என் மலர்
நீங்கள் தேடியது "Afghan"
- உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
- சமீபத்தில் தலைநகர் காபூல் உள்ளிட்ட மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அங்குள்ள பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாணவிகள் கல்வி கற்கவும் தடைவிதிக்கப்பட்டது. உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சமீபத்தில் தலைநகர் காபூல் உள்ளிட்ட மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் பெண் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் வெளியில் காரில் செல்லும் போது ஆண் துணை இல்லாமல் செல்லக்கூடாது என்றும் கட்டாயம் புர்கா உடை அணிந்து செல்லவேண்டும் என்றும் தலிபான் அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- அமைச்சக வளாகத்திற்குள்ளேயே தற்கொலை படைதாக்குதல்.
- தலிபான் அதிகாரத்தை கைப்பற்றிய பின் கேபினட் மந்திரி கொல்லப்படுவது இதுவே முதல்முறை.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், அந்நாட்டின் தலிபான் அகதிகள் இலாகா மந்திரி மற்றும் இருவர் கொல்லப்பட்டனர்.
தலிபான் ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று வருடத்திற்கு முன் ஆட்சியை பிடித்தது. அதன்பின் தலிபான் வட்டாரத்தில் உள்ள தலைவர் மீது நடைபெற்ற மிகப்பெரிய தற்கொலைப்படை தாக்குதல் இதுவாகும்.
அகதிகள் அமைச்சக வளாகத்திற்குள் நடைபெற்ற தாக்குதலில் மந்திரி கலில் ஹக்கானி கொல்லப்பட்டார். இவர் உள்துறை பொறுப்பு மந்திரி சிராஜுதீன் ஹக்கானி மாமனார் ஆவார். சிராஜுதீன் ஹக்கானி தலிபான் நெட்வொர்க்கில் அதிகாரமிக்க தலைவராக உள்ளார்.
தலிபான் பதவி ஏற்ற பிறகு கேபினட்டில் உள்ள ஒரு தலைவர் கொல்லப்படுவது இதுதான் முதல்முறையாகும். குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.
மெக்சிகோ எல்லை வழியாக அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்ப வேண்டும் என்பது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கனவு திட்டமாகும்.
இதற்காக நிதி ஒதுக்கும்படி நாடாளுமன்றத்தில் டிரம்ப் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிப்பட்டதை தொடர்ந்து, அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதன் மூலம் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப தேவையான தொகையை ராணுவ நிதியில் இருந்து பெறமுடியும்.

இதுபற்றி அவர் கூறுகையில், “பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை எவ்வித பாதிப்பும் இல்லாமல் மாற்றியமைத்து, அதில் இருந்து 1.5 பில்லியன் டாலரை மெக்சிகோ எல்லையில் 120 மைல் தூரத்துக்கு சுவர் எழுப்புவதற்காக ஒதுக்கியுள்ளோம்” என தெரிவித்தார்.
மேலும், இந்த நிதியானது, முந்தைய ஆண்டில் பாகிஸ்தானுக்கு வழங்காமல் நிறுத்திவைத்த நிதியுதவி, நிறைவேற்றப்படாத திட்டங்களின் நிதி உள்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்து திரட்டப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பக்லான் மாகாணத்தில் தலீபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பக்லான்-இ-மர்காஷி மாவட்டத்தில் ஆப்கான் ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த குகைகள் மற்றும் ஆயுதகிடங்குகள் மீது வான் வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான முல்லா முகமது மற்றும் அவரது பாதுகாவலர் கொல்லப்பட்டனர். ஆப்கான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்ட பரிதாபம் அரங்கேறி உள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.
இதுபற்றி அந்தப் பகுதியை சேர்ந்த எம்.பி. முகமது ஹாசிம் அல்கோஜாய் கூறும்போது, “ஒரு வான்தாக்குதலில் 13 பேர் பலியாகினர். மற்றொரு வான்தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இவ்விரு தாக்குதல்களும் 8-ந் தேதி இரவு நடந்துள்ளது” என குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய பகுதியில் இருந்து மருஃப் மாவட்டத்துக்கு ராணுவ வீரர்களை ஏற்றிவந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதி, நொறுங்கி தீபிடித்தது.

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை தவிர ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்பட பல்வேறு பயங்கரவாத இயக்கங்களும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன. இவர்களின் கொட்டத்தை ஒடுக்க ஆப்கான் ராணுவம் போராடி வருகிறது.
இந்த நிலையில் ஆப்கான் தேசிய ராணுவப்படையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர். அவர்கள் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிகளை சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தினர்.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் இந்த அதிரடி நடவடிக்கையில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இவர்களில் 42 பேர் தரைவழி தாக்குதலிலும், 26 பேர் வான்தாக்குதலிலும் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 21 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும், 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூடுதலாக தெரிவிக்கின்றன. #Afghan #NationalDefense #SF
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியாமல் ஆப்கான் வீரர்களும், நேட்டோ படை வீரர்களும் திணறி வருகிறார்கள்.
இந்தநிலையில் குண்டூஸ் மாகாணத்தின் தாஸ்தி ஆர்ச்சி மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் நேற்றுமுன்தினம் இரவு பாதுகாப்புபடை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த தலீபான் பயங்கரவாதிகள் பாதுகாப்புபடை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை மூண்டது. விடிய விடிய நீடித்த மோதலில் பாதுகாப்புபடை வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதே போல் ஷஜ்வான் மாகாணத்தின் காம்யாப் மாவட்டத்தில் போலீஸ் படையினருக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் போலீசார் 8 பேர் உயிர் இழந்தனர். 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
சமான்கான் மாகாணத்தில் தாரா சுப் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் போலீசார் 14 பேர் பலியாகினர். சாரி புல் மாகாணத்தின் தலைநகர் சாரி புல்லில் உள்ள ராணுவ சோதனை சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள் உயிர் இழந்தனர். அதே சமயம் ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களில் நடந்த இந்த தாக்குதல்களில் தலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #Afghan #Taliban