search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambedkar Birthday"

    • தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
    • ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்கியொலிக்கும் குரலாய் ஒலித்தவர் அண்ணல் அம்பேத்கர்.

    தஞ்சாவூர்:

    சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாள் சமத்து நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி அனைத்து மக்களும் சமம் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    நாஞ்சிக்கோட்டை சாலை மாதவராவ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை நகர தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தஞ்சை மாநகராட்சி பாதாள சாக்கடை திட்ட பணியாளர்களுக்கு வடை பாயசத்துடன் அறுசுவை மதிய உணவு பரிமாறி அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சமத்துவ விருந்து அருந்தினர்.

    அப்போது பேசிய துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சாதி, இனம், மொழி என்கிற வரையறைகளைத் தாண்டி, ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்கியொலிக்கும் குரலாய் ஒலித்தவர் அண்ணல் அம்பேத்கர்.

    அவரின் பிறந்தநாளை எந்த வகையிலான ஒடுக்கு முறை, அநீதி, பாரபட்சத்துக்கும் எதிராக நம்மை தயார்படுத்துவது தான் அம்பேத்கருக்கு நாம் செய்யும் மரியாதை என்றார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி தன்னார்வலர்கள் சுந்தரி, மாலதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • புதுவை ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்க ங்களின் கூட்டமைப்பில் இணைந்துள்ள சமூக இயக்கங்களின் சார்பில் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அம்பேத்கர் சிலைக்கு கூட்டமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் அமாவாசை மாலை அணிவித்து மரியாதை செய்தார். 500 பேருக்கு இனிப்பு மற்றும் உணவும் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்க ங்களின் கூட்டமைப்பில் இணைந்துள்ள சமூக இயக்கங்களின் சார்பில் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த ஆதிதி ராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரோக.அருள்தாஸ் தலை மையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் கலைமணி, கவுரவத் தலைவர் திருமால், பியூச்சர் அரசு ஊழியர் கூட்டமைப்பு தலைவர் செல்வம், அம்பேத்கர் தொண்டர் படை கவுரவத் தலைவர் மணிமாறன், முதன்மைச் செயலர் பாபுராஜ் பொன்றோ, செயல் தலைவர் முத்துகிருஷ்ணன் அமைப்புச்செயலாளர் பொன்னிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தலைமை நிலையச் செயலாளர் இளவயதன், நகரத் தலைவர் செல்வபாண்டியன், நகரத் அமைப்பாளர் ஆதிகேசவன், நகரச் செயலாளர் முனியன், கொள்கை பரப்புச் செயலாளர் பரமசிவம், பொருளாளர் வேல்முருகன், தொண்டர் அணி தலைவர் மாயகிருஷ்ணன், மாணவர் கூட்டமைப்பு தலைவர் மகேந்திரவேலன், அமைப்பாளர் நாகமுத்து, ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் மாநில செயலாளர்கள் நாகராஜன், பாலச்சந்திரன் நிர்வாகச் செயலாளர் போத்திராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

    அதை தொடர்ந்து ஏம்பலம் தொகுதி கம்பளிகாரன்குப்பத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு கூட்டமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் அமாவாசை மாலை அணிவித்து மரியாதை செய்தார். 500 பேருக்கு இனிப்பு மற்றும் உணவும் வழங்கப்பட்டது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா இன்று மாலை நடக்கிறது.
    • தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கிழக்கு தொகுதி செயலாளர் கார்வண்ணன் அறிக்கை விடுத்துள்ளார்.
    • சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    சட்டமேதை என்று அழைக்கப்படும் அண்ணல் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கிண்டி கவர்னர் மாளிகையில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அங்குள்ள தர்பார் அரங்கில் பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் அம்பேத்கரின் புகழ் மற்றும் அவரது சிறப்புமிக்க செயல்பாடுகளை விளக்கி பேசி பெருமைகளை நினைவு கூர்ந்தார்.

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு அம்பேத்கரை வாழ்த்தி கோஷங்களையும் எழுப்பினார்கள்.

    இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பிலும் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சிறப்பாக நடந்தது.

    தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தி.நகரில் உள்ள கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் எல்.ஐ.சி. வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திராவிடர் கழகம் சார்பில் பெரியமேடு நேரு உள் விளையாட்டு அரங்கம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திராவிடர் கழக துணை தலைவர் கலிபூங்குன்றன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதே போன்று பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. அம்பேத்கர் நினைவு மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • மாதனாங்குப்பத்தில் சிட்டிசன் பார்ட்டி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நாளை தொடங்கி 14-ந் தேதி வரை நடக்கிறது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை சிட்டிசன் பார்ட்டியினர் செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாதனாங்குப்பத்தில் சிட்டிசன் பார்ட்டி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நாளை( 8-ந்தேதி) தொடங்கி 14-ந் தேதி வரை நடக்கிறது.

    சிட்டிசன் பார்ட்டி நிறுவன தலைவர் மா. ச. சிட்டிசன் தலைமையில் நடைபெறும் விழாவில் பொருளாளர் சிவகுமார் என்ற மைக்கேல், மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், ஆனந்தராஜ், வெங்கடேசன், சிட்டிசன் சுரேஷ், சேதுராமன், ஜோதி பிரகாஷ், பி. பீமாராவ் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை சிட்டிசன் பார்ட்டியினர் செய்து வருகிறார்கள்.

    ×