search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alva Recipe"

    • அல்வாவின் இனிப்புச் சுவைக்கு மயங்காதவர்களே இல்லை.
    • எந்த ஸ்வீட் கடைக்குப் போனாலும் அல்வா நிச்சயம் இருக்கும்.

    நாக்கில் வழுக்கிக்கொண்டு போகும் இதன் இனிப்புச் சுவைக்கு மயங்காதவர்களே இல்லை. திருநெல்வேலி இருட்டுக்கடை தொடங்கி, மதுரைப் பக்கம் திருவிழாக்களில் கிடைக்கும் `அல்வா' வரை இதை ஆத்மார்த்தமாக நேசிக்கும் ரசிகர்களே அதிகம். எந்த ஸ்வீட் கடைக்குப் போனாலும் நிச்சயம் இது இல்லாமல் இருக்காது என்பதே அல்வாவின் பெருமைக்குச் சான்று. அல்வா என்றால் நாவில் வைத்தவுடன் கரைய வேண்டும். அந்த அளவிற்கு சுவை பிரமாதமாக இருக்க வேண்டும். அந்த வகையில் இன்று சுவையான அனானசி பாதாம் அல்வா எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    அன்னாசிப்பழம் - 250 கிராம்

    பாதாம் - 250 கிராம்

    முந்திரி - 15 கிராம்

    பால்கோவா - 150 கிராம்

    சர்க்கரை - 125 கிராம்

    நெய் - 150 கிராம்

    ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

    செய்முறை

    முதலில் அன்னாசி பழத்தின் தோலை சீவி அதை நன்றாக சுத்தமாக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

    பின்னர் அடுப்பில் ஒரு அடிகனமாக பாத்திரத்தை வைத்து அதில் கொஞ்சம் நெய் ஊற்றி அது சூடாகியதும் வெட்டிய அன்னாசி பழ துண்டுகளை சேர்த்து பழத்தில் உள்ள ஈரம் வற்றும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

    மீண்டும் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி பாதாம் பருப்பை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். இதை 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்க விடலாம். இதன் பிறகு பாதாம் பருப்பை இறக்கி அதில் உள்ள தோலை நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த பாதாமை நாம் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள அன்னாசி பழத்துடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

    பின்னர் இதனுடன் தேவையான அளவு சக்கரை மற்றும் பால்கோவா சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறி விட்டுகொண்டே இருக்க வேண்டும். இது நன்கு அல்வா பதத்திற்கு வந்ததும் ஏலக்காய் பொடியை தூவி கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் பாதாமை நறுக்கி மேலே போட்டு அலங்கரித்து எடுத்து பரிமாறலாம். சுவையான தித்திப்பான அன்னாசி, பாதாம் அல்வா ரெடி.

    • வாழைப்பழம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது.
    • வாழைப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

    வாழைப்பழம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. ஏனெனில், அதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் அவை ஆற்றலின் களஞ்சியமாகும். எனவே, நாம் தினமும் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். ஒருவேளை உங்களுக்கு வாழைப்பழம் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், வாழைப்பழம் அல்வா செய்து சாப்பிடுங்கள்.

    பொதுவாகவே, கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா போன்றவற்றை தான் வீடுகளில் செய்வார்கள். ஆனால் வாழைப்பழ அல்வாவை ருசித்தவர்கள் வெகு சிலரே. நீங்கள் இனிப்புகளை சாப்பிட விரும்புபவர்கள் என்றால் வாழைப்பழத்தில் செய்யப்படும் அல்வாவை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். வாழைப்பழம் அல்வா செய்யும் முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

    தேவையான பொருட்கள்:

    வாழைப்பழம் - 5

    சர்க்கரை - 1/4 கப்

    நெய் - 1/2 கப்

    ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்

    தண்ணீர் - 1/4 கப்

    முந்திரி, உலர் திராட்சை - தேவையான அளவு

    செய்முறை:

    வாழைப்பழம் அல்வா செய்ய முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். இப்போது அந்த துண்டுகளை மசிக்க வேண்டும் அல்லது மிக்சி ஜாரில் அரைக்க வேண்டும். அதே நேரத்தில், அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெய் சேர்த்து சூடாக்க வேண்டும். நெய் சூடானதும் அதில் முந்திரி உலர் திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    பின்னர் அதே பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை பாகு நிலைக்கு வந்தவுடன் அதனுடன் அதில் அரைத்து வைத்த வாழைப்பழத்தை சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிதளவு நெய்யும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றை நன்கு வதக்கிக் கொண்டே இருக்க வேண்டும். வாழைப்பழம் நன்கு வெந்தவுடன் நிறம் மாறும். கடைசியாக ஏலக்காய் தூள் வருத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளர வேண்டும். அவ்வளவுதான் இப்போது சுவையான வாழைப்பழ அல்வா ரெடி.

    ×