என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Akhil"

    • கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான அகில் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
    • இப்படத்தை முரளி கிஷோர் இயக்கியுள்ளார்.

    நாக அர்ஜுனாவின் இரண்டாவது மகனான அகில் அகினேனி தெலுங்கு சினிமாவில் நடிகராவார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான அகில் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் இதுவரை கதாநாயகனாக நடித்த 5 திரைப்படங்களில் 4 திரைப்படங்கள் படுத்தோல்வி அடைந்தது. இதனால் சில ஆண்டுகளுக்கு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

    இவர் தற்பொழுது அவரது ஆறாவது திரைப்படமாக லெனின் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை முரளி கிஷோர் இயக்கியுள்ளார். இன்று அகிலின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.

    இந்த வீடியோவில் மிகவும் பவர்ஃபுல்லான வசங்கள் மற்றும் காட்சியமைப்பு மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது. அகிலின் கதாப்பாத்திரம் கடவுளான கிருஷ்ணனனை குறிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளது.

    இப்படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ளார். நாக வம்சி சிதாரா எண்டெர்டெயின்மண்ட் மற்றும் நாகர்ஜுனா இணைந்து தயாரித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    நடிகை சமந்தா - நாக சைதன்யா திருமணம் முடிந்து ஓராண்டு முடிந்துள்ள நிலையில், தங்களது திருமண நாளை, இருவரும் குடும்பத்துடன் வெளிநாட்டில் கொண்டாடி உள்ளனர். #Samantha #NagaChaitanya
    தென்னிந்திய சினிமாவின் புதுமண ஜோடியான சமந்தா - நாக சைதன்யாவுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்டது. இதை கொண்டாடும் வகையில் சில நாட்களுக்கு முன்பு இருவரும் வெளிநாட்டுக்கு சென்றனர். அங்கே சமந்தா கவர்ச்சியான ஆடைகளுடன் சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சர்ச்சையானது.

    ஒரு பெரிய குடும்பத்தில் மருமகளான நீங்கள் இப்படி செய்யலாமா என்று கேள்விகள் எழுந்தன. இந்த கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருமண நாளை மாமனார் நாகார்ஜுனாவின் குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார்.

    குரோஷியாவிலுள்ள டர்போனிக் நகருக்கு தங்கள் முதல் திருமண நாளைக் கொண்டாடச் சென்றிருக்கும் சமந்தா, இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை ஷேர் செய்து “என் வாழ்க்கையில் ஏற்பட்ட சிறந்தவைகளில், நான் ஒவ்வொரு நாளும் உன்னிடம் திரும்ப வந்து சேர்ந்துவிடுகிறேன்.



    என்னில் பாதிக்கு முதல் திருமண நாள் வாழ்த்துகள். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் நாக சைதன்யா” என்று குறிப்பிட்டிருக்கிறார். திருமண நாளினை குரோஷியாவில் கொண்டாட வேண்டும் என்ற முடிவினைத் தாண்டி, அந்தப் பயணத்துக்கு தனியே செல்லாமல் நாகார்ஜுனா, அமலா, அகில் ஆகிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். #Samantha #NagaChaitanya

    ×