என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Alangara Annai"
- வழிநெடுகிலும் மக்கள் நேர்ச்சைக் கடன்கள் செலுத்தினர்.
- கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெற்றது.
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க ஆலயங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதிகொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து வந்த திருவிழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆராதனை, ஜெபமாலை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
திருவிழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி, காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி போன்றவை நடந்தது.
காலை 8 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி, 10 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி போன்றவை நடந்தது. இதில் விஜய் வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாபு, தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர் தாமரைபாரதி உள்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
காலை 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி நடந்தது. இரு தங்கத்தேர்களும் ரத வீதிகள் வழியாக பவனி வந்த போது வழிநெடுகிலும் மக்கள் நேர்ச்சைக் கடன்கள் செலுத்தினர். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெற்றது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் மேக்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன், பங்குப் பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக் மற்றும் அருட்சகோதரிகள், அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள், பங்கு மக்கள் செய்திருந்தனர்.
- நாளை மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தோ் பவனி நடக்கிறது.
- இன்று இரவு சூசையப்பர் தங்கத்தேர்ப்பவனி நடக்கிறது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குதந்தை ஆன்றனி அல்காந்தர் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடந்தது. விழாவில் நேற்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு திருச்சப்பர பவனி நடந்தது.
9-ம் நாள் விழாவான இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, மறையுரை, இரவு 9 மணிக்கு சூசையப்பர் தங்கத்தேர்ப்பவனி, 10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நாளை(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி, காலை 6 மணிக்கு திருவிழா நிறைவுத்திருப்பலி, மறையுரை, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி, 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தோ் பவனி, 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, பகல் 12 மணிக்கு சிறப்பு திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குமக்கள், பங்குதந்தை ஆன்றனி அல்காந்தா், இணை பங்கு தந்தையா்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியா் அருள்நாதன், பங்குபேரவை துணைத்தலைவா் ஜோசப், செயலா் சுமன், பொருளாளா் தீபக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
- இன்று ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது.
- 18-ந்தேதி மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்க தேர்ப்பவனி நடக்கிறது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி, 8 மணிக்கு முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி, 6.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம், திருப்பலி, மறையுரை ஆகியவை நடைபெற்றது. விழாவில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி, 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.
விழாவில் 18-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி, காலை 6 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி, மறையுரை, 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்க தேர்ப்பவனி, 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, பகல் 12 மணிக்கு வடசேரி பங்குதந்தை புருணோ தலைமையில் திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன், பங்குப்பேரவை துணைத்தலைவர் ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக் மற்றும் பங்கு மக்கள், பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.
- 17-ந்தேதி சூசையப்பர் தேர்பவனி நடக்கிறது.
- 18-ந்தேதி மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கதேர்ப்பவனி நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 9-ந்தேதி (நாளை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து குழித்துறை மறை மாவட்ட செயலாளர் அருட்பணியாளர் ரசல்ராஜ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார்.
விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, நற்கருணை ஆசீர், திருப்பலி நடைபெறுகிறது.
விழாவில் 17-ந் தேதி காலை 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, வானவேடிக்கை, தொடர்ந்து சூசையப்பர் தேர்பவனி நடக்கிறது.
10-ம் நாள் திருவிழாவான 18-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி, காலை 6 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி, 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கதேர்ப்பவனி நடக்கிறது.
தேர்பவனியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான இறைமக்கள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, பகல் 12 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு கொடி இறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன், பங்கு பேரவை துணைத்தலைவர் ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணைச்செயலாளர் வினோ மற்றும் பங்கு மக்கள் பங்கு பேரவையினர், அருட் சகோதரிகள் செய்து வருகின்றனர்.
- 23-ம்தேதி ஜெபமாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.
- 24-ந்தேதி திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்து விழாவும் நடக்கிறது.
கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் தமிழகத்தில் புகழ் பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாகும்.
இந்த திருத்தலத்தில் திருவிழா முன்பு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெறும். இந்த மாதத்தில் மீன் தொழில் அதிகமாக இருந்து வந்ததால் தேர்பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிரமம் இருந்து வந்தது. இதன் காரணமாக செப்டம்பர் மாதம் நடைபெற்று வந்த திருவிழா பொதுமக்களின் வசதிக்காக டிசம்பர் மாதத்துக்கு மாற்றி வைக்கப்பட்டது.
இருப்பினும் பாரம்பரிய முறைப்படி நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 2 நாட்கள் மட்டும் 'தேதிப்படி திருவிழா' என நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேதிப்படி திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதனையொட்டி அன்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. 24-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்து விழாவும் நடக்கிறது. பின்னர் மாலை 5.30 மணிக்கு நற்கருணை பவனி, அதைதொடர்ந்து மறையுரை நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்தந்தை ஆன்றனி ஆல்காந்தர், பங்கு பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக் மற்றும் இணை பங்கு தந்தையர்கள், பங்கு பேரவையினர் அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
- அலங்கார மாதாவின் திருஉருவ பவனி ஆலயத்தை சுற்றி வலம் வந்தது.
- பரமக்குடி புனித அலங்கார அன்னை ஆலய பெருவிழாவின் தேர் பவனி 27-ந்தேதி நடக்கிறது.
பரமக்குடி புனித அலங்கார அன்னை ஆலய பெருவிழாவின் தேர் பவனி 27-ந் தேதி நடக்கிறது. அதையொட்டி விழாவின் கொடியேற்று விழா நடந்தது. இதற்கு வட்டார அதிபரும் பங்கு பணியாளருமான திரவியம் முன்னிலையில் மதுரை ஜெபமாலை அன்னை ஆலயம் வட்டார அனைத்து பங்கு பணியாளர் ஆனந்தம் கொடியை அர்ச்சித்து ஏற்றி வைத்தார்.
இதில் உதவி பங்கு பணியாளர் பிரான்சிஸ் பிரசாந்த், பிரிட்டோ ஜெயபால் மற்றும் இறை மக்கள் கலந்துகொண்டு அருள் பெற்றனர். அலங்கார மாதாவின் திருஉருவ பவனி ஆலயத்தை சுற்றி வலம் வந்தது. பின்னர் திருப்பலி நிறைவேற்றினர். விழா ஏற்பாடுகளை பங்கு பேரவையினர், பொறுப்பாளர்கள், பணி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
- இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
- 14-ந்தேதி அலங்கார அன்னையின் ஆடம்பர தேர் பவனி நடைபெறுகிறது.
கும்பகோணம் புனித அலங்கார அன்னை ஆலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று மாலை 6 மணிக்கு அய்யம்பேட்டை அருட்தந்தை அந்துவான் கலந்து கொண்டு கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றினார். திருப்பலியில் அருட்தந்தை பிரான்சிஸ்சேவியர் கலந்து கொண்டு, "இணைந்து பயணிக்கும் திரு அவையில் மரியன்னையின் உடனிருப்பு என்ற தலைப்பில் மறையுரை ஆற்றினார். இதில் அருட்தந்தை சிங்கராயர் கல்வி செயலாளர் கஸ்பார் பேராலய பங்கு தந்தை பிலோமின்தாஸ் உதவி பங்கு தந்தையர்கள் எட்வின் லூயிஸ், பிரேம்நாத் மற்றும் துறவியர்கள் பங்கு பேரவையினர் கலந்து கொண்டனர். விழா நாட்களில் அருட்தந்தையர்கள் தலைமையில் திருப்பலி மற்றும் மறையுரை நடக்கிறது.
வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி அடிகளார் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு அலங்கார அன்னையின் ஆடம்பர தேர் பவனி நடைபெறுகிறது. தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலய வளாகத்தை வந்தடைகிறது. 15-ந் தேதி(திங்கட்கிழமை) அதிகாலை 1 மணிக்கு திருப்பலி பேராலய உதவி பங்குத்தந்தை தலைமையிலும், காலை 6 மணிக்கு அருட்தந்தை பிரேம்நாத் தலைமையிலும் திருப்பலி நடைபெறுகிறது.
காலை 8 மணிக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயர் அந்தோணிசாமி அடிகளார் தேசிய கொடியை ஏற்றுகிறார். மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர் மற்றும் கொடியிறக்கம் மறைமாவட்ட முதன்மை குரு பிலோமின்தாஸ் தலைமையில் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை பிலோமின்தாஸ், உதவி பங்குத்தந்தையர்கள் எட்மன்ட் லூயிஸ், பிரேம் நாத் மற்றும் பங்கு பேரவையினர் அன்பிய பொறுப்பாளர்கள், செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்