என் மலர்
நீங்கள் தேடியது "Amala Paul"
- அமலாபாலுடன் பொதுமக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் என அனைவரும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- குடும்பத்தினருக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தனது குழந்தை மற்றும் குடும்பத்துடன் நடிகை அமலாபால் சாமி தரிசனம் செய்ய வந்தார்.
கோவிலில் அமைந்துள்ள சம்பந்த விநாயகரை தரிசனம் செய்துவிட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். அமலாபாலுடன் பொதுமக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் என அனைவரும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமலாபால்.
- பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அமலாபால்
இந்நிலையில் அமலாபால் தனது கவர்ச்சி புதிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கடற்கரையில் கவர்ச்சி காட்டும் அமலாபாலின் புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Vacay mode 🔛#beach #beachbum #maldives pic.twitter.com/FuiNgQHktN
— Amala Paul ⭐️ (@Amala_ams) September 23, 2022
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
- இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

பொன்னியின் செல்வன்
இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இதையடுத்து 'பொன்னியின் செல்வன்' படத்தை நான் நிராகரித்தேன் என்று அமலாபால் கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் பேசியதாவது, "சில வருடங்களுக்கு முன் 'பொன்னியின் செல்வன்' படத்துக்காக மணிரத்னம் என்னை அழைத்தார். நான் அவர் ரசிகை என்பதால் உற்சாகமாக ஆடிஷனில் கலந்துகொண்டேன். ஆனால், அப்போது அந்தப் படம் தொடங்கப்படவில்லை. இதனால் வருத்தமும், கவலையும் அடைந்தேன்.

அமலாபால்
பின்னர் 2021-ம் ஆண்டு அதே படத்துக்காக அவர் என்னை அழைத்தபோது எனக்கு நடிக்கும் மனநிலை இல்லை. அதனால் மறுக்க வேண்டியதாகிவிட்டது. இதற்காக வருந்துகிறேனா? என்றால் இல்லை. ஏனென்றால் சில விஷயங்கள் நியாயமானவை. சரியானது. அது கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதைப் பற்றியது என்று நான் நினைக்கிறேன்" என அமலாபால் பேசியுள்ளார்.
- விவாகரத்துக்கு பின்னர் நடிகை அமலா பாலுக்கு பவ்நிந்தர்சிங் தத் என்ற நபருடன் நட்பு ஏற்பட்டது.
- சில தினங்களுக்கு முன்பு, இருவரும் தனிமையில் இருந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுவதாக பவ்நிந்தர்சிங் தத் மீது புகார் அளிக்கப்பட்டது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். அதன் பின்னர் பஞ்சாப்பை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும் பாடகருமான பவ்நிந்தர்சிங் தத் என்ற பூவி (வயது 35) அமலாபால் இடையே நட்பு ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு பழகி வந்தனர்.

அமலா பால்
புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான ஆரோவில் அடுத்த பெரிய முதலியார் சாவடியில் சொகுசு வீட்டை குத்தகைக்கு எடுத்து இருவரும் ஒன்றாக தங்கி இருந்தனர். அந்த வீட்டில் அவர்கள் தொடங்கிய திரைப்பட அலுவலகப் பணியையும், ஹெர்பல் பவுடர் வியாபாரம் செய்யும் இடமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

அமலா பால்
சில தினங்களுக்கு முன்பு நடிகை அமலாபால், பவ்நிந்தர்சிங் தத் மற்றும் அவரது உறவினர்கள் 20 லட்சம் பணமோசடி செய்ததாகவும், இருவரும் தனிமையில் இருந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும், நம்பிக்கை மோசடி செய்ததாகவும் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அமலாபால் தனது உதவியாளர் விக்னேஷ் மூலம் கடந்த மாதம் 29-ம் தேதி புகார் அளித்தார்.

அமலா பால் - பவ்நிந்தர்சிங் தத்
குற்றப்பிரிவு துணைபோலிஸ் சூப்பிரண்டு இருதயராஜ் தாயாரிப்பாளர் பவ்நிந்தர்சிங் தத், அவரது தந்தை சுந்தர்சிங், கனடா நாட்டில் வாழும் அவரது சகோதரி உள்ளிட்ட 12 பேர் மீது மோசடி உள்ளிட்ட 16 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் பெரிய முதலியார் சாவடியில் உள்ள இல்லத்தில் பவ்நிந்தர்சிங் தத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னர் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பவ்நிந்தர்சிங் தத்தை 13 நாள் சிறையில் அடைக்க நீதிபதி வரலட்சுமி உத்தரவிட்டார்.

அமலா பால் - பவ்நிந்தர்சிங் தத்
இந்நிலையில் பவ்நிந்தர்சிங் தத் சார்பில் ஜாமீன் கேட்டு நேற்று வானுர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பவ்நிந்தர்சிங் தத்துக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பவ்நிந்தர்சிங் தத் உறவினர்களை கைது செய்ய தீவிரம் காட்டி வரும் நிலையில். பவ்நிந்தர்சிங்தத் தரப்பு வக்கீல்கள் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மீதம் உள்ளவர்களுக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
- சில தினங்களுக்கு முன்பு நடிகை அமலா பால் விழுப்புரம் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
- இதில் தொடர்புடைய மேலும் 11 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை அமலாபால். இவர், தனது உதவியாளர் விக்னேஸ்வரன் மூலம் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பவ்நிந்தர்சிங் தத் என்கிற பூவி (வயது 36) என்பவர் தன்னிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாகவும், மேலும் ரூ.6 கோடி தரும்படியும், பணம் தரவில்லையெனில் நாம் இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதற்கு பவ்நிந்தர்சிங் தத்தின் உறவினர்களான புதுடெல்லியை சேர்ந்த ஜூல்பிகர், அனில்குமார், கரன்கனோஜலா, மித்லேஸ்குமார், பீகார் மாநிலத்தை சேர்ந்த வில்பேஹரா ரன்ஜித்தா, புதுச்சேரி மாநிலம் வைத்திக்குப்பத்தை சேர்ந்த பிரைன்சித்தார்த்தா இங்லே, சென்னை மேற்கு கே.கே. நகரை சேர்ந்த ஹேபாஸ்கர், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை சேர்ந்த இந்திரஜித்சிங், நீலம்கரூர், கங்கதீப்கர், ஹர்பித்சிங் ஆகிய 11 பேரும் உடந்தையாக இருந்ததாகவும், எனவே அவர்கள் 12 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்த புகாரின்பேரில் பவ்நிந்தர்சிங் தத் உள்ளிட்ட 12 பேர் மீதும் 16 பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து திரைப்பட தயாரிப்பாளரான பவ்நிந்தர்சிங் தத்தை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பவ்நிந்தர்சிங் தத்தின் உறவினர்களான ஜூல்பிகர், அனில்குமார் உள்ளிட்ட 11 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், 11 பேரும் ராஜஸ்தான், புதுடெல்லி, சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. எனவே 11 பேரையும் கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் 4 நகரங்களுக்கும் விரைந்துள்ளனர்.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை அமலா பால்.
- இவர் விழுப்புரம் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். இதையடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
அமலாபாலும், பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அமலாபால்.

அமலாபால்
இந்நிலையில் நடிகை அமலாபால் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் 11 பக்கம் கொண்ட புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், பவ்நீந்தர்சிங்தத் தன்னிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாகவும், தாங்கள் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூக வளைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டுவதாகவும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.
கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் தன்னை துன்புறுத்தியதாக அமலாபால் குற்றஞ்சாட்டி உள்ளார். பவ்நீந்தர் சிங்குடன் இணைந்து திரைப்பட நிறுவனம் தொடங்கி நடத்தி வந்ததாகவும் புகார் மனுவில் அமலாபால் குறிப்பிட்டு உள்ளார்.

அமலாபால் - பவ்நீந்தர்சிங்தத்
நடிகை அமலா பாலின் புகார் மனுவின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் பவ்நீந்தர்சிங்தத் மீது 16 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். நடிகை அமலாபால் மீது பவ்நீந்தர்சிங்தத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'கடாவர்'.
- 'கடாவர்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
மலையாள இயக்குனர் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்து தயாரித்துள்ள திரைப்படம் 'கடாவர்'. இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், திரையுலகினர் என பலரும் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் அமலாபால் பேசியது, ''கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். நான்காண்டு காலம் கடினமாக உழைத்து பல போராட்டங்களுக்கு இடையே இந்த திரைப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்ட போது பல வடிவங்களில் தடைகள் உருவானது.

இந்தப் படத்தை வெளியிட கூடாது என சிலர் மறைமுகமாக உழைத்தனர். கடவுளின் ஆசியாலும், மறைந்த என்னுடைய தந்தையாரின் ஆசீர்வாதத்தினாலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எங்களின் கடாவர் படத்தினை ஐந்து மொழிகளில் வெளியிட ஒப்புக்கொண்டது.

பல மெடிக்கல் கிரைம் திரைப்படங்கள் வெளியானாலும், தடயவியல் துறையில் இதுவரை படைப்புகள் அதிகமாக வெளியானதில்லை. காவல்துறையில் பணியாற்றும் தடயவியல் நிபுணர் வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். ரசிகர்கள் வழக்கம்போல் இந்த 'கடாவர்' திரைப்படத்திற்கும் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
- இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அதோ அந்த பறவை போல'.
- இந்த படத்தில் அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அதோ அந்த பறவை போல'. அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அமலா பால்
இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய திரில்லர் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.வினோத்.

அதோ அந்த பறவை போல போஸ்டர்
பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இந்த படம் சில காரணங்களால் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் 'அதோ அந்த பறவை போல' படம் வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது தொடர்பாக, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- இயக்குனர் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'கடாவர்'.
- 'கடாவர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
மலையாள இயக்குனர் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'கடாவர்'. இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதியுள்ள இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க ஷான் லோகேஷ் பட தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் தடயவியல் துறை நிபுணரான பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடித்துள்ளார். அமலா பாலின் இந்த புதிய கதாபாத்திரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. 'கடாவர்' படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

கடாவர் - அமலாபால்
இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் 'கடாவர்' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலை இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள திரைப்படம் கடாவர்.
- இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
மலையாள இயக்குனர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'கடாவர்'. இதில் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ், அதுல்யா ரவி, ரித்விகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதியுள்ள இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க ஷான் லோகேஷ் பட தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கடாவர் போஸ்டர்
கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் தடயவியல் துறை நிபுணரான பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடித்துள்ளார்.
இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. அமலா பாலின் இந்த புதிய கதாபாத்திரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

