என் மலர்
நீங்கள் தேடியது "Aleka"
எஸ்.எஸ்.ராஜமித்திரன் இயக்கத்தில் ஆரி - ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடிக்கும் அலேகா படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநருக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. #Aleka #Aari #AishwaryaDutta
தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். தற்போது கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதில் அலேகா படத்தை புதுமுக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்திரன் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக ஆரி நடிக்கிறார். போர்வைக்குள் காதலர்களின் கால்கள் மட்டும் தெரியும்படி உள்ள படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது காம படம் இல்லை, காதல் படமாக உருவாகிறது என்று படக்குழுவினர் விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில், படப்பிடிப்பில் தற்போது இயக்குனருக்கும், ஐஸ்வர்யா தத்தாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, “படப்பிடிப்புக்கு தினமும் ஐஸ்வர்யா தத்தா தாமதமாக வந்தார். அவருக்காக மற்ற நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் காத்திருக்க வேண்டி இருந்தது. சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வரும்படி ஐஸ்வர்யா தத்தாவிடம் வற்புறுத்தியும் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் இயக்குனர் பொறுமை இழந்து அவரை கண்டித்தார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது” என்று கூறினர். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Aleka #Aari #AishwaryaDutta
அலேகா படத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர் ஆரி, தன்னுடைய பிறந்த நாளை வித்தியாசமாக புதுமையான முறையில் கொண்டாடி இருக்கிறார். #Aari
சமுதாயத்திற்கு பல நல்ல செயல்களை செய்து வரும் ஆரி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். தற்போது, காதலின் உயர்வை சொல்லும் 'அலேகா' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு கோடம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அவரது பிறந்த நாளுக்காக 5 கிலோ எடையுள்ள கேக்கை தயார் செய்திருந்தனர்.
ஆனால், இயற்கை உணவுக்கு முன்னுரிமை தரும் ஆரி, கேக் என்பது இயற்கை உணவு வகையை சார்ந்தது கிடையாது என்று கூறி படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவருக்கும் இளநீர் கொடுத்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். உடன் ஐஸ்வர்யா தத்தாவும் இருந்தார்.

இப்படத்தை க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ் பி.தர்மராஜ் மற்றும் கிரியேட்டிவ் டீம்ஸ் இ.ஆர்.ஆனந்தன் தயாரிக்கிறார்கள். 'அய்யனார்' புகழ் எஸ்.எஸ்.ராஜா மித்ரன் இயக்குகிறார். இசை - சத்யா, ஒளிப்பதிவு - தில் ராஜ், படத்தொகுப்பு - கார்த்திக் ராம், பாடல்கள் - யுகபாரதி, விவேகா மற்றும் லாவரதன் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.
காதலை மையப்படுத்தி ஆரி, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு தற்போது பெயர் வைத்திருக்கிறார்கள். #Aari #AishwaryaDutta #HappyPongal2019
ஆரி - ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தை அய்யனார் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்கி வருகிறார். கடந்து போன காதல், தற்போதைய காதல் என முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பெயரிடப்படாமல் உருவாகி வந்த இப்படத்திற்கு தற்போது, ‘அலேகா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஏ.ஜி.மகேஷ் இசையமைக்க, தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப குழு மற்றும் தலைப்பு குறித்த தகவல்களை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது. ஈ.ஆர்.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் பி. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள். #Aari #AishwaryaDutta