search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aforapple"

    • ஜீவா நடிப்பில் வெளிவந்த ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை இதற்கு முன் அட்லீ தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • அட்லீ தனது "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

    ஆர்யா, சந்தானம் , நசிரியா, நயன்தாரா, ஜெய் நடிப்பில் 2013 வெளிவந்த ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் அட்லீ.

    பின்னர், நடிகர் விஜய் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு தெறி, 2017 ஆம் ஆண்டு மெர்சல் மற்றும் 2019 ஆம் ஆண்டு பிகில் என அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை இயக்கினார் அட்லீ.

    3 படங்களுமே வசூலை அள்ளியது. இதற்கு அடுத்து 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஐகானான நடிகர் ஷாருக்கான் நடிப்பில் "ஜவான்" படத்தை இயக்கி பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

    நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுக்கோண் நடித்த இப்படம் இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது ஜவான்.

    இதற்கிடையே, அட்லீ தனது "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

    அந்த வகையில், "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தின் மூலம் தமிழ்த்திரை துறையில் அறிமுகமானார்.

    இந்நிலையில், பாலாஜி தரணிதரன் அடுத்ததாக இயக்கும் படத்திற்கு இயக்குனர் அட்லீ-யின் "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

    இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வத் தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைதொடர்ந்து, அட்லீயின் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து தமிழ் படங்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜீவா நடிப்பில் வெளிவந்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தை இதற்கு முன் அட்லீ தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×