search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Akhnoor"

    ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் இன்று நடத்திய அதிரடி தாக்குதலில் எல்லையில் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் தளம் அழிக்கப்பட்டது. #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர் மற்றும் கெமி பகுதிகளில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஹரி வாக்கர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி வீர மரணம் அடைந்தார்.



    இந்நிலையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் தளங்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பிரிவில் செயல்படும் பாகிஸ்தான் தளம் ஒன்று அழிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடி தலைகீழாக பறக்கிறது.  இது தீவிர ஆபத்தின் அடையாளம் என ராணுவம் தெரிவித்து உள்ளது. #JammuKashmir
    ஜம்மு காஷ்மீரில் உள்ள அக்னூர் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை பறிமுதல் செய்தனர். #Jammu#Akhnoor #BSF
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள அக்னூர் பகுதியில் போதை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அக்னூர் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது சுமார் 3 கிலோ எடையிலான ஹெராயின் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் என்றும், தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #Jammu#Akhnoor #BSF
    ஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடியை அகற்றியபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 படைவீரர்கள் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆக்னூர் பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு புதைத்து வைக்கப்பட்டு இருந்த கண்ணி வெடியை அகற்ற முயன்றனர். அப்போது திடீரென கண்ணி வெடி வெடித்து சிதறியது.

    இந்த விபத்தில் 2 படைவீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #JammuKashmir
    ×