என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » alaska
நீங்கள் தேடியது "Alaska"
- கடலுக்கடியில் 9.3 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது, கடலுக்கடியில் 9.3 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.
ஜூனோ:
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் நகரில் இருந்து, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் வரை ‘ராயல் பிரின்சஸ்’ என்கிற சொகுசு கப்பல் சுற்றுலா பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, ‘ராயல் பிரின்சஸ்’ சொகுசு கப்பல் கடந்த சனிக்கிழமை வான்கூவரில் இருந்து புறப்பட்டு சென்றது.
இந்த கப்பல் நேற்று முன்தினம் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான கெட்சிகன் நகரை வந்தடைந்தது. அங்கு தரையிலும், கடலிலும் தரையிறங்கும் வசதி கொண்ட சிறிய ரக கடல் விமானங்கள் மிகவும் பிரபலமானவை.
இந்த வகை விமானங்கள் மூலம், சுற்றுலா பயணிகளை அருகிலுள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. அதன்படி ‘ராயல் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் வந்த சுற்றுலா பயணிகள் 2 கடல் விமானங்களில் அழைத்து செல்லப்பட்டனர்.
இதில் ஒரு விமானத்தில் 11 சுற்றுலா பயணிகளும், மற்றொரு விமானத்தில் 5 சுற்றுலா பயணிகளும் இருந்தனர். இரு விமானங்களும் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றுவிட்டு, கெட்சிகன் நகருக்கு திரும்பி கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் நடுவானில் இருவிமானங்களும் மோதின. இந்த கோரவிபத்தில் 11 பேருடன் சென்று கொண்டிருந்த முதல் விமானத்தில் ஒருவர் உயிர் இழந்தார். மற்ற 10 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
அதே போல் மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
படுகாயம் அடைந்த 10 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். மாயமான 2 பேரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அமெரிக்காவில் 7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கிய அலாஸ்கா மாநிலத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். #Trump #StateofEmergency #AlaskaEarthquake
வாஷிங்டன்:
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள அன்கரேஜ் நகரின் அருகே ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சில மணி நேரத்துக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜென்டினா நாட்டுக்கு சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அலாஸ்கா மாநிலத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெறவும் இதற்கான செலவினங்களை தங்குதடையின்றி ஒதுக்கீடு செய்யவும் இந்த உத்தரவு துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கது. #Trump #StateofEmergency #AlaskaEarthquake

இந்த நிலநடுக்கத்தால் அம்மாநிலத்தில் உள்ள பல சாலைகள், வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜென்டினா நாட்டுக்கு சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அலாஸ்கா மாநிலத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெறவும் இதற்கான செலவினங்களை தங்குதடையின்றி ஒதுக்கீடு செய்யவும் இந்த உத்தரவு துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கது. #Trump #StateofEmergency #AlaskaEarthquake
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சில மணி நேரத்துக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. #7magnitude #Alaskaearthquake
வாஷிங்டன்:
கனடா நாட்டின் வடமேற்கில் உள்ள அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் அந்நாட்டு மக்களில் அதிகமானவர்கள் வாழும் இடமாக அறியப்படுகிறது.
இந்நிலையில், இம்மாநிலத்தின் தெற்கு பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் (இந்திய நேரப்படி) பின்னிரவு சுமார் 12 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 7 அலகுகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் உண்டான சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் சில மணி நேரத்துக்கு பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. #7magnitude #Alaskaearthquake
கனடா நாட்டின் வடமேற்கில் உள்ள அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் அந்நாட்டு மக்களில் அதிகமானவர்கள் வாழும் இடமாக அறியப்படுகிறது.
இந்நிலையில், இம்மாநிலத்தின் தெற்கு பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் (இந்திய நேரப்படி) பின்னிரவு சுமார் 12 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 7 அலகுகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
வடக்கு அலாஸ்கா பகுதிகளில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. #AlaskaEarthquake
வாஷிங்டன்:
வடக்கு அலாஸ்கா பகுதிகளில் 6.4 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்நிலநடுக்கத்தால் பல இடங்களில் வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்கள் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளிவரவில்லை.
கடந்த 1995-ல் வடக்கு அலாஸ்கா பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
அலாஸ்கா அருகே சர்வதேச வான்வெளியில் பறந்த ரஷ்ய போர் விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்து திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #USfighterjets #Russianbombers
அலாஸ்கா:
அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவின் மேற்கு கடற்கரையில் இருந்து சுமார் 200 மைல் தொலைவில் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் அமைந்துள்ளது. சர்வதேச வான்வெளியில் அமைந்துள்ள இப்பகுதியில் ரஷ்யாவுக்கு சொந்தமான இரண்டு டியூ-19 வகை போர் விமானங்கள் நேற்று பறந்து சென்றுள்ளன.
அவற்றை அமெரிக்காவின் நோராட் எப்-22 ரக போர் விமானங்கள் நடுவழியிலேயே இடைமறித்துள்ளது. அதைத்தொடர்ந்து வான் பாதுகாப்பு பகுதியை விட்டு ரஷ்ய போர் விமானங்கள் திரும்பிச் சென்றுவிட்டதாக வட அமெரிக்க விமான பாதுகாப்பு செய்திதொடர்பாளர் மேஜர் ஆன்ரூவ் ஹென்னெசி தெரிவித்துள்ளார்.
இதேபோல் கடந்த ஆண்டு மே 3-ம்தேதி ரஷ்ய விமானத்தை அமெரிக்க போர் விமானம் வழிமறித்து திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது. #USfighterjets #Russianbombers

×

X