என் மலர்
நீங்கள் தேடியது "Ajay Devgn"
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்த படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது. #RRR #Rajamouli
பாகுபலி படங்கள் மூலம் உலகத்தின் பார்வையை இந்திய சினிமாவின் பக்கம் திருப்பியவர் இயக்குனர் ராஜமவுலி. இவரது படங்களில் பிரம்மாண்டம், கதை சொல்லும் முறை, கிராபிக்ஸ் ஆகிய அம்சங்கள் எப்போதும் கவனிக்க வைப்பவை. பாகுபலிக்கு முன்பே ‘விக்ரமாகுடு’, ‘சத்ரபதி’, ‘ஈகா’, ‘மகதீரா’ எனத் தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர்.
ராஜமவுலியின் அடுத்த படத்துக்கு சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் நடிக்க ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இதன் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி என சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கான அதிகாரபூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. இதில் ராஜமவுலி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ’படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரணுடன் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, டேய்சி ஜோன்ஸ், அலியா பட் ஆகியோரும் நடிக்கிறார்கள். படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
July 30th, 2020... RRR...🔥🔥🔥
— RRR Movie (@RRRMovie) March 14, 2019
In theatres, Worldwide!!!
In Telugu, Tamil, Hindi, Malayalam and other Indian languages simultaneously.
An @ssrajamouli Film... #RRR#RRRPressMeet@tarak9999#RamCharan@aliaa08@ajaydevgn@thondankani@dvvmovies@RRRMoviepic.twitter.com/YgWpESLeVP
படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டது.படத்தின் தலைப்பு இப்போதைக்கு ‘ஆர் ஆர் ஆர்’ என்றே இருக்கும். ஒவ்வொரு மொழிக்குமான விரிவாக்கம் பின்னர் வெளியிடப்படும்’ ஆகிய அறிவிப்புகள் இன்று வெளியாகின.
படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜி பிலிமி சிட்டியில் நடந்து வருகிறது. இதற்கு முன்னர் ராம்சரணுடன் ‘மக தீரா’ படத்திலும், ஜூனியர் என்.டி.ஆருடன் ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘யமதொங்கா’ ஆகிய படங்களிலும் ராஜமவுலி பணிபுரிந்துள்ளார். ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, இயக்குநராக ராஜமவுலியின் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. #RRR #Rajamouli #JrNTR #RamCharan #AjayDevgn #Samuthirakani #AliaBhatt
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் `இந்தியன்-2' படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan #KajalAggarwal
22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் - கமல்ஹாசன் `இந்தியன்-2' படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர். முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
முதல் பாகத்தில் வயதான இந்தியன் தாத்தா வேடத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இரண்டாம் பாகத்திலும் முதியவர் வேடத்துக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதையை உருவாக்கி உள்ளார்.
இதற்காக ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி படம் எடுத்தனர். அந்த தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கி உள்ளன.

வருகிற 14-ந் தேதி சென்னையில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். பொள்ளாச்சியிலும் பெரும்பகுதி படப்பிடிப்பு நடக்கிறது. அரங்குகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. இந்தியன்-2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று கமல்ஹாசன் ஏற்கனவே கூறியுள்ளார்.
அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிரான படமாக இருக்கும் என்கின்றனர். 2.0 படத்தைபோல் இந்தியன்-2 படத்தையும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரமாண்ட படமாக தயார் செய்கின்றனர். இதில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Indian2 #KamalHaasan #KajalAggarwal
கமல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிகர் சிம்பு போலீஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan #STR
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் இந்தியன். நல்ல வரவேற்பைபெற்ற இந்த படத்தில் கமல் சுதந்திர போராட்ட வீரராகவும், லஞ்சம் வாங்கும் மகனாகவும் நடித்திருந்தார்.
நேர்மையே கொள்கையாக வைத்து இருக்கும் தந்தை தனது கொள்கைக்கு எதிராக இருக்கும் மகனையே கொல்வதுபோல படத்தின் முடிவு அமைந்து இருந்தது.
1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் அடுத்த பாகமாக இந்தியன் 2 உருவாக இருக்கிறது. கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு வெளியானது. கமல் நடிக்க ஷங்கர் இயக்குகிறார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.0 படம் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. அந்த படம் வெளியான சில நாட்களில் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக செட் அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது.

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போதைய தகவல்படி கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்றும் மேலும் துல்கர் சல்மான், சிம்பு ஆகியோரும் நடிக்க உள்ளதாக தெரிகிறது.
சிம்பு இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும், கமலுக்கு வில்லனாக வருவார் என்றும் செய்தி வருகிறது. ஷங்கர் படங்களில் கதாநாயகர்களுக்கு சமமாக வில்லன்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும். இந்தியன் முதல் பாகத்தில் தந்தை கமலுக்கு மகன் கமலே வில்லனாக அமைந்திருப்பார்.
முதல் பாகத்தின் கதையே லஞ்சத்துக்கு எதிரானதாக இருந்தது. இரண்டாம் பாகம் ஊழலுக்கு எதிரான படமாக இருக்கும் என்கிறார்கள். 21 ஆண்டுகள் கழித்து திரும்பும் சேனாபதி, நாடு முழுவதும் பரவியுள்ள ஊழலை ஒழிப்பதே கதை என்கிறார்கள்.
கமல் தனது கட்சியின் கொள்கைகளில் முக்கியமாக ஊழல் ஒழிப்பையே முன்மொழிந்து வருகிறார். கமலின் தீவிர அரசியலுக்கும் அவரது கொள்கைகளுக்கும் உதவும் வகையிலேயே கதை, வசனம் அமைந்திருக்கும் என்கிறார்கள். #Indian2 #KamalHaasan #STR
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan #STR
22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் - கமல்ஹாசன் `இந்தியன்-2' படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர். கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் லஞ்சம் வாங்கும் இளம் கமலை தாத்தாவாக வரும் கமல் விமானநிலையத்தில் புகுந்து கத்தியால் குத்துவார். பின்னர் அவர் தப்பி செல்லும் வேன் டேங்கர் லாரியில் மோதி தீப்பிடிக்கும். அந்த விபத்தில் இந்தியன் தாத்தா செத்து விட்டதாக கருதுவார்கள்.
ஆனால் அவர் வெளிநாட்டில் இருப்பதுபோல் படத்தை முடித்தனர். இரண்டாம் பாகத்தில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியன் தாத்தா இந்தியா திரும்புவது போல் கதையை ஆரம்பிக்கின்றனர்.
இந்தியன் 2 படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் இந்த படத்தில் கமல் ஜோடியாக காஜல் அகர்வாலிடமும், கமலின் இளமை தோற்றத்தில் நடிக்க துல்கர் சல்மானிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் சமீபத்தில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. படத்திற்காக கமல்ஹாசன் தயாராகி வருகிறார். #Indian2 #KamalHaasan #STR
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் `இந்தியன்-2' படத்தின் கலை பணிகள் பூஜையுடன் துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan
22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் - கமல்ஹாசன் `இந்தியன்-2' படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர். கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இயக்குநர் ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு தளங்களை சமீபத்தில் ஆய்வு செய்தார்கள்.
இந்த நிலையில், படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் இன்று துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் கலை பணிகளை டி.முத்துராஜ் கவனிக்கிறார். இவர் முன்னதாக ஷங்கர் இயக்கிய ஐ, 2.0 படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன்-2 முழு அரசியல் படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் கமல் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், இந்தியன் தாத்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கமலுக்கு வில்லனாக நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய்தேவ்கனை அணுகி இருக்கிறார்கள். படத்தில் நாயகியாக நடிக்க காஜல் அகர்வாலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் இந்தியன் 2 படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முக்கிய பிராலம் ஒருவர் இணைந்துள்ளார். #Indian2 #KamalHaasan
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. இயக்குநர் ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு தளங்களை ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த மாதத்தின் இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வும் நடந்து வருகிறது.
கமல்ஹாசன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில், இந்தியன் படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்த நெடுமுடி வேணு இந்தியன்-2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்தியன்-2 ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கதையாக உருவாகுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதிலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கும் கமல்ஹாசனுக்கு, முதல் பாகத்தை போலவே இதிலும் இரட்டை வேடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. இயக்குநர் ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு தளங்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த மாதத்தில் முடிகிறது. எனவே இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன்-2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று ஏற்கனவே அவர் கூறியுள்ளார். முதல் பாகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை எதிர்ப்பதாக கதை இருந்தது. இரண்டாம் பாகம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கதை என்கின்றனர். இதிலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியன் படத்தில் தாத்தா கதாபாத்திரம்தான் படத்தின் வேறாக இருந்தது. முதல் பாகத்தின் முடிவில் இந்தியன் தாத்தா வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று போன் செய்வது போன்று முதல் பாகத்தை முடித்து இருந்தனர்.

இரண்டாம் பாகத்தில் அவர் இந்தியா திரும்புவது போலவும், இங்குள்ள ஊழல் அரசியல்வாதிகளை வர்ம கலையால் வீழ்த்துவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனராம். முதல் பாகத்தில் வந்த இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை இரண்டாம் பாகத்தில் மேலும் வயதான தோற்றத்தில் காட்ட ஷங்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.
இளம் கமல்ஹாசன் வேடம் முதல் பாகம்போல் வில்லத்தனமாக இருக்காது என்றும், அவரும் ஊழலுக்கு எதிராக போராடுபவர் போலவே வருவார் என்றும் கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், இந்தியன் தாத்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை உக்ரைனில் படமாக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan
‘இந்தியன் 2’ படத்துக்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறது. `பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார், கமல். அதாவது, செப்டம்பர் மாத இறுதியில் `இந்தியன் 2’ படத்துக்கான படப்பிடிப்பில் இருப்பார், கமல்.
`இந்தியன் தாத்தா’ கேரக்டருக்கான காட்சிகளின் படப்பிடிப்பை போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளில் 20 நாள்கள் தொடர்ந்து நடத்தவிருக்கிறார்கள். அங்கே சென்று `இந்தியன் 2’ படப்பிடிப்புக்கான லொகேஷன்களைத் தேர்வு செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், இயக்குநர் ஷங்கர்.

கமலுக்கு வில்லனாக நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய்தேவ்கனை அணுகி இருக்கிறார்கள். நயன்தாரா, கமல்ஹாசன் தவிர பெரும்பாலான டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துவிட்டார். இப்படத்தின் மூலம், `கமலுடன் இணைந்து நடிக்கவேண்டும்‘ என்ற நயன்தாராவின் கனவும் நனவாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருப்பதால், ஆறு மாதங்களுக்கு முன்பே அட்வான்ஸ் பணத்தைக் கொடுத்து, கமலுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். #Indian2 #KamalHaasan
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக உருவாக இருக்கும் ‘இந்தியன்-2’ படக்குழுவில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நயன்தாரா இணையவிருப்பதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan
கமல் நடிப்பில் `விஸ்வரூபம்-2' வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கிறது. படத்தின் டிரைலர் மற்றும் மூன்று பாடல்களின் பாடல் வரி அடங்கிய வீடியோக்கள் ஏற்கனவே வெளியான நிலையில், அதன் சண்டைக் காட்சிகள் உருவான விதத்தை வீடியோவாக நேற்று வெளியிட்டனர். அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
அடுத்ததாக கமல், சங்கர் இயக்கத்தில் `இந்தியன்-2' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன் தாராவும் வில்லனாக இந்தி நடிகர் அஜய்தேவ்கனும் நடிக்க இருப்பதாக தகவல் வருகிறது.
நயன்தாரா தென்இந்திய கதாநாயகர்களில் கமல்ஹாசனை தவிர மற்றவர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்த அவர் இதற்கு சம்மதிப்பார் என்கிறார்கள். சமீபகாலமாக இந்தி நடிகர்களை தமிழில் முன்னணி கதாநாயகர்கள் தங்கள் படங்களில் வில்லனாக்கி வருகிறார்கள். அந்த வரிசையில் கமலும் அஜய்தேவ்கனை வில்லனாக்குகிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. 1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன்-2 உருவாக இருக்கிறது. படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. #Indian2 #KamalHaasan