என் மலர்
நீங்கள் தேடியது "ak61"
- அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படம் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக புதிய தகவல் பரவி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துணிவு
1985-ம் ஆண்டு பஞ்சாப்பில் நாட்டையே உலுக்கிய பயங்கர வங்கி கொள்ளை சம்பவம் நடந்தது. 15 பேர் போலீஸ் சீருடை அணிந்து ஆயுதங்களுடன் வங்கிக்குள் நுழைந்தனர். வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஆயுதங்களை காட்டி மிரட்டி கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையர்கள் பல நாட்கள் திட்டமிட்டு நுணுக்கமான முறையில் இந்த கொள்ளையை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த வங்கி கொள்ளையின் உண்மை சம்பவம் தான் தற்போது துணிவு திரைப்படமாக தயாராகி வருவதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
- இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகன் மற்றும் நட்டி நடித்துள்ள படம் பகாசூரன்.
- இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள்.

பகாசூரன்
இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

மோகன் ஜி
இதனிடையே எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகவுள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் 'பகாசூரன்' படத்தின் இயக்குனர் மோகன் ஜி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

இயக்குனர் மோகன் ஜி வேண்டுகோள்
அதில், ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு நேரம் சொல்லுங்க போனிகபூர் சார்.. அதற்கேற்ப எனது சிவசிவாயம் முதல் பாடல் வெளியீட்டு நேரத்தை மாற்றுவேன்.. இன்று எனக்கு டபுள் தமாக்கா.. என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி ஏகே61 படத்தின் அறிவிப்பை கேட்டு கொண்டு வருகின்றனர்.
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது 'ஏ.கே.61' படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அஜித் - மஞ்சுவாரியர்
சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் லடாக் சென்று, அங்கிருந்து இமயமலை பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்லும் அவரது பைக் சாகச பயண புகைப்படங்கள் அவ்வப்போது வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அஜித்
இந்த பயணத்தில் அஜித்துடன் நடிகை மஞ்சுவாரியரும் இணைந்துள்ளார். பயணத்தில் தன்னையும் சேர்த்துக் கொண்டதற்காக அஜித்துக்கு அவர் நன்றி தெரிவித்து வலைத்தளத்தில் பதிவும் வெளியிட்டிருந்தார். இந்த பயணத்தின் போது அஜித் கார்கில் போர் நினைவிடத்துக்கு சென்று சல்யூட் அடித்து மரியாதை செய்தார். அங்கு ராணுவ வீரர்கள் அஜித்துடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

புத்தர் கோவிலில் வழிபாடு செய்த அஜித்
இந்நிலையில் அஜித் தற்போது புத்தர் கோவிலுக்கு சென்று வழிப்பட்டுள்ளார். அப்போது புத்த விகாரத்தை அஜித் சுற்றி வந்து வழிபடும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ஏகே 61.
- இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, வீரா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

அஜித்குமார்
போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் எச். வினோத்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இயக்குனர் எச். வினோத் அடுத்தாக கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏகே 61 படத்தின் பணிகள் முடிந்த பிறகு இவர் கமல் படத்தில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் இப்படத்தில் கமல் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- சில தினங்களுக்கு முன்பு மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக அஜித் சென்றிருந்தார்.
- துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் குமார் வென்ற பதக்கங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். சினிமாவை தாண்டி பைக் ரேஸ், போட்டோகிராபி, போன்றவற்றிலும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி அஜித் வருகிறார்.

அஜித்
திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபின் கிளப் சார்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி ஜூலை 24-ஆம் தேதி துவங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித் திருச்சி சென்றார். அதன்பின் அங்கு 3 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் அவர் கலந்துக் கொண்டார்.

இந்நிலையில் அஜித் கலந்து கொண்டு வெற்றிபெற்ற பட்டியல் வெளியாகியுள்ளது. அஜித்குமார், சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கம் என 4 தங்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார். பதக்கங்களை குவித்த அஜித்துக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
- எச்.வினோத் இயக்கத்தில் தற்போது அஜித் நடித்து வரும் படம் ஏகே 61.
- இதனிடையே மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் கலந்துக் கொண்டுள்ளார்.
வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அஜித் சினிமாவை தாண்டி பைக் ரேஸ், போட்டோகிராபி, போன்றவற்றிலும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபின் கிளப் சார்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி ஜூலை 24-ஆம் தேதி துவங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித் கார் மூலம் திருச்சி சென்றுள்ளார். நேற்று காலை ரைபிள் கிளப்புக்குச் சென்ற இவர் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். மேலும், 3 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளிலும் இவர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் போட்டியில் பங்கேற்ற பின்னர் ரைபிள் கிளப் மாடியில் இருந்து நடிகர் அஜித் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இதையடுத்து அவரை பார்க்க ரசிகர்கள் அந்த பகுதியில் குவிந்தனர். அவரை பார்க்க திரண்ட ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அஜித்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் கரகோஷம் எழுப்பியும் நடனம் ஆடியும் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ஏகே 61.
- இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
சினிமாவை தாண்டி பைக் ரேஸ், போட்டோகிராபி, போன்றவற்றிலும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபின் கிளப் சார்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி ஜூலை 24-ஆம் தேதி துவங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அஜித்குமார்
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித் கார் மூலம் திருச்சி சென்றுள்ளார் . இன்று காலை ரைபிள் கிளப்புக்குச் சென்ற இவர் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். மேலும், 3 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளிலும் இவர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அஜித் ரைபிள் கிளப்புக்கு சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.