என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "airspace closed"

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனது வான் போக்குவரத்து எல்லையை பெல்ஜியம் மூடியதால், பல விமானங்கள் வேறு பாதைக்கு திரும்பி விடப்பட்டுள்ளன. #Belgium
    பிரசெல்ஸ்:

    ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் விமான போக்குவரத்து சர்வரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரனமாக வழக்கமான பணிகள் முடங்கின. விமானம் வருகை, புறப்பாடு குறித்த தகவல்களை பார்க்க முடியாத காரணத்தால் தனது வான் போக்குவரத்து எல்லையை தற்காலிகமாக மூடுவதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.

    இதனால், விமானங்கள் புறப்படமுடியாமல் மற்றும் தரையிறங்க முடியாத நிலை உள்ளது. மேலும், பெல்ஜியத்தின் வான் எல்லையை பயன்படுத்தும் விமானங்களும் வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 
    ×