என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » airpower
நீங்கள் தேடியது "AirPower"
ஆப்பிள் நிறுவனம் தனது வயர்லெஸ் சார்ஜிங் மேட் சாதன திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. #AirPower
ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பவர் வயர்லெஸ் சார்ஜிங் பேட் சாதனத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
"கடும் முயற்சி செய்துவிட்டோம், ஏர்பவர் திட்டத்தை ரத்து செய்கிறோம். எங்களது தரத்திற்கு இணையாக ஏர்பவர் உருவாகவில்லை என்பதால், திட்டத்தை முழுமையாக ரத்து செய்கிறோம்," என ஆப்பிள் நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் பிரிவின் மூத்த துணை தலைவர் டான் ரிகியோ தெரிவித்தார்.
"ஏர்பவர் சாதனத்தை எதிர்பார்த்து காத்திருந்த வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஏர்பவர் சாதனம் 2018 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என அறிவித்து சாதனத்தின் விளம்பர புகைப்படங்களையும் ஆப்பிள் வெளியிட்டு வந்தது. எனினும், சாதனத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏர்பவர் சாதனம் விரைவில் விற்பனைக்கு வரும் என்ற வாக்கில் தொடர்ந்து தகவல் வெளியாகி வந்தது.
ஆப்பிள் வயர்லெஸ் சார்ஜிங் பற்றிய அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து அறிவித்து வந்தது. ஐபோன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி 2017 ஆம் ஆண்டு வெளியான ஐபோன் 8 மாடலில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஆப்பிள் வாட்ச் மாடலிலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
ஆப்பிள் சாதனங்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் சாதனங்களை பல்வேறு மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. முன்னதாக பலமுறை வன்பொருள் சாதனங்கள் விஷயத்தில் ஆப்பிள் நிறுவனம் அதிர்ச்சியளிக்கும் முடிவுகளை எடுத்திருக்கிறது.
ஐபோன் 4 மாடலின் ஆண்டெனா சரியாக வேலை செய்யாமல் போனது. சமீபத்தில் சில ஆப்பிள் லேப்டாப் மாடல்களில் கீபோர்டு சரிவரி இயங்காமல் போனதற்கு ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியிருந்தது.
வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தின் மீது ஆப்பிள் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் வயர்லெஸ் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் ஆப்பிள் முயற்சி தொடரும் என ரிகியோ தெரிவித்திருக்கிறார்.
ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கும் இயர்பட் கேஸ்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பது சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. #Apple #wirelesscharging
அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் ஆப்பிள் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமைகளில் சார்ஜிங் வசதியை வழங்கும் இயர்பட் கேஸ் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஏர்பாட்ஸ் மற்றும் ஏர்பவர்கள் காப்புரிமையில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், வரைபடங்களை பார்க்கும் போது ஏர்பாட்ஸ் போன்ற வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் போன்று தெரிகிறது.
இது ஏர்பவர் சார்ஜிங் மேட் போன்று இயங்கும் என கூறப்படுகிறது. சார்ஜிங் மேட்களை கொண்டு வயர்லெஸ் முறையில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளின் படி ஏர்பாட்ஸ் கேசை ஏர்பவர் சாதனத்தின் மேல் வைத்து சார்ஜ் செய்துகொள்ளலாம்.
புகைப்படம் நன்றி: uspto
ஏர்பாட்ஸ் போன்ற வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் உருவாக்குவதற்கென பல்வேறு காப்புரிமைகளை ஆப்பிள் பெற்றிருக்கிறது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஏர்பவர் மற்றும் கூடுதல் ஏர்பாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சாதனங்களை அறிமுகம் செய்தது.
2018 ஆம் ஆண்டு இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்திருந்த நிலையில், இவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்பாட்ஸ் கடந்த ஆண்டு விற்பனைக்கு வரவில்லை என தகவல்கள் வெளியாகின.
சமீபத்தில் வெளியான தகவல்களில் தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், விரைவில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் மார்ச் 25 ஆம் தேதி விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இவ்விழாவில் அந்நிறுவனம் சந்தா முறையிலான செய்தி சேவையை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X