என் மலர்
நீங்கள் தேடியது "Ajith Fans"
- அஜித் குமார், கார் பைக் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வமாக காட்டுபவர்.
- அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார், கார் பைக் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுபவர். அஜித்குமார் அதிவேகமாக கார் ஓட்டும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் பரவி வைரலாகும்.
அவ்வகையில், அஜித் குமார் அவரது ஆடி காரில் 234 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அண்மையில் கேரளாவின் தேக்கடிக்கு அஜித்குமார் பைக் ரைட் சென்றுள்ளார்.
- தேக்கடியில் உள்ள தனியார் ஓட்டலில் அஜித் தங்கியிருந்த வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார், கார் பைக் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுபவர். அடிக்கடி தனது நண்பர்களுடன் சேர்ந்து பைக் ட்ரிப் கிளம்பி விடுவார் அஜித்.
அண்மையில் கேரளாவின் தேக்கடிக்கு அஜித்குமார் பைக் ரைட் சென்றுள்ளார். அப்போது தேக்கடியில் உள்ள தனியார் ஓட்டலில் அஜித் தங்கியிருந்த வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.
தல அஜித்தின் எளிமையை பாருங்கள் என்று அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள தியேட்டரில் திரையிடப்பட்டது. இதனையொட்டி தியேட்டர் முன்பு அஜித் ரசிகர்கள் பேனர் மற்றும் கட் அவுட்டுகள் கட்டி இருந்தனர். இன்று திரைப்படம் ரிலீஸ் ஆனதையொட்டி ரசிகர்கள் ஏராளமானோர் தியேட்டர் முன்பு குவிந்தனர்.
காலை சுமார் 7.30 மணியளவில் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித் கட் அவுட் மீது ஏறி ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். அப்போது எதிர்பாராத வகையில் கட் அவுட் கீழே சரிந்து விழுந்தது. இதில் அஜித் ரசிகர்கள் ஏழுமலை, ஸ்ரீதர், முத்தரசன், அருள், பிரதாப், பிரபாகரன் ஆகிய 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
உடன் தியேட்டர் முன்பு கூடியிருந்த ரசிகர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்த பிரதாப், முத்தரசன், ஸ்ரீதர் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் ரசிகர்கள் திரையரங்கிற்குள் சென்றதும் படம் திரையிடப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். #Ajithfans