என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Air Force Day"
- அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
- 91-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 91-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், விமானப்படை தினத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விமானப்படை தினத்தில் எங்கள் அனைத்து விமான வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள். சவால்களை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்கும் வலிமையான, தைரியமான மற்றும் ஆற்றல்மிக்க விமானப்படையைக் கொண்டிருப்பதில் தேசம் பெருமிதம் கொள்கிறது. வானத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமின்றி, மனிதாபிமான உதவிகளிலும் முன்னணியில் இருக்கும் நமது எழுச்சியூட்டும் ஹீரோக்களுக்கு நான் தலை வணங்குகிறேன் என பதிவிட்ட்டுள்ளார்.
இதேபோல், பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விமானப்படை தினத்தில் அனைத்து விமான வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள். இந்திய விமானப்படையின் வீரம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் இந்தியா பெருமை கொள்கிறது. அவர்களின் சிறந்த சேவை மற்றும் தியாகம் நமது வானம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் விமானப்படை தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- விமானங்கள், நெருக்கமாக சீறிப் பாய்ந்து பறந்து பார்வையாளர்களை கவர்ந்தன.
- விமான கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தாம்பரம்:
இந்திய விமானப்படை தனது 90வது ஆண்டு விழாவை நேற்று கொண்டாடியது. இதையொட்டி தாம்பரம் விமானப்படை தளத்தில் போர் விமானங்கள் பங்கேற்ற வான்வழிக் காட்சி நடத்தப்பட்டது. தாம்பரம் விமானப்படை தள அதிகாரி ஏர் கமாடோர் விபுல் சிங் சிறப்பு தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
சுகோய் 30 ரக போர் விமானம், சூ-30 ரக விமானம், போர் ஜெட் விமானம் உள்பட பல்வேறு வகையான விமானங்கள் மிகக் குறைந்த உயரத்தில் சீறி பாய்ந்து சென்று சாகசம் செய்தது பார்வையாளர்களை கவர்ந்தது.
முன்னதாக விமானப்படையின் மெக்கானிக்கல் பிரிவு பயிற்சியாளர்கள், வான்வீரர் பயிற்சிக் குழுவினர் பங்கேற்று தற்காப்பு கலை, உடல் பயிற்சி மற்றும் சைக்கிள் மீது சாகசம் போன்றவை செய்து காட்டினர். பத்து வகையான விமானங்கள் இடம் பெற்ற கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
- அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
- அதன்படி, 90-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 90-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், விமானப்படை தினத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விமானப்படை தினத்தில் துணிச்சலான விமானப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள்.
இந்திய விமானப்படை பல தசாப்தங்களாக விதிவிலக்கான திறமையை வெளிப்படுத்தி வருகிறது. அவர்கள் தேசத்தைப் பாதுகாத்துள்ளனர் மற்றும் பேரழிவுகளின் போது குறிப்பிடத்தக்க பணிகளைக் காட்டியுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்