒழுங்குமுறை குழு தலைவராக பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று மீண்டும் நியமித்துள்ளார். #BJP #Advani #EthicsPanel
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் எம்.பி.க்கள் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக புகார்கள் குறித்து விசாரிக்க மக்களவை ஒழுங்குமுறை குழு உள்ளது. நன்னடத்தை விதிமுறைகளை மீறும் எம்.பி.க்கள் சம்பவம் குறித்து தானாக முன்வந்து விசாரிக்கும் அதிகாரம் இக்குழுவிற்கு உள்ளது.

    இக்குழுவின் தலைவராக பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இருந்து வந்தார். இந்நிலையில், இந்த பதவியில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவரை மீண்டும் இன்று  நியமித்துள்ளார்.

    இதேபோல், பாராளுமன்ற கூட்டங்களில் பங்கேற்காத உறுப்பினர்களை கண்காணிக்கும் குழுவின் தலைவராக பி.கருணாகரன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


    மேலும், அரசு அளித்த வாக்குறுதிகள் தொடர்பான குழுவின் தலைவராக ரமேஷ் போக்ரியால் நிஷான்க், அவையில் முன்வைக்கப்பட்டும் மசோதாக்கள் கண்காணிப்பு குழுவின் தலைவராக சந்திரகாந்த் பி கைரே மற்றும் துணை சட்டங்கள் குழுவின் தலைவராக திலிப்குமார் மன்சுக்லால் காந்தி ஆகியோரும் மீண்டும் அப்பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மக்களவை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #BJP #Advani #EthicsPanel
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மக்களுக்காகவே வாந்தவர் என டெல்லியில் இன்று நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். #PMModi #AtalBihariVajpayee
    டெல்லி:

    பாஜகவின் நிறுவன தலைவரும் மூன்று முறை இந்திய பிரதமராகவும் பதவி வகித்த அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி வயோதிகம் காரணமாக காலமானார். அவரது உடல் மறுநாள் எரியூட்டப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் வாஜ்பாய்க்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித் ஷா, அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நிஹாரிகா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.



    பிரதமர் மோடி பேசுகையில், “வாஜ்பாய் மக்களுக்காகவே வாழ்ந்தவர். அவர் அரசியலுக்கு வரும் போது இங்கு ஒரு குடும்பம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை இருந்தது. எந்த அழுத்தத்துக்காகவும் தனது முடிவில் பின்வாங்காதவர். பல ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையிலேயே அவர் இருந்தாலும் தனது கொள்கையில் என்றும் சமரசம் செய்தது இல்லை” என பேசினார்.

    பாஜக மூத்த தலைவர் அத்வானி, “பல பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறேன். ஆனால், வாஜ்பாயின் நினைவு கூட்டத்தில் பேசுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. 65 ஆண்டுகளாக அவருடன் பழகியிருக்கிறேன். ஒன்றாக சினிமா பார்த்துள்ளோம். ஒன்றாக பல இடங்களில் சுற்றியுள்ளோம்” என தனது நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.
    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #VenkaiahNaidu #LKAdvani #RajnathSingh
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே, இன்று காலை முதல் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.

    இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



    இதுதொடர்பாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறுகையில், வாஜ்பாயின் ஆளுமை, கடமையின் மீதான பக்தி, தலைமைப் பண்பு நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும். பன்முகத்தன்மை கொண்ட ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது என இரங்கல் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவால் தாங்க முடியாத துயரத்தில் உள்ளேன் என பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    வாஜ்பாய் மறைவு செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தியது, மிகச்சிறந்த தலைவரை தேசம் இழந்துள்ளது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #VenkaiahNaidu #LKAdvani #RajnathSingh
    பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு மோடியை விட காங்கிரஸ் கட்சி அதிக மரியாதை தந்துள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Advani #Modi #Rahul
    மும்பை:

    மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அனைத்து தரப்பு மக்களை மும்பை நகரம் உள்வாங்கி கொண்டு செயல்படுவதுபோல் காங்கிரஸ் கட்சியும் அனைத்து பிரிவுகளை சேர்ந்த மக்களையும் ஒன்றிணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க செயல்பட்டு வருவதாக ராகுல் தெரிவித்தார்.

    கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வந்த ஒரு மூத்த அரசியல்வாதி, இந்த நாட்டை பாதுகாக்க காங்கிரசால்தான் முடியும் என 50 ஆண்டுகளுக்கு பிறகு உணர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் சித்தாந்தத்தை காங்கிரசால் மட்டுமே தோற்கடிக்க முடியும்.


    நாங்கள் வாஜ்பாயை எதிர்த்து போட்டியிட்டதுண்டு. ஆனால், தற்போது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் காங்கிரசின் போர்வீரன் என்ற முறையில் அவரை சந்திப்பதற்கு முன்னுரிமை தந்து வாஜ்பாயை நான் பார்க்கச் சென்றேன். அவர் இந்த நாட்டுக்காக பணியாற்றியவர், பிரதமராக இருந்தவர் என்பதால் நாங்கள் அவரை மதிக்கிறோம். இதுதான் எங்கள் கலாசாரம்.

    மோடியின் குருவாக இருந்தவர் அத்வானி. ஆனால், சில நிகழ்ச்சிகளில் தனது குருவான அத்வானியைகூட பிரதமர் மோடி மரியாதை அளிக்காததை நான் பார்த்திருக்கிறேன். மோடியைவிட அத்வானிக்கு காங்கிரஸ் கட்சி அதிக மரியாதை தந்து வந்துள்ளது. இன்று நான் அத்வானிக்காக வேதனைப்படுகிறேன். #Congress #Advani #respectAdvani #Modi #Rahul
    நாக்பூர் நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய சிறப்புரையை பா.ஜ.க. தலைவர் அத்வானி பாராட்டியுள்ளார். #pranab #rss #advani #congress
    இந்தூர்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் அந்த இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான உபச்சார விழா நேற்று நடந்தது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டபோதே சர்ச்சை வெடித்தது. அவர் இதில் பங்கேற்க கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் பலர் தங்களது அதிருப்தி தெரிவித்தனர்.

    இதற்கிடையே, பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் நாக்பூர் வந்தடைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த குறிப்பேட்டில் “பாரத மாதாவின் சிறந்த மகனுக்கு அஞ்சலி செலுத்த இங்கே வந்துள்ளேன்” என எழுதி கையெழுத்திட்டார்.

    அதன்பின், உபச்சார விழாவில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி பேசுகையில், தேசியவாதமும், தேசபக்தியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. நாட்டின் பன்முகத்தன்மையை நாம் கொண்டாட வேண்டும். ஒரு சிலரை தனிமைப்படுத்திவிட்டு நாம் பன்முகத்தன்மையை பார்க்கமுடியாது என குறிப்பிட்டார்.

    இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் கருத்தை இன்று ஆமோதித்த பா.ஜ.க. மூத்த தலைவர் லால் கிஷன் அத்வானி, ஆர்.எஸ்.எஸ். அழைப்பை ஏற்று இவ்விழாவில் கலந்துகொண்ட பிரணாப் முகர்ஜி, இதன் மூலம் இந்திய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் சித்தாந்த வேற்றுமைகளுக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண முடியும் என்பதை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நிரூபித்துள்ளதாகவும், பன்முக மதநம்பிக்கை கொண்ட நமது சமூகத்தின் வேற்றுமையில் ஒற்றுமையை காணும் நனது நாட்டின் ஒருமைப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் நிலைநாட்டியுள்ளதாகவும் அத்வானி குறிப்பிட்டுள்ளார். #pranab #rss #advani #congress
    ×