search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "America border"

    மெக்சிகோ எல்லை முழுவதையும் மூடப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.#DonaldTrump #Mexicoborder

    வாஷிங்டன்:

    மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் ஊடுருவி வருகின்றனர். மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டு ராஸ், கவுதமலா மற்றும் எல்கால் வேடர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் நுழைகின்றனர்.

    இதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக உள்ளார். மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட ஏற்பாடுகள் நடை பெறுகிறது.

    எல்லையில் 5,800 ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் 3 ஆயிரம் பேர் மெக்சிகோவில் அமெரிக்க எல்லையில் உள்ள திஜூயானா நகரில் காத்திருக்கின்றனர்.


    இவர்களில் 2,750-க்கும் மேற்பட்டவர்கள் மெக்சிகோவில் தஞ்சம் அடைய மேயர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வரும் வாரங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்வார்கள் என திஜூயானா நகர மேயர் தெரிவித்துள்ளார்.

    மெக்சிகோவில் திஜு யானா நகரில் வெளிநாட்டினர் குவிந்து வருவது அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவதை மெக்சிகோ தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மெக்சிகோ எல்லை முழுவதையும் மூடி விடுவோம். மேலும் மெக்சிகோவுடன் ஆன வர்த்தகத்தையும் நிறுத்துவோம். மெக்சிகோவில் தயாரிக்கப்படும் கார்களை அமெரிக்காவில் விற்பனை செய்ய முடியாது’’ என எச்சரிக்கை விடுத்தார். #DonaldTrump #Mexicoborder

    ×