என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "agriculture department"
- மழைப்பொழிவில் பெரும் பங்களிப்பை அளித்து விவசாயத்துக்கு உதவுகிறது.
- ஒவ்வொரு விவசாயியும் அதிகபட்சமாக 400 மரக்கன்றுகள் வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
உடுமலை:
மரம் வளர்ப்பு என்பது விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டித் தருவதுடன் பலவிதமான நன்மைகள் தரக்கூடியதாகவும் உள்ளது.இதுகுறித்து மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொதுவாக மரப்பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. தனிப்பயிராக மரப்பயிர்கள் சாகுபடி செய்ய வசதியில்லாதவர்கள் ஊடுபயிராகவோ, வேலிப்பயிராகவோ சாகுபடி செய்யலாம்.இவ்வாறு மரப்பயிர்களை சாகுபடி செய்யும்போது அவை அரணாக நின்று பலத்த காற்றினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்க உதவுகிறது. மேலும் பறவைகளின் இருப்பிடமாக இருப்பதன் மூலம் பயிருக்கு தீங்கு தரும் பூச்சிகளுக்கு எதிரியாக இருக்கிறது. மேலும் மழைப்பொழிவில் பெரும் பங்களிப்பை அளித்து விவசாயத்துக்கு உதவுகிறது.
மரப்பயிர்கள் சாகுபடிக்காக மடத்துக்குளம் வட்டாரத்துக்கு நடப்பு ஆண்டில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வனத்துறையின் நாற்றுப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட தரமான தேக்கு, மகாகனி, செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் வேளாண்மைத்துறை மூலம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. வரப்பு ஓரங்களில் நடவு செய்வதற்கு ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், தனிப்பயிராக சாகுபடி செய்வதற்கு ஏக்கருக்கு 150 மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு விவசாயியும் அதிகபட்சமாக 400 மரக்கன்றுகள் வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
வரும் பருவமழைக்காலத்தில் மரக்கன்றுகள் நடவு செய்வதன் மூலம் சீரான வளர்ச்சியைப் பெற முடியும். எனவே வேளாண்மைத்துறை மூலம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- குறைந்தபட்சம் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் அளவில் நிலம் இருத்தல் அவசியம் ஆகும்.
- கிசான் அட்டையை பயன்படுத்தி வங்கிகளில் எந்த அடகும் இன்றி ரூ. 1 லட்சம் வரை கடன் பெறும் வசதி உள்ளது.
அம்பை:
அம்பை வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிசான் கடன்அட்டை
வேளாண்மைத்துறை சார்பாக அம்பை வட்டா ரத்தில் கிசான் கடன் அட்டைகள் பெற முகாம்கள் இன்று முதல் நடத்தப்பட உள்ளது. விவசாயிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
கிசான் கடன் அட்டைகள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
வங்கிகளை விவசாயிகள் அணுகும் சிரமங்களை குறைப்பதற்காக கிசான் கடன் அட்டைக்கான விண்ணப்ப படிவங்கள், ஆவணங்கள் விவசாயிகளிடம் இருந்து பெற்று வேளாண்மைதுறை மூலம் அந்தந்த வங்கி களுக்கு அனுப்பப் படுகிறது. இதற்கான முகாம்கள் அம்பை, அயன் சிங்கம்பட்டி மற்றும் விக்கிரமசிங்கபுரம் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் அமைக்கப் பட்டு இன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆதார் அட்டை
விவசாயிகள் தங்கள் நில உடமை ஆவணங் களுடன் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், புகைப்படம் ஆகிய வற்றுடன் தங்கள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி உரிய விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் அளவில் நிலம் இருத்தல் அவசியம் ஆகும்.
கிசான் கடன் அட்டையை பயன்படுத்தி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் எந்த அடகும் இன்றி ரூ. 1 லட்சம் வரை கடன் பெறும் வசதி உள்ளது. விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பயிருக்குத் தேவையான இடுபொருட்களை வாங்கிக் கொள்வதற்கும் கிசான் கடன் அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம்.
விவசாயிகள் கடன் பெற தகுதி உள்ளவர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் கிசான் கடன் அட்டை அந்தந்த வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே விண்ணப் பங்கள் சமர்ப்பித்து கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகள் இம்முகாமில் மீண்டும் விண்ணப்பம் செய்யலாம்.
இதுவரை விண்ணப் பிக்காத விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். எனவே விவசாயிகள் இம்முகாமைப் பயன்படுத்தி கிசான் கடன் அட்டை பெற விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கவர்னர் தமிழிசை வலியுறுத்தல்
- சுய உதவிக் குழுக்களின் ஈடுபாட்டையும் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தையும் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.
புதுச்சேரி:
புதுடெல்லியில் யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள், நிர்வாகிகள் மாநாடு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தலைமையில் நடந்தது.
இதில் காணொலியில் புதுவை கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
புதுவை மாநில பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வேளாண்மை இருந்து வருகிறது. நகரமயமாதல், தொழிற்சாலை பெருக்கம், இதர சமூக பொருளாதார வர்ச்சி நடவடிக்கை களின் காரணமாக விளைநிலங்களை பாதுகாப்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.
இருப்பினும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளின் சமூக பொருளாதார நிலையை உயர்த்த நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடந்த 10 ஆண்டாக வேளாண்துறை சிறப்பான வளர்ச்சி பெற்று வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் வேளாண் உற்பத்தியை 2 மடங்காக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுவை அரசு குறிப்பிட்ட பயிர்களுக்கு உற்பத்தி மானியம் வழங்கி வருகிறது. இதனால் 11 ஆயிரத்து 761 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். வேளாண்பொருள் உற்பத்தியில் சுய உதவிக் குழுக்களின் ஈடுபாட்டையும் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தையும் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.
மத்திய அரசின் வேளாண் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் புதுவை அரசு எடுத்து வருகிறது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் புதுவைக்கு 2023-24ம் ஆண்டுக்கான இடைக்கால ஒதுக்கீடாக ரூ.9 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. புதுவை அரசின் முயற்சிக ளுக்கு உறுதுணையாக மத்திய நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.11 கோடியே 45 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த நிதி மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்ப டுத்தவும், விவசா யிகளை ஊக்கப்படுத்தவும் உதவும். மத்திய அமைச்சகத்தின் உதவியோடு புதுவையில் வேளாண் உற்பத்தி, விவசாயிகள் வாழ்வா தாரத்தை பாதுகாக்க முடியும்.
இவ்வாறு தமிழிசை பேசினார்.
- தற்போது நெற்பயிரில் கூண்டுப்புழு மற்றும் இலைசுருட்டு புழு தாக்குதல் காணப்படுகிறது.
- ஏக்கருக்கு 6 லிட்டர் அளவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தி கூண்டுப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
செய்துங்கநல்லூர்:
கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கருங்குளம் வட்டாரத்தில் நடப்பு பிசான மற்றும் நவரை கோடை பருவத்தில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது நெற்பயிரில் கூண்டுப்புழு மற்றும் இலைசுருட்டு புழு தாக்குதல் காணப்படுகிறது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் முறைகள் வருமாறு:-
தாக்கப்பட்ட இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்பதால், இலைகள் வெள்ளை நிற காகிதம் போல் காணப்படும். இலைகளின் நுனிப்பகுதியை அறுத்தால் தூர்களை சுற்றி குழாய் வடிவ கூண்டுகள் காணப்படும். குழல் வடிவ கூண்டுகள் நீரின் மீது மிதந்து கொண்டிருக்கும். கத்தரிகோல் கொண்டு சரியான கோணத்தில் வெட்டப்பட்டது போல் இலைகள் வெட்டப்பட்டிருக்கும். இதனை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஆறு லிட்டர் என்ற அளவில் மண்ணெ ண்ணெய் பயன்படுத்தி கூண்டுப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
தூர்களிலிருக்கும் புழுக்களை கீழே விழ செய்ய, இளம் பயிர்களின் குறுக்கே கயிறு போட்டு இழுத்தால் கூடுகள் நீரில் விழும். பின் வயலில் உள்ள நீரை வடிய செய்யலாம். பொருளாதார சேதநிலை அளவை பொறுத்து ஏக்கருக்கு பென்தோயேட் 50 சதவீதம் ஈசி 400 மிலி அல்லது கார்போபியூரான் 3 சதவீதம் சிஜி 10கிலோ தூவ வேண்டும்.
இலை சுருட்டுபுழு தாக்கப்பட்ட நெற்பயிரின் தோகைகள் மற்றும் இலைகளில் புழுக்கள் சுரண்டி திண்பதால் இலைகளில் வெள்ளை நிறக்கோடுகள் காணப்படும். இப்புழுக்கள் இலைகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து அவற்றினுள் இருந்து கொண்டு பச்சையத்தை சுரண்டி திண்ணும். மேலும் தோகைகளை பிரித்து பார்த்தால் பச்சை நிற கண்ணாடி போன்ற புழுக்களும் அவற்றின் கழிவுகளும் காணப்படும்.
பொதிப்பருவத்தில் இலைசுருட்டுபுழு தாக்குதல் ஏற்பட்டால் நெல் மகசூல் இழப்பு ஏற்படும். வயலில் வெள்ளை நிற தாய்ப்பூச்சிகள் ஆங்காங்கே பறந்து கொண்டு இருக்கும். வயல் வரப்புகளை சீராக்கி அதனை சுத்தாக வைத்தல் மற்றும் புல் இனக்களைகளை நீக்க வேண்டும். தழைச்சத்து உரங்களான யூரியா போன்றவற்றை தேவைக்கு அதிகமாக இடுவதை தவிர்க்க வேண்டும்.
பூச்சிகள் மீண்டும் புத்துயிர்ப்பு பெறுதலை தவிர்க்க கார்போபியுரான் அல்லது போரேட் குருணைகள் மற்றும் பைரித்ராய்டு வகை பூச்சிகொல்லிகளான சைபர்மெத்ரின் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
டிரைகோகிரம்மா முட்டை ஒட்டுண்ணியை வயலில் பயிர் நடவு செய்த 37, 44, 51-வது நாட்களில் மொத்தம் 3 முறை ஒரு எக்டருக்கு 5 சிசி (ஒரு லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள்) என்ற அளவில் காலை நேரத்தில் வயலில் கட்டவும், விளக்கு பொறிகளை வைத்து தாய்பூச்சிகளை கவர்ந்து அதனை அழிக்கலாம். மேலும் வயலில் தழை வளர்ச்சிப் பருவத்தில் பூச்சி உண்ணும் பொருளாதார சேதநிலை அளவை பொறுத்து ஒரு எக்டருக்கு கார்டேப் ஹைட்ரோகுளோரைடு 50 சத எஸ்.பி ஒரு கிலோ அல்லது அசார்டியாக்ஷடின் 0.03 சத ஒரு லிட்டர் கைத்தெளிப்பான் காலை அல்லது மாலை நேரங்களில் தெளித்து இலை சுருட்டுப் புழுக்களை கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தவிர்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி யின் 2022-23-ம் கல்வியாண்டின் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைக்கான மாணவ-மாணவிகளின் முதலாமாண்டு தொடக்க விழா கல்லூரியின் கலை யரங்கில் நடைபெற்றது.
- இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வெங்கடாசலபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி யின் 2022-23-ம் கல்வியாண்டின் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைக்கான மாணவ-மாணவிகளின் முதலாமாண்டு தொடக்க விழா கல்லூரியின் கலை யரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் வரவேற்புரையாற்றினார்.
இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வெங்கடாசலபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் நிறைவாக வேளாண் கல்லூரியின் முதல்வர் மொகமது யாசின் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அனைத்து புல மற்றும் துறை முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் முதலாமாண்டு மாணவ-மாணவிகள் 300 பேர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- உடன்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டாரத்தில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
- நோய் தாக்கப்பட்ட மரத்தை சுற்றி 4அடி தள்ளி பள்ளம் தோண்டி தனிமைப்படுத்த வேண்டும்.
உடன்குடி:
தென்னை பயிரை தாக்கும் தஞ்சாவூர் வாடல் நோய் கட்டுப்படுத்தும் முறை குறித்து திருச்செந்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் வெங்கடசுப்பிர மணியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
உடன்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டாரத்தில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் வாடல் நோயின் ஆரம்பநிலை அறிகுறிகள் வாடல், ஓலைகள் மஞ்சள் நிறமடைதல், வெளிச்சுற்று இலைகள் தொங்கி விடுதல் ஆகியவற்றுடன் தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து தண்டின் அடிப்பாகத்தின் வெடிப்புகள் வழியாக செஞ்சிவப்பு நிற சாறு கசிந்து அது மேல்நோக்கி பரவும். கசியும் பகுதியின் திசுக்கள் மென்மையாக இருக்கும். சாறு கசியும் பகுதியில் உள்ள திசுக்கள் அழுகி தண்டின் அடிப்பகுதியும் அழுகி விடும். மரப்பட்டை எளிதில் உடையக் கூடியதாக மாறி அடிக்கடி செதில்களாக உறிந்து திறந்த வெளி வெடிப்பு மற்றும் பிளவுகள் தோன்றும்.
மரத்தின் உட்பகுதி திசுக்கள் நிறமிழந்து சிதைந்து துர்நாற்றம் வீசும் தண்டின் அடிப்பகுதியில் அரைத்திட்டு காளான் வித்து தோன்றும் கடைசியில் மரம் மடிந்து விடும். இதனை கட்டுப்படுத்த நோய் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி அழித்து விடவேண்டும். பசுந்தாள் உரங்களை வளர்த்து பூக்கும் பருவத்தில் தோப்பிலேயே அவற்றை உழுது விட வேண்டும்.
நோய் தாக்கப்பட்ட மரத்தை சுற்றி 4அடி தள்ளி பள்ளம் தோண்டி மரத்தை தனிமைப்படுத்த வேண்டும். பென்சில் தடிமனுள்ள நன்கு உறிஞ்சும் தன்மையுள்ள வேரை தேர்வு செய்து சாய்வாக வெட்ட வேண்டும். மருந்தை பாலித்தீன் பையில் எடுத்து வேர் அதனுள் நனையும்படி வைக்க வேண்டும். வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் தொழில்நுட்ப வல்லுநர் முத்துக்குமார் உடனிருந்தார். மேலும் தவல்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி ஆலோசனைகளை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சித்தோடு அருகே உள்ள கருப்புராயன் கோவில் அருகில் இருந்த சுமார் 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
- விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார்.
பவானி:
ஈரோடு சம்பத் நகர் அருணாச்சலம் வீதி, சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (35). இவர் வேளாண்மைத்துறையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் காரில் நசியனூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்பொழுது திடீரென கார் சித்தோடு அருகே உள்ள கருப்புராயன் கோவில் அருகில் இருந்த சுமார் 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. கார் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார்.
சம்பவ இடத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் இடிப்பாடிகளில் சிக்கி இறந்த ஜெயக்குமார் உடலை மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோத னைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
- சிறு தானியங்களின் பயன்பாடு நகர, கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது.
உடுமலை :
உடுமலை சுற்றுப்பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையை ஆதாரமாகக்கொண்டு, மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கம்பு, தினை, சோளம், கொண்டைக்கடலை உட்பட தானியங்கள் இப்பகுதியிலேயே உற்பத்தியாகி சந்தைகளுக்கு வரத்து சீராக இருந்து வந்தது.பல்வேறு காரணங்களால் தானிய சாகுபடியும் சிறு தானிய உணவுகள் பயன்பாடும் குறைந்தது.
கடந்த சில ஆண்டுகளாக சிறு தானிய உணவுகள் குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இதனால் சிறு தானியங்களுக்கான, தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப உற்பத்தி இல்லாமல் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இது குறித்து சிறு வியாபாரிகள் கூறியதாவது:- உடல் நலனுக்கு நன்மை தரும், சிறு தானியங்களின் பயன்பாடு நகர, கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப தரமான, அதேவேளையில் விலை குறைவாக தானியங்கள் கிடைப்பதில்லை.உடுமலை பகுதியில் இவ்வகை சாகுபடிகள் வெகுவாக குறைந்து விட்டது. முன்பு அறுவடை சீசன் சமயங்களில் நேரடியாக கிராமங்களுக்கு சென்று சிறு தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வோம். தற்போது அந்நிலை இல்லை. உள்நாட்டு தேவைக்கு போதுமான அளவு தானியங்கள் கிடைப்பதில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.விவசாயிகள் கூறுகையில், சிறு தானியங்கள் சாகுபடி செய்ய ஆர்வமிருந்தாலும் தேவையான விதைகள் கிடைப்பதில்லை.
வேளாண்துறை சார்பில் சிறப்பு திட்டங்களின் கீழ் மானியத்தில் சிறு தானிய விதைகளை வழங்க வேண்டும். பருவமழைகள் கைகொடுத்தால், இவ்வகை தானியங்கள் உற்பத்தி பழைய நிலைக்கு திரும்பும் என்றனர்.
- தென்னந்தோப்புகளில் இயற்கை உரம் கட்டுவதாக வருபவர்களை தவிர்த்திடுங்கள்.
- தென்னை மரத்துக்கு பேரூட்ட உரங்கள் மட்டுமல்லாமல், நுண்நூட்ட உரங்களும் மிகவும் அவசியமாகும்.
உடுமலை :
உடுமலை பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. போதிய விலை இல்லாதது, வெள்ளை ஈ, கூன் வண்டு தாக்குதல் மற்றும் குரும்பை உதிர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், தென்னை விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஒரு சில பகுதிகளில் இயற்கை உரம் மற்றும் மருந்துகளை வேரிலே கட்டுவதன் வாயிலாக, பிரச்னைகளுக்கு முழுமையாக தீர்வு கிடைக்கும், மகசூல் அதிகரிக்கும் என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர்.
இது போன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் வேளாண் துறை, வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரை அடிப்படையில், உர மேலாண்மை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் எனவும், வேளாண் அலுவலகங்களில் இயற்கை உரங்கள், நுண்Èட்டம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது, என வேளாண்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-
தென்னந்தோப்புகளில் இயற்கை உரம் கட்டுவதாக வருபவர்களை தவிர்த்திடுங்கள். வேளாண்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலை வழங்கும் பரிந்துரைகளின் படி உரம் இடுவது நல்ல பலனைத்தரும்.தென்னை மரத்துக்கு பேரூட்ட உரங்கள் மட்டுமல்லாமல், நுண்Èட்டஉரங்களும் மிகவும் அவசியமாகும். ஒரு தென்னைக்கு ஆண்டுக்கு பேரூட்டங்களான யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் சிகப்பு 3.5 கிலோ வழங்க வேண்டும்.அதனை இரண்டாகப்பிரித்து, ஜூன், ஜூலை மற்றும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் இட வேண்டும். பேரூட்டம் வைத்து 2 மாதம் கழித்து தென்னை அரை கிலோ வீதம், ஆண்டுக்கு இரு முறை இட வேண்டும்.தொழு உரம் 50 கிலோ, வேப்பம்புண்ணாக்கு ஒரு கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி 200 கிராம் இட வேண்டும். இரண்டையும் ஒன்றாக கலந்து வைக்கக்கூடாது.
அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம், மக்கிய தொழு உரத்துடன் கலந்து மரத்தின் துார் பாகத்திலிருந்து, 3 அடி துாரத்தில் வட்டம் எடுத்து வைப்பது சிறந்த பலன் தரும். தென்னை நுண்ணுாட்டம் வைப்பதால், பொக்கைக்காய்கள் உருவாதல், குரும்பை உதிர்தல் தடுக்கப்படுகிறது. மகசூல் அதிகரிப்பதுடன் காய் எடையும் அதிகரிக்கும்.சிறப்பான பலன் தரும் தென்னை நுண்ணுாட்டத்தை வேளாண் துறை அலுவலகங்களில் வாங்கி, விவசாயிகள் பயனடையலாம்.இயற்கை உரம் கட்டுவதாக வரும், நபர்கள் குறித்து 99445 57552 என்ற எண்ணில் வேளாண்மை உதவி இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மடத்துக்குளம் :
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கும், கிணற்றுப்பாசனத்துக்கும் மக்காச்சோளம் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது.இரண்டாம் மற்றும் நான்காம் மண்டல பாசனத்துக்கு, 60 ஆயிரம் ஏக்கர் வரையிலும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் இதன் சாகுபடிக்கு தேவையான பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
மண்டல பாசனத்துக்கு பிரதானமாக மேற்கொள்ளப்படும் மக்காச்சோள சாகுபடியில் கடந்த 2018ம் ஆண்டில் இருந்து படைப்புழு தாக்குதலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.வளர்ச்சி தருணத்தில் உள்ள இப்பயிரின் நடுப்பகுதியில் தங்கும் படைப்புழுக்கள், வேகமாக செடியின் ஒட்டுமொத்த பாகங்களையும் சேதப்படுத்துகிறது. குறுகிய நாட்களில் தண்டுப்பகுதி பாதித்து செடிகள் சாய்கிறது.இலைகளையும் துளையிட்டு வளர்ச்சி முற்றிலுமாக பாதிக்கிறது.புழுக்களை கட்டுப்படுத்த 3 முறை மருந்து தெளித்தும் பலன் இருப்பதில்லை. கதிரிலும் இப்புழுக்கள் சேதம் ஏற்படுத்துகின்றன.ஏக்கருக்கு 100 கிலோ கொண்ட 30 மூட்டை வரை சராசரியாக விளைச்சல் முன்பு இருந்தது. படைப்புழு தாக்குதலுக்குப்பிறகு கடந்த சில ஆண்டுகளாக ஏக்கருக்கு 10 மூட்டை வரை விளைச்சல் குறைந்து பொருளாதார சேதம் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் இத்தாக்குதல் குறையாமல் தொடர்கிறது.
நடப்பு சீசனில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தி பொருளாதார சேதத்தை தவிர்க்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.விளைநிலங்களில், நடவுப்பணிகள் துவங்கும் முன்பே இதற்கான விழிப்புணர்வை துவங்கினால் மட்டுமே திட்டம் பலனை தரும். எனவே வட்டார வாரியாக படைப்புழு தாக்குதல் கட்டுப்பாட்டு முறைகளை வேளாண்துறையினர் துவக்க வேண்டும்.உழவு முறை, விதைத்தேர்வு, நடவு முறை, வரப்பு பயிர் பராமரிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால் இந்த சீசனிலும் மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு பாதிப்பு அளிப்பதாகவே இருக்கும்.
- 120 குடும்பங்களுக்கு மொத்தம் 360 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
- கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒரு குடும்பத்திற்கு மூன்று தென்னங் கன்றுகள் வீதம் 120 குடும்பங்களுக்கு மொத்தம் 360 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி வடுகபாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகவளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி அலுவலர் தீப்சீலா தலைமை வகித்தார்.கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா முன்னிலை வகித்தார் .விழாவில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிமேகலை அன்பரசு,ஆகியோர் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் வார்டு மெம்பர்கள், மதிமுக நகர செயலாளர் வைகோ பாலு, ஊராட்சி செயலர் கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்